| ஒழிபியல் - நூற்பா எண். 35 | 327 |
[வி-ரை: எஞ்சிய இயல்பாய் அடுக்கலும், விகாரமாய் அடுக்கலுமாம். இயல்பாய் அடுக்கல் - பாம்பு பாம்பு முதலியன. விகாரமாயடுக்கல் - பஃபத்து முதலியன.] இரட்டைக் கிளவியைப் பிரித்தது என்எனின், இஃது இலை யிரட்டை - பூ இரட்டை - காய் இரட்டை - விரல் இரட்டை போல ஒற்றுமைப்பட்டு நிற்றலானும், அவ்வைந்தும் (பெயர், முற்று, ஈரெச்சம், உருபு). மக்கள் இரட்டை - விலங்கிரட்டை - முட்டை இரட்டை - கை இரட்டை - கால் இரட்டை போல வேற்றுமைப்பட்டு நிற்றலானும் என்க. ‘ஆதி’ என்றதனால், பசித்து வந்த சாத்தன் சோற்றிற்குப் படபடத்தான் என ஒரு தொடர்க்கண்ணே அவ்வாறும் அடுக்குதலும் (வினையெச்சம் பெயரெச்சம், பெயர், உருபு, இரட்டைக் கிளவி, முற்று). அவற்றுள் சில குறைந்து அடுக்குதலும் முதலிய எல்லாம் கொள்க. [வி-ரை: விதியாய் அடுக்கலும், மறையாய் அடுக்கலும், விதிமறை கூடி விரவி அடுக்கலும், முற்று - எச்சம் இவற்றில் ஒன்றன்கண்ணேயே கொள்க. ‘‘நிறக்கும் என்னும் சேடத்தால் சதிர்ப்பிரந்தியயத்துக்கு மறையும் அடுக்கும் கொள்க. ‘இடிப்பாரை இல்லாத ஏமாரா மன்னன் ’ - கு. 448 ‘புரைதீரா மன்னா இளமை’ ‘மூவா முதலா உலகம்’ - சீவக. 1 எனவரும். |