பக்கம் எண் :


1018திருத்தொண்டர் புராணம்

 

நிழல் தருவனவாய் அமைக்கப்படுதல் வேண்டும். அப்பூதி நாயனார் இவ்வாறு திருநாவுக்கரசர் பெயரால் அமைத்த தண்ணீர்ப் பந்தல் ஏனை உலகவர் பார்த்துப் பின்பற்றத் தக்க இலக்கியமா யமைந்தது. (1787)

6. பெரியவர்களைத் தியானப்பொருளாய்க் கொண்டு பல நாள் வழிபட்டு அழைத்து வந்தால், ஒருநாள் அவர்கள் அத்தவங் கூட்டிவைக்கத் தாமாக வந்து வெளிப்பட்டுக் கூடுவர் என்பது அப்பூதியாரது மனையின் முன் கடையில் அப்பர் சுவாமிகள் வந்து தாமாகச் சேர்ந்ததினின்று நன்கு அறியக்கிடக்கும் உண்மை. சிவபெருமான் வெளிப்பட்ட ருளுவது மிவ்வாறேயாம். (1787- 1791)

7. வெளியிற் சென்றுவந்த உடலின் அயர்ச்சி தீருமுன், "அடியார் ஒருவர் மனைக்கடையில் வந்தனர்" எனக் கேட்டலும் உடனே வெளிவந்து அடியாரை வரவேற்றல் சிவனிடத்திக் கொண்ட அன்பின் திறம். (1791)

8. அடியவர் தம்மை வணங்கும் முன் தாம் வணங்குதல் அன்பின் தன்மை. அடியார்கள் தலைக் கூடியபோது இன்னார் தாம் முன் வணங்கினர் என்றறியா முறைமையில் வணங்குதல் முறை. (1792)

9. சிவனடியாரை "வேறொருவர்" என்று கூறுதல் அடிமைத் திறத்தை நிந்தித்தலாகும். அது சிவ நிந்தனை - சைவநிந்தனை - என்றதன்பாற்படும். அதனை யாரேனும் தம் முன் செய்யக் கேட்கில் சிவனிடம் அன்புடையோர் பொறுக்கலாற்றாது சினங்கொள்வார்; அது செய்தோரைத் தம்மால் இயன்றவாறு தண்டமும் இயற்றிடுவர். சத்தி நாயனார் சிவ நிந்தனை செய்தோரது நாவை வலித்தரிந்து தொண்டு செய்தனர். தம்மால் அவ்வாறு ஒன்றும் செய்ய வியலாத போது "சிவ சிவ" என்று காது பொத்திக்கொண்டு அவ்விடம் விட்டு நீங்கிவிட வேண்டும் என்பதும் விதி. சிவ நிந்தனை பொறாது வரும் சினம் விலக்குதற்குரிய மனக்குற்றமாகாது. அறுவகைக் குற்றத்தினுட்பட்ட ஏனைச் சினம், பாவம் பயக்கும். இந்தச் சினம் சிவபுண்ணயிமாய்ப் படிப்படி முத்திக் கேதுவாகும். அப்பூதியார் "களவு பொய் கோப முதலிய குற்றங் காய்ந்தார்" (1784) என்றதும், "கேளா நிலையழிந்த சிந்தையராய்" (1795) என்றதும் ஒப்பிடற்பாலன. "மறைகணிந்தனை சைவ நிந்தனை பொறா மனமும் என்ற வரங்கேட்டுப் பெற்றனர் சக்தி பெருமான் உடலோடு ஒழிந்து விடக்கூடிய அளவில் பொருத்தமுடைய சாதரணமான ஒரு நட்பினரையோ அன்றி", மனைவி மக்கள் முதலிய சுற்றத்தாரையோ ஒருவன் நிந்தை செய்தாற் பொறாது சினந்து பகை மூண்டு தகாத பலவும் செய்தல் உலக வழக்கில் காண்கிறோம். ஆனால் உயிருடன் பொருந்தி வரும் சிவனன்பின் திறத்தில் நிந்தை செய்யக் கேட்டால் வாளா விருப்பா. அது மட்டுமோ அந் நிந்தை செய்தாருடன் உறவும் கொண்டாடுவர்! இது என்ன கொடுமை! திருநாவுக்கரசரது பெயரை "வேறொரு பேர்" என்னக் கேட்டபோது அப்பூதியார் தமது சிந்தை நிலையழிந்தார். எதிர்மொழிந்தவர் அடியார் திருவேடத்துடனில்லா திருப்பின் இயன்ற தண்டமுஞ் செய்திருப்பர் இவ்வாறு திருசிந்தை நிலையிழியினும் அடியவரிடம் தாம் நடக்கும் முறையில் திரியாது (1795 - 1797) "நன்றருளிச் செய்திலீர்!" என்பது முதலாக அமைந்து நின்றநேர்மை பெரியோராகிய அடியார்களது சிறப்பு.

10. தன்மைத், தத்தம் பெருமை பற்றித் தாமே அறிவித்துக் கொள்வது கீழோர் தன்மை; தமது சிறுமைபற்றி அறிவித்துக் கொள்வது அறிவுடைப் பெரியோர் தன்மை. (1798)

11. பெருமகிழ்ச்சி மூண்டபோது முன் செய்யத் தகுவனவாகிய வழிபாட்டு முறைகளும் மறந்து போய்ப் பித்தர்போல நிகழும் தன்மை வரும். (1801)