சேட்டைகள் விளையா; அவர் காமனை வேவ நோக்கினாராகலின். இப்பாட்டுக் கனவு நிலையுரைக்கும் அகப்பொருளை உட்கொண்டது. - (9) ஓங்காரம் என்னும் பிரணவப் பொருளாயுள்ள ஒருவன். வென்ற ..... உரியீர் - பெரியோரால் வெல்லப் பட்ட ஐம்புல வின்பங்களையும் விலக்கும் உரிமையுடைய அன்பர். VI திருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| நம்பனே யெங்கள் கோவே நாதனே யாதி மூர்த்தி பங்கனே பரம யோகி யென்றென்றே பரவி நாளுஞ் செம்பொனே பவளக் குன்றே திகழ்மலர்ப் பாதங் காண்பா னன்பனே யலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே. |
1 திருச்சிற்றம்பலம் வீரட்டனீரே! உமது திருவடி காண்பதற்கு மிக வருந்திப் போயினேன்; எனக்கு அருளும் வகையால் அருள்புரிய வேண்டும் என்பது இப்பதிகக்கருத்து. -(1) காண்பான் - காணும் பொருட்டு. அலந்து போனேன் - மிகவும் துன்பப்பட்டேன். -(2) பொய் - மெய் என்பன தன்மை குறித்தன. போர்வை - இங்கு உடம்பு குறித்தது. மெய்யனாய் - பொய்யாகியும் மெய் என்ற பெயர் பெற்ற உடம்பன்றி, உண்மையில் மெய்யினை உடையனாக. ஐவர் - ஐம்பொறி. வேண்டிற்று - உயர் கதிக்காக நூல்கள் விதித்தபடி நான் வேண்டுவதனை. -(3) நீதி - வேதசிவாகமங்களுள் விதித்த நீதி. நியதி. -(4) தெருளுமா - அறியும் வழி. ஆறு கடைக்குறைந்து ஆ என நின்றது. தீவினையாலாகிய சுற்றப்படு பொருள்கள். அருளும் ஆறு - எனக் கேற்றவாறு அருளும் வழி. -(5) அஞ்சு - ஆக்கை - ஐம்பூதங்களின் சேர்க்கையாலாகிய உடம்பு. அதனில் வாழும் அஞ்சு - ஐம்பொறிகள். அடர்க்கப்படுதல் - "புலனாலடர்ப் புண்ட வெறுந்தமியேன்" (திருவாசகம்). புலன் வழி ஈர்க்கப்பட்டு வீழ்தல். அஞ்சினால் - பயந்தால். வினை. அஞ்சினாற் பொலிந்த - ஆனைந்தினால் ஆட்டப்பட்ட. ஐந்தாவது பாட்டு அஞ்சினால் எனச் சொற்பின் வருநிலையின் வைத்தார். -(6) உறுகயிறூசல் போல ஒன்றுவிட்டு ஒன்றுபற்றி என்றது நிலையில்லாது இங்கு மங்கும் அலைதலினையும், மறுகயிறூசல்போலப் வந்து வந்து உலவும் என்றது முன்னும் பின்னும் போதலையும், பெறுகயிறூசல்போலப் பிறைபுல்குசடை என்றது கயிறு ஊசலைப்பெற்ற தோற்றம்போலச் சடை, பிறையினைப் பெற்றதென்ற மெய்யுவமத்தையும், பாதத்து அறுகயிறூசலானேன் என்றது ஊசல் கயிறற்றால் தரையிற் சேர்வதன்றி வேறு துணையில்லாமைபோல் எனக்கு உன்பாதமன்றிவேறு தாங்கும் துணையில்லை என்ற உருவத்தினையும் குறித்தன. "ஊசல் கயிறற்றாற் றாய்தரையே யாந்துணையான்" என்று "ஆன்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தை யணையு" மென்ற (8-ம் சூத்) நான்காமதிகரணத்து ஆசிரியர் ஏதுக் காட்டியவாறு. இங்கு ஊசல் கயிற்றுதலாவது - உயிரை வைத்து ஆட்டிக் கொண்டிருந்த பிரபஞ்சத்தொடக்கு விடுபடுதல். ஊசலானேன் - ஆனேன் - ஒத்தேன்; ஆக்கம் உவமை குறித்து நின்றது. "ஆள்வாரிலி மாடாவேனோ?" (திருவா) என்புழிப்போல. -(7) காம வெந்நோய் - பிரபஞ்ச வாழ்வில் இச்சை. இப்பாட்டு உலகர் பொருட்டு இரங்கிக் கூறிக் காட்டியது. உணர்வு எனும் இமை திறந்து - புறக்கண் இமை விண்டு விழிப்பதுபோல, அறிவு என்னும் அகக்கண் உணர்வு என்னும் இமை திறந்தால் விழிக்கும். வெளிறு - அறியாமை. குற்றம் என்பர் மணக்குடவர். சரக்குக் கொண்டேன் - அறிவில்லாத வாணிபம் செய்தேன். குறிப்புருவகம். -(8) மன்றத்துப் புன்னைமாம் படுதுயரம் போல எய்தி என்க. |