பக்கம் எண் :


212திருத்தொண்டர் புராணம்

 

1417.(வி-ரை.) திருநீடு என்க. பின்னரும் மெய்கண்டதேவ நாயனாரும் மறை ஞானசம்பந்தரும் அவதரிக்கவும் சைவ மெய்த்திருவை வளர்க்கவும் காரணமாயிருந்ததும் கருதுக.

நிலவுகின்ற - முக்காலத்தும் நித்தியமாய் - விளக்கமாய் - வீற்றிருத்தலின் நிகழ் காலத்தாற் கூறினார்.

சிவபூதம் - சிவகணங்களுள் ஒன்றாகிய பூதம். இவை சிவபெருமான் ஏவல்வழி எல்லாம் செய்ய வல்லன. பூதங்கள் குண்டையூர்க் கிழார்க்கு இறைவன் தந்த நென்மலை முழுதும் திருவாரூரில் பரவையார் மாளிகை வீதியிற் சேர்த்ததும், ஆளுடைய பிள்ளையார்க்கு முத்துப்பந்தர் கொண்டு தந்ததும், அவருக்குப் பொன் உலவாக்கிழி கொண்டு தந்ததும் முதலிய வரலாறுகள் காண்க.

மாடு ஒருவர் அறியாமே - பூதங்களும், அவை சிவனேவலில் தொழில் செய்வதும் பிறர் கண்ணுக்குப் புலப்படா; தொழிலின் பயன்மட்டும் புலப்படும் என்க. ஆன்மாக்களின் பக்குவபேதம் நோக்கி அவ்வவர்க்கேற்றபடி அருளுவன் சிவன் என்பது துணிபு.

சேடு - ஒளி - உயர்ந்த ஒளிவீசும் சூலம். சினம் - விடைக்கு அடைமொழி.

சாத்த - ஆர்த்த - இலச்சினையைக் - கண்டு - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.

தோளில் - தோள்களில்; ஒன்றிற் சூலமும் இடபமும் என்க.

152

1418.(வி-ரை.) ஆங்கு - அப்போது. ஆங்குத்தோளில் என்றும், ஆங்குக் கண்டு என்றும், ஆங்கு ஆர்ந்த என்றும் கூட்டி உரைக்க நின்றது.

ஆர்ந்த - பொருந்தி நிறைந்த. தம் விருப்பு நிரம்புமாறு நிறைந்த என்பது குறிப்பு.

தம் திருத்தோளில் - தாம் கண்டு - இலச்சினை பொறிக்கப்பட்ட இடம் தமது தோள்களாதலையும் பொறித்த இலைச்சினைகளையுமே தாம் கண்டாரன்றி பொறித்த பூதத்தினையும் பொறிக்கும் செயலினையும் தாகும் கண்டிலர்.

தம்பெருமான் அருள் நினைந்து - தமக்குரிமையாகிய தலைவராதலின் விண்ணப்பம் கேட்டவுடன் அருளினை நல்கினார் என்று நினைந்தனர்.

தூங்கருவி - இடையறாது வரும் அருவிபோலக் கண்ணீரை, அருவிபோன்றதனை அருவி என்றார் உபசாரம்.

ஓங்கிய சிந்தையர் - அடிமைத்திறத்தில் உயர்ந்து நிலைத்த மனத்தினராயினர். "இறுமாந் திருப்பன் கொலோ வீசன் - பல்கணத் தெண்ணப்பட்டு" (திருவங்கமாலை), "நாமார்க்கும் குடியல்லோம்" என்ற நாயனார் திருவாக்கும், "அத்தனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே" என்ற திருவாசகமும் காண்க. இஃது ஏனைத்தாழ்ந்த இறுமாப்பினின் வேறு என்று குறிக்க ஆர்வத்தால் என்றார்.

உய்ந்தொழிந்தேன் - ஒழிந்தேன் என்பது முற்றிய உறுதிப்பாடு குறித்தது. உய்ந்தேன் என்பது பொருள். ஒழி - விடு - என்பன உறுதி குறிக்கும் விகுதிகள்.

எழுந்தார் - விழுந்து திளைத்த நிலையினின்றும் எழுந்தனர்.

தாணினைந்து - என்பதும் பாடம்.

153

1419.

தூங்கானை மாடத்துச் சுடர்க்கொழுந்தி னடிபரவிப்
பாங்காகத் திருத்தொண்டு செய்துபயின் றமருநாட்
பூங்கான மணங்கமழும் பொருவிறிரு வரத்துறையுந்
தேங்காவின் முகிலுறங்குந் றிருமுதுகுன் றமும்பணிந்து,

154

1420.

வண்டமிழ்மென் மலர்மாலை புனைந்தருளி, மருங்குள்ள
தண்டுறைநீர்ப் பதிகளிலுந் தனிவிடையார் மேவியிடங்
கொண்டருளுந் தானங்கள் கும்பிட்டுக், குணதிசைமேல்
புண்டரிகத் தடஞ்சூழ்ந்த நிவாக்கரையே போதுவார்,

155