குமுத...போதில் - இதனால் பகல் கழியப் பின் இரவுக் காலம் போந்தமையும் கூறினார். குமுதம் ஆம்பல், மதிக்கதிர்போத ஆம்பல் மலர்கின்ற தன்மை குறிப்பிடப்பட்டது. குமுத வாவி - நீலநக்கனாரது திருமனை என்றும், மதிக்கதிர் - ஆளுடைய பிள்ளையாரது திருவருள் என்றும் இங்குக் குறிப்புக்காணும் விசேடவுரையாசிரியருமுண்டு. இமய மங்கை - இமயமலை யரசன் மகளார். பார்வதி என்பது இக்காரணத்தாற் போந்த பெயர். இரவும் - அன்று பகலிற் றங்கியதேயன்றி இரவிலும் தங்க என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. தங்கிட வேண்டுவ சமைத்தார் - தங்கிட - தங்குவதற்கு. வேண்டுவ சமைத்தலாவது இடத்தைப் பள்ளியறையாதற்கு உரியபடி அமைத்தல் திருவமுது முதலியனவும் என்பாருமுண்டு. "என் சிந்தைப், பாழறை யுனக்குப் பள்ளியறையாக்கிச், சிந்தைத் தாமரைச் செழுமலாப் பூந்தவி, செந்தை நீயிருக்க விட்டனன்...இமையக், கொழுந்தையு முடனே கொண்டிங், கெழுந்தரு ளத்தகு மெம்பெருமானே" (திருக்கழுமல மும்மணிக்கோவை - 4) என்று பட்டினத்தார் திருகழுமலத்து இமய மங்கை நாயகர்க்கு விண்ணப்பித்த அமைப்பெல்லாம் இங்கு வைத்துக் காண்க. கருங்கடல் - என்பதும் பாடம். 28 1856. | சீல மெய்த்திருத் தொண்டரோ டமுதுசெய் தருளி ஞால மிக்கிட நாயகி யுடனம்பர் நண்ணுங் கால முற்பெற வழுதவ ரழைத்திடக் கடிது நீல நக்கனார் வந்தடி பணிந்துமுன் னின்றார்; |
29 1857. | நின்ற வன்பரை "நீலகண் டப்பெரும் பாணர்க் கின்று தங்கவோ ரிடங்கொடுத் தருளுவீ" ரென்ன நன்று மின்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச் சென்று மற்றவர்க் கிடங்கொடுத் தனர்திரு மறையோர்; |
30 1858. | ஆங்கு வேதியி லறாதசெந் தீவலஞ் சுழிவுற் றோங்கி முன்னையி லோருபடித் தன்றியே யொளிரத், தாங்கு நூலவா மகிழ்வுறச், சகோடயாழ்த் தலைவர் பாங்கு பாணியா ருடனரு ளாற்பள்ளி கொண்டார். |
31 1856. (இ-ள்.) சீலம்...செய்தருளி - சீலமுடைய மெய்த் தொண்டர்களுடனே திருவமுது செய்தருளியபின்; ஞாலம்...அழைத்திட - உலகம் ஓங்கும் பொருட்டுப் பெரியநாயகி யமமையாருடன் தோணியப்பர் வெளிப்பட்டருளும் காலம் பெற முன் அழுதவராகிய ஆளுடைய பிள்ளையார் அழைக்க; கடிது...நின்றார் - திருநீலநக்கனார் விரைவில் வந்து அடிவணங்கித் திருமுன்பு நின்றனர்; 29 1857. (இ-ள்.) நின்ற...என்ன - அவ்வாறு வந்து முன்நின்ற அன்பராகிய திருநீலநக்கரைப் பார்த்துத், "திருநீலகண்டயாழ்ப்பாணருக்கு இன்று இங்குத் தங்குதற்குத் தக்கதாகிய ஓர் இடம் கொடுத்தருள்வீராக" என்று பிள்ளையார் கூற; நன்றும் இன்புற்று - பெரிதும் மகிழ்ந்து; சென்று - அதனை ஏற்றுச் சென்று; மற்றவர்க்கு - மற்று அத்திருநீலகண்டப் பாணனாருக்கு; நடுமனை வேதியின் பாங்கர் - நடுமனையில் வேதிகையின் பக்கத்திலே; இடங்கொடுத்தனர் திருமறையோர் - திருமறையவர் இடம் அமைத்துக் கொடுத்தனர்; 30 |