பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்1007

 

அவன் உயிர் பெற்றமை பற்றி மகிழாது சிந்தை நொந்தமையும் நின்றனவாயின என்க.

சிந்தை நொந்தார் - இது உலகியல்புக்கு நேர்மாறாயது. இதனை அன்புநிலை இவ்வாறு கை வந்தாரே உணரத்தக்கார். "உலகியற் பகையார்" (405-410) என்றவிடத்தின் வரும் நிலைகளும், பிறவும் கருதுக. இவ்வாறு ஈண்டு "நொந்தமை"யும் முன்னர் "மறைத்தமை"யுமே பிறராற் செயற்கருஞ் செயல்களாய் அப்பூதியார் - மனைவியார் இவர்களுடைய பெருமை களாயின. இங்குச் "சிந்தை நோவாமே" மகிழ்ந்திருப்பாராயின் முன்னர் மறைத்தமை முதலியவை எல்லாம் பொருளற்ற அன்பாய்த் தாழ்ந்த உலக நிலையினையே தரும். நொந்தமை இச்சரிதத்துக்கு உறையாணி என்க. அவர்தம் வாட்டத்தை அறிந்தே அரசுகளும் அரசுகளும் அவர்கள் மீள அழையாமலே திருக்கோயிலினின்றும் விரைவில் மனையிலெய்தி அமுதுசெய்தருளும் பாங்கினிலமர்ந்தருளினர் (1820)

37

1820.

ஆங்கவர் வாட்டந் தன்னை யறிந்துசொல் லரசர் கூட
வோங்கிய மனையி லெய்தி யமுதுசெய் தருள வுற்ற
பாங்கினி லிருப்ப, முந்நூல் பயின்மணி மார்பர் தாமுந்
தாங்கிய மகிழ்ச்சி யோருந் தகுவன சமைத்துச் சார்வார்,

38

1821.

புகழ்ந்தகோ மயத்தி னீராற் பூமியைப் பொலிய நீவித்,
திகழ்ந்தவான் சுதையும் போக்கிச், சிறப்புடைத் தீப மேற்றி
நிகழ்ந்தவக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரான்
மகிழ்ந்துடன் விளக்கி யீர்வாய் வலம்பெற மரபின் வைத்தார்,

39

1822.

 திருந்திய வாச நன்னீ ரளித்திடத், திருக்கை நீவும்
 பெருந்தவர் மறையோர் தம்மைப் பிள்ளைக ளுடனே நோக்கி,
"யரும்புதல் வர்களு நீரு மமுதுசெய் வீரிங்" கென்ன,
 விரும்பிய வுள்ளத் தோடு மேலவ ரேவல் செய்வார்,

40

1823.

மைந்தரு மறையோர் தாமு மருங்கிருந் தமுது செய்யச்
சிந்தைமிக் கில்ல மாதர் திருவமு தெடுத்து நல்கக்
கொந்தவிழ் கொன்றை வேணிக் கூததனா ரடியா ரோடும்
அந்தமி ழாளி யாரங் கமுதுசெய் தருளி னாரே.

41

1820. (இ-ள்.) அங்கு...அறிந்து-அப்படி அவர்களது மனவாட்டத்தினை அறிந்து, (அதனால்); சொல்லரசர்....இருப்ப-திருநாவுக்கரசர் அவர்களுடனே கூட அவர்களது ஓங்கிய மனையின் கண்ணே சேர்ந்து, அமுது செய்தருளப் பொருந்திய பாங்கினில் இருக்க; முந்நூல்...சார்வார் - முப்புரிநூல் அணிந்த மார்பினையுடைய அப்பூதியாரும் மேற்கொண்ட பெருமகிழ்ச்சியோடு, அதற்குச் செய்யத்தக்கவற்றை யெல்லாம் அமைத்துச் சார்வாராகி,

38

1821. (இ-ள்.) புகழ்ந்த....நீவி - புகழப்பட்ட கோமயங் கலந்த நீரினாலே நிலத்தை விளங்க மெழுகி; திகழ்ந்தவான் சுதையும் போக்கி - விளங்கும் வெள்ளிய சுண்ணச் சாந்தையும் கோலம்பெற இட்டு; சிறப்புடைத் தீபம் ஏற்றி - சிறப்பாகிய திருவிளக்கினையும் ஏற்றி; நிகழ்ந்த...வைத்தார் - சரித நிகழ்விற்குக் கரு கருவியாக இருந்த அந்த வாழையின் நீண்ட குருத்தை விரித்து அதை நீரினாலே மகிழ்ச்சியுடனே விளக்கி, அரிந்த பக்கம் வலத்தில் இருக்கும்படி அதை முறைமையாக இட்டனராகி,

38