பக்கம் எண் :


174திருத்தொண்டர் புராணம்

 

திருப்பாதிரிப்புலியூர்

திருச்சிற்றம்பலம்

திரு. வி

ஈன்றாளூ மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்
ழன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
வேன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களூக்கே.


பற்றாய் நினைத்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றுஞ்
சுற்றா யலைகடன் ழுடினுங் கண்டேன் புகனமக்கு
உற்றா னுமையவட் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி் னான்றன மொய்கழலே.


விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தா னினிநமக்கிங்
கடையா வவல மருவினை சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்
உடையா னடியா ரடியடி யோங்கட் கரியதுண்டே.


வைத்த பொருணமக் காகுமென் றெண்ணி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கி னல்லான்
மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்
அத்த னருள்பெற லாமோ வறிவிலாப் பேதை நெஞ்சே.


கருவாய்க் கடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளாற்
றிருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.


புழவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மளத்தே
வழவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணே


மண்பா தலம்புக்கு மால்கடன் ழூடிமற் றேழலகும்
விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினு மஞ்சனெஞ்சே!
திண்பா னமக்கொன்று கண்டோந் திருப்பா திரிப்புலியூர்ச்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.


திருந்தா வமணர்தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா வரக்க னுடனெரித் தாய்பா திரிப்புலியூர்
இருந்தா யடியே னினிப்பிற வாமைவந் தேன்றுகொள்ளே,

திரு