நெறியே யன்றிப் புறத் தூய்மைக்குரிய ஒழுக்கமுமாம். இல்லாவிடில் விரல் நுனிகளிலும் கையிலும் பற்றிய தூய்மையற்ற பொருள்கள் உணவுடன் கலந்து விடத்தன்மை விளைத்து நோய்க்குக் காரணமாகும். இவ்வொழுக்கந்தானும் இந்நாளில் கைவிடப் பட்டு மாக்கள் விலங்குத் தன்மையடைந்து வருதல் வகுந்தத் தக்கது. திருந்திய வாச நல் நீர் - அடைமொழிகள், கைந் நீவுதற்கும் உண்ணுதற்கும் உதவும் நீருக்கும் அமைக்க வேண்டிய அமைதிகள் குறித்தன. திருந்திய - ஊற்று - கிணறு - ஆறு - குளம் முதலிய நீர்நிலைகளினின்றும் எடுக்கும் நீர், மண்ணிலும் காற்றிலும் படுதலாலும், ஏனைப் பிராணிகளின் தொடக்காலும், பிறவாற்றாலும் நுண்ணிய விடப் பொருள்களுடன் பொருந்தும். அதனை மணல் - துணி முதலியவற்றுட் செலுத்தி அசுத்தங்களைப் போக்குதலும், பின்னர் வெயிலில் வைத்தாற்றுதலும், இவ்வாறு பிறவும் செய்து திருத்தல் வேண்டுமென்பது நமது முந்தையோர் கண்ட முறை. வெயிலின் வைத்தலால் நீரில் கண்காணாமல் உள்ள விடப்பூச்சிகள் ஒழிந்துபடும் என்பது உண்மை. இந்நாளில் நீரைக் காய்ச்சி ஆற வைத்தலும், மருந்துப் பண்டம் பல பெய்தலும், பிறவும் செய்தல் காண்க. இந்நாள் முறை முன்னாள் முறை போல நாட்டு நடப்புக்கேற்றவாறு எளிதின் அமையாது பொருட் செலவும் பயப்பதும் கண்டுகொள்க. வாசம் - நீரினுட் பெய்யும் விலா மிச்சை முதலிய வாசனை வேர்களும் மலர்களும் பசுங்கற்பூரம் குங்குமப்பூ முதலியனவும் ஆம். இவை வெறும் மணத்துக்காக அன்றிக் குணத்துக்காகவும் உதவுவன. நல்நீர் நீரின் நன்மையாவது தடிப்பில்லாது இலகுவான நீர் - உருசியுள்ள நீர் - சுத்த நிலத்தில் ஊறும் நீர் - மேனிலத்தும் பக்கங்களிலும் உள்ள அசுத்தங்களால் கெடாதவாறு அமைந்த நீர் என்றிவை முதலாயின. "வெயிலின்வைத் தாற்றிய தண்ணீர் நாற்றமிட் டிருப்ப" (திருவிடை - மும் - கோவை.16). மறையோர் தம்மைப் பிள்ளைகளுடனே நோக்கி - கருணை நோக்க மளித்து என்க. அனைவரையும் அருட்கண்ணாற பார்த்துச் சிவனருள் பெருகச் சிவதீக்கை செய்து மாகேசுரர்களாக்கி என்பதும் குறிப்பு. நோக்குதல் - அழுந்திய பார்வை. அரும் புதல்வர்களும் நீரும் இங்கு அமுது செய்வீர் - அருமையாவது பெற்றோர்க் கேற்குமாறு சிவனடிமைப் பண்பின் அமைந்த சிறப்பு; பெறலரும் - (1811). சிறப்பு நோக்கி நீரும் என்பதனைப் பின் வைத்தார். அருமை நோக்கி புதல்வர் முன் வைக்கப்பட்னர் என்பதுமாம். வரும் பாட்டில் "மைந்தரு மறையோர்தாமும்" (1823) என்பதும் காண்க. இங்கு - இவ்விடத்து - எம்முடனே. இது அப்பூதியாருக் குரைத்தது. விரும்பிய உள்ளத்தோடுமேலவர் ஏவல்செய்வார் - ஏவலினால் விருப்பும் நிகழ்ந்தது என்பதாம். அவ்வாறு அவர் ஏவியிராவிடின் அரசுகளுடன் அமர்ந்து திருவமுது செய்யும் தகுதி தமக்கில்லை என்றும், அவர் உண்டபின் குருவின் பரிகல சேடமாகப் பின் உண்பதே தகுதி என்றும்கொண்டது அப்பூதியார் திருவுள்ளம் என்பதை அரசுகள் அறிந்தருளி இவ்வாறு ஏவியருளினர் என்பது ஈண்டுக் கருதக் கிடப்பதாம். மேலவர் ஏவல் என்ற குறிப்புமது. மாகேசுவரர்கள் இயல்பு பற்றி 851-ல் (II பக்கம் - 1090) உரைத்தவை பார்க்க. மேலவர் - மேன்மையவாது திருத்தொண்டின் உறைப்பு. உத்தராபதியார் சிறுத்தொண்டரை உடனுண்ண ஏவியதும் காண்க. 40 1823. (வி-ரை.) மருங்கு - தம்மருகு. தம்முடனே. மருங்கிருந்து அமுது செய்ய உடனிருந்து அமுது செய்ய. இவ்விடத்து அந்தணர் வேளாளர் முதலிய சாதி குலங்களின் நிலைபற்றியும், உடனுண்ணல் முதலிய சமூக ஒழுக்க வழக்க நிலைபற்றியும் பலவாறும் ஆராய்ச்சி செய்வார் பலர். இங்கு நிகழ்ந்தது சமய |