முன் இருள்போலச் சத்தினிடத்து அசத்துப்பிரகாசியாதென்றும், "பரமேபார்த்திருப்பர் பாதர்த்தங்கள் பாரார்" என்றும் வரும் ஞானசாத்திர உண்மைகளின் கருத்து இது. எதிர்கொண்டார் - என்பதும் பாடம். 159 1425. | அவர்முன் பணிவொடு தொழுதங் கணைவுற வணிகொம் பரின்மிசை யருகெங்குந் தவமுன் புரிதலின் வருதொண் டெனுநிலை தலைநின் றுயுர்தமி ழிறையோராம் இவர்தந் திருவடி வதுகண் ‘டதிசய' மெனவந் தெதிரர கரவென்றே சிவமுன் பயின்மொழி பகர்கின் றனவளர் சிறைமென் கிளியொடு சிறுபூவை. |
160 (இ-ள்.) அவர்முன்.....அணைவுற - முன்னே பணிவுடனே தொழுது கொண்டு நாயனார் அங்குச்சேர; அணி....எங்கும் - அழகிய மரக்கொம்புகளின் மேலே பக்கங்களில் எங்கும், தவம்முன் ....கண்டு - முன்னாளில் தவம் செய்தலால் வருந் திருத்தொண்டு என்னும் நிலையில் தலைசிறந்து நின்று உயர்ந்த தமிழ் அரசராகிய இவரது திருவடிவினைக் கண்டு; வளர்மென்......சிறுபூவை - வளரும் சிறையுடைய கிளிகளும் சிறிய நாகணங்களும்; "அதிசயம்" என்று - "இஃது அதிசயம்" என்று சொல்லி; வந்து எதிர் "அரகர" என்றே..........பகர்கின்றன - எதிரில்வந்து "அரகர" என்றே சிவனைத் துதிக்கின்ற முன்பயில் மொழிகளைச் சொல்கின்றன. (வி-ரை.) முன்பணிவொடு தொழுது அங்கு அவர் அணைவுற - திருநந்தவனங்களைக் கண்டவுடன் அவர் பணிந்தும் தொழுது கொண்டும் அங்கு சேர்ந்தனராக. முன் - அங்குச் சேர்வதற்கு முன்பே. பணிதல் - உடல் வணங்கி இறைஞ்சுதல். தொழுதுல் - மூன்றங்கம், ஐந்தங்கம், எட்டங்கம் இவைகளால் வணங்குதல். "பன்மலர்ப்புனித நந்தன வனங்கள் பணிந்து சென்றனன்" (240) என்றபடி இவ்வாறே ஆளுடைய நம்பிகளும் வணங்கிச் சென்றது காண்க. சிவனுக்காகும் தளிரும் இலையும் பூவும் காயும் கனியும் வேரும் கொண்ட தூய உயிர்களே நந்தனவனங்களில் மரம், செடி, கொடிகளாயிருத்தலின் வணங்கினர். எங்கும் அருகு - அணி கொம்பரின்மிசை - வளர்மென் கிளியொடு சிறு பூவை - திருவடிவு - கண்டு - ‘அதிசயம்' என எதிர் வந்து "அரகர" என்றே சிவமுன் பயின்மொழி பகர்கின்றன எனக்கூட்டி உரைத்துக் கொள்க. தவமுன்...உயர் - முன்னை நிலையிற் றவம்புரிந்ததனால் தொண்டராகுநிலை பெற்றனர்; அந்நிலையிற் றலைநின்றனர்; தமிழ் வேந்தருமாயினர் என்பது. "முன்னமே முனியாகி யெனையடையத் தவமுயன்றான்" என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. தமிழரசராயினமை இறைவனருளாலாகியது. 1339-பார்க்க. தொண்டெனுநிலை தலைநின்று - தொண்டாகிய நிலையிற் சிறந்து - என்றும், தொண்டின் நிலைபெற்றதனால் பிற யாவருடைய தலையிலும் நின்று எனவும் உரைக்க நின்றது. திரு வடிவுகண்டு அதிசயம் என்று - "அத்த னாண்டுதன் னடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே" என்று மணிவாசகனார் அருளியபடி இந்தத் திருவடிவுடைய அடியவரைக் காணும் பேறு தமக்குக் கிடைத்தமைபற்றிப் பெருமிதமும் ஆனந்தமு மடைந்து இஃது ஓர் அதிசயம் என்றன. |