மருவு....வீழ்ந்தது: மருவு - அவர் வந்து சேர்ந்த. மருவு - பெரும் என்றதனால் அவரால் ஆக்கம் படைத்திருந்த என்பது குறிப்பு. 1346 பார்க்க. வீழ்ந்தது - தமது பிற்சரிதக் குறிப்புப்பெற அவர்களது வாக்கினின்றுவரும் அவச்சொல். விரைவு பற்றி இறந்தகாலத்தாற் கூறினார்கள். "எங்களை வாதினில் வெல்ல" (திருஞான - புரா - 685) முதலியவை பார்க்க. 80 1346. (வி-ரை.) மலையும் - மாறுபடும் - தம் சமயத்தோடு முரண்பட்டு வாதிக்கும். பல் சமயம் - புத்தசமயம் முதலியன. வென்று - 1305 பார்க்க. வென்று - நிலையும் பெற்ற - வெற்றி பெற்றதுடன் அந்த வெற்றி மாறாது நிலைக்கவும் பெற்ற. இனி அழிந்தது - கால வழுவமைதி. உறுதிபற்றி எதிர்காலத்தை இறந்த காலத்தாற் கூறினார், "வீழ்ந்தது" என முன்பாட்டிற் கூறியதுபோல. வெற்றி பெற்றதுடன் நிலையும் பெற்ற நம் சமயம் இனி வீழ்ச்சி பெறுவதுடன் அழிவும் பெறும்; இது உறுதி என்றனர். இதுவும் பிற்சரிதக் குறிப்புப்படவரும் அவச் சொல். அழிவுறுவதனை - 1410 - 1411-ல் உரைப்பார். அழுங்குதல் - மனம் வருந்தி அழிதல். கொலையும்....புரிவோர் - இலம் - இது அமணர்கள் சொல்வது; அறவுரைகளாகிய, கொலை - பொய்ம்மை - முதலிய செய்தலில்லாமை. இலம் - நாம் அவற்றைச் செய்யோம், அவை எம்மிடத்தில் இல்லை, என்பது சொல்லின் அளவு என்று - என்று வெளியில் சாற்றி. வாய்ப்பறையறைந்து. கொடுமையே புரிவோர் - கொடுமைகளாகிய கொலைச் செயலையும் பொய்ம்மைச் சொல்லையுமே பரிவோர். "கொல்லாமை மறைந்துறையும்....(1302), "புன்மையே புரி" (1344) என்ற விடங்களில் உரைத்தவை பார்க்க. ஏகாரம் - தேற்றம். பிரிநிலையுமாம். "புன்மையே புரி" என்றது போல. தலையும் பீலியும் தாழ வந்து - மயிர் பறித்த தலையும் மயிற்பீலியும் சமணர்க்குரிய சிறப்படையாளங்களாதலின் அவை தாழ என்றார். தாழ - தொக்கு விளங்க என்ற பொருளில் வந்தது. தாழ்வடைய என்ற குறிப்பும் காண்க. தலைதாழ்தல் - அவமான மடைதற்குறி. பீலி தாழ்தல் - பீலியை அடையாளமாகவுடைய சமயம் அழிவுறுதல. ஒரு சிறை - சிறை - பக்கம். சிறைப்பட்டார் போல என்றும், சிறைப்படுவார் போல என்றும் கொள்ளநின்ற குறிப்பும் காண்க. இலவென்று - என்பதும் பாடம். 81 1347. | இவ்வ கைப்பல வமணர்க டுயருட னீண்டி "மெய்வ கைத்திற மறிந்திடின் வேந்தனும் வெகுண்டு சைவ னாகிநம் விருத்தியுந் தவிர்க்குமற் றினிநாஞ் செய்வ தென்?"னென வஞ்சனை தெரிந்துசித் திரிப்பார். |
82 1348. | "தவ்வை சைவத்து நிற்றலிற் றருமசே னருந்தாம் பொய்வ குத்ததோர் சூலைதீர்ந் திலதெனப் போயிங் கெவ்வ மாகவங் கெய்திநஞ் சமயலங் கனமுந் தெய்வ நிந்தையுஞ் செய்தன" ரெனச்சொலத் தெளிந்தார். |
83 1347.(இ-ள்.) வெளிப்படை. இவ்வகையில் பல சமணர்களும் துன்பத்தோடு கூடி "உண்மைத் திறத்தினை வேந்தன் தெரிந்தால் வெகுண்டு, சைவனாகி, நமது |