இத்தலம் திருத்தூங்கானை மாடம் என்னும் பெண்ணாகடத்தினின்றும் (இருப்புப் பாதை நிலையம் - விழுப்புரம் - திருச்சி வழி) தென்மேற்கே மட்சாலைவழி நான்கு நாழிகையளவில் அடையத் தக்கது. திருமுதுகுன்றம் திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக் கருதுவார்க் காற்ற வெளியான் றன்னைக் குருமணியைக் கோளரவ மாட்டு வானை கொல்வேங்கை யதளானைக் கோவணவன் றன்னை யருமணியை யடைந்தவர்கட் கமுதொப் பானை யானஞ்சு மாடியைநா னபயம் புக்க திருமணியைத் திருமுதுகுன் றுடையான் றன்னை தீவினையே னறியாதே திகைத்த வாறே. |
1 | ஊன்கருவி னுண்ணின்ற சோதி யானை யுத்தமனைப் பத்தர்மனங் குடிகொண் டானைக் கான்றிரிந்து காண்டீப மேந்தி னானைக் கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத் தான்றெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு தன்னுடைய திருவடியென் றலைமேல் வைத்த தீங்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையே னறியாதே திகைத்த வாறே. |
4 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- திருமுதுகுன்றினை உடைய சிவபெருமானைத் தீவினையினால் முன்னம் அறியாமல் திகைத்துத் திரிந்தவாறுதான் என்னே! என்றிரங்கியது. பழம் பொருட்கெல்லாம் பழைமையாய் நின்ற அவரையும் அறியாதிருந்தது எனது தீவினையும் அறியாமையும் ஆகியவற்றின் மிகுதி என்று எண்ணிய ஆற்றாமை. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கருமணி - கரு ஈன்ற மணி, உலகுயிர்கள் யாவும் தன்னுள் ஒடுங்க வைத்துப் பின் விரிப்பவன். "ஊன் கருவின் உண்ணின்ற சோதி" (4) என்ற கருத்தும் காண்க. ஆற்ற - மிகவும்.-(2) பேணி வாங்குதலாவது தமது கருணையினுள் வைத்து வினையறுத்தல். வாங்குதல் - நீக்குதல். தன்னைப் பேணும் ஆன்மாக்களின் வினைகளைத் தான் வாங்கிக்கொண்டு தனது சிவானந்த நிலையை அவர்களுக்குத் தருபவன் என்றலுமாம். "வைச்சு வாங்குவாய்" திருவாசகம். "பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை யென்னும் வெள்ளமதம் பொழி" என்றது காண்க.-(3) பத்தனாய்...பயில்வித்தானை - நாயனாரது சரிதக்குறிப்பு. பன்னாட் பாமாலை பாடப் பயில்வித்தான் என்பது நாயனாரது மிக மூத்த வயதினையும், அவர்தந் திருவாக்குக்கள் இறைவன் உண்ணின்று உணர்த்தப் பாடுவித்தவை என்பதனையும் உணர்த்துவதாம்.- (4) தான் தெரிந்த ஆளாக்கொண்டு திருவடியென் தலைமேல் வைத்த - குருமூர்த்தமாய்த் தம்மை ஆட்கொண்ட நிலை குறித்தது. திருநல்லூரில் திருவடி சூட்டப்பெற்ற வரலாறு பின்னர் நிகழ்வதாகும்.- (5) தொண்டர்க் கங்கங்கே அறுசமயமாகி - தொண்டர்களின் பக்குவபேதம் நோக்கி அறுவகையாகிய சமயங்களுள் நின்று ஆட்கொள்பவன். "ஆறு சமயத் தவரவரைத் தேற்றுந் தகையன" .- (6) விழவொலி - அறிவுடைய ஞான ஒலி. விண்ணொலி - பூதவொலி. கழல் ஒலி - இறைவனது திருவடிச்சிலம்பு. கைவளை - கூடநின்ற இறைவியாரது கைவளை.- (7) காத்தானை ஐம்புல |