பக்கம் எண் :

90இலக்கணக் கொத்து 

[வி-ரை: முக்காலத்தினும் ஒத்து இயல் பொருளை எதிர் காலத்தால் குறிப்பிடுதலே தமிழ் மரபு என்பதனைச் சிவஞான முனிவர் சூத்திரவிருத்தியுள் குறிப்பிட்டு ‘எழுத்தெனப்படுப’ என்பதனை எடுத்துக்காட்டாகத் தந்துள்ளார்.

அன எனப் பிரத்தியாகாரம் செய்தல் வடமொழி மரபு.

அகரமுதல னகர இறுவாய் என விளக்கிக் கூறுதல் தமிழ் மரபு.]

2இ.தமிழ்மொழி வல்லராய் வடமொழி விதிசில
அறிந்தவர்க் கேஇந் நூல்ஆம் என்க

சில, பல என்பன சிறுபான்மை பெரும்பான்மை என்க. ஏனைநூல் எல்லாம் இவ்விரு தன்மையே. இந்நூலும் அதுவே யாதலின், இருவகை நியாயமும் ஏகதேசமாயினும் அறிந்தார்க்கேயன்றி ஏனை இருவர்க்கும் இது பயன்படாது என்பது தேற்றேகாரத்தால் அறிக.

[வி-ரை: தமிழ் நூல்களிலெல்லாம் வடமொழி நியாயமும் சில சிவணியிருத்தலின் தமிழில் வல்லவராய் இருப்பதனோடு வடமொழியறிவும் ஓரளவாயினும் பெற்றவரே தமிழ்நூல்களை ஐயம் திரிபு அறக் கற்றுணர்தல் இயலும். தேற்றேகாரம்- ‘அறிந்தவர்க்கே’ என்பதிலுள்ள ஏகாரம்.]

3வடமொழி வழிகல வாதே தமிழைத்
தனியே நீர்தராத் தன்மை என்னெனின்
இலக்கணம் இலக்கியம் ஏது நிமித்தம்
சாத்திரம் சூத்திரம் தந்திர வுத்தி
பகுதி விகுதி பதமே பதார்த்தம்
ஆதி அந்தம் அகாரம் மகாரம்
உதாரணம் மாத்திரை உவமை உருவகம்
விகற்பம் சந்தி விதிஅலங் காரம்
காலம் இலேசம் காரகம் ஞாபகம்
விசேடணம் விசேடியம் விகாரம் அதிகாரம்
குணம்குணி ஆதியாம் சொற்கோள் அன்றியும்
 

உல் _ ஒல் _ ஒல்கு. ஒல்குதல் _ சுருங்குதல்.

ஒல்கு _ ஒற்கம் = ஒடுக்கம், சுருக்கம், தளர்ச்சி. உல் _ அல் _ அல்கு _ அல்குல் = சுருங்கிய இடை. அல்குதல் = சுருக்குதல். அல்கு _ அஃகு. அஃகுதல் = சுருங்குதல்.

உள் _ ஒள் _ ஒரு _ ஒருகு _ ஒருக்கு. ஒருக்குதல் = ஒடுக்குதல். ஒருக்கு _ எருக்கு.

உள் _ உடு _ உடுகு _ உடுக்கு = இடையிலொடுங்கிய கோடங்கி.

உடுக்கு _ உடுக்கை.

உடுகு _ இடுகு. இடுகுதல் = நெருங்குதல்.

உடுக்கு _ இடுக்கு _ இடுக்கம் = நெருக்கம்.

இடுக்கு = சிறு சந்து. இடுக்கு _ இடுக்கல்.

இடுக்குதல் = நெருக்குதல், நெருக்கிப் பிடித்தல் அல்லது ஏந்துதல். பிள்ளையை இடுப்பில் இடுக்குதல் என்னும் வழக்கைக் காண்க.

இடுக்கு _ இடுக்கி = நெருக்கிப் பிடிக்குங் கருவி.