| கூடிய பணிகள் செய்து கும்பிடுந் தொழில ராகிப் பாடிய புனித வாக்கின் பணிகளும் பயிலச் செய்வார். |
170 1436. | அருட்பெரு மகிழ்ச்சி பொங்க "வன்னம்பா லிக்கு" மென்னுந் திருக்குறுந் தொகைகள் பாடித், திருவுழ வாரங் கொண்டு பெருத்தெழு காத லோடும் பெருந்திருத் தொண்டு செய்து விறுப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்ட லாட, |
171 1437. | மேவிய பணிகள் செய்து விளங்குநாள், வேட்க ளத்துச் சேவுயர் கொடியார் தம்மைச் சென்றுமுன் வணங்கிப் பாடிக், காவியங் கண்டர் மன்னுந் திருக்கழிப் பாலை தன்னில் நாவினுக் கரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ. |
172 1435.(இ-ள்.) மணியின் நீடிய சோதிநிறை திருமுன்றில் மாடும் - மணிகளது நீடிய ஒளிநிறைந்த திருமுன்றிலின் பக்கத்தும்; ஆடு உயர் கொடிசூழ் பொன் தேர் அணி திருவீதி உள்ளும் - ஆடுகின்ற உயர்ந்த கொடிகள் சூழ்ந்த அழகிய தேர் செல்லும் அணி வீதிகளினுள்ளும்; கூடிய பணிகள் செய்து - நேர்ந்த திருப்பணிகள் செய்து; கும்பிடும் தொழிலர் ஆகி - கும்பிடுகின்ற தொழிலை உடையவர் ஆகி; பாடிய.....செய்வார் - பாடுகின்ற தூய திருவாக்கினது பணிகளையும் பயிலச் செய்வாராய், 170 1436.(இ-ள்.) அருள் பெருகி மகிழ்ச்சி பொங்க - அருளைப் பெற்றதனால் உளதாகிய பெருமகிழ்ச்சி மேன்மேலும் பொங்க; "அன்னம் பாலிக்கும்" என்னும் திருக்குறுந் தொகைகள் பாடி" - அன்னம் பாலிக்கும்" என்று தொடங்குகின்ற திருக்குறுந் தொகைகளை அருளிச்செய்து; பெருத்துஎழு....தொண்டு செய்து - மிகப் பெரியதாகி மேலெழுகின்ற காதலுடனே பெரிய திருத்தொண்டினைச் செய்து; விருப்பு உறும் மேனி கண் நீர் வெண் நீற்று வண்டல் ஆட - விருப்பம் பொருந்தும் திருமேனியில் வடியும் கண்ணீரினால் கரைந்த திருவெண்ணீற்றினோடு ஆகிய வண்டல் பொருந்த, 171 1437.(இ-ள்.) மேவிய...நாள் - இவ்வாறு பொருந்திய திருப்பணிகளைச் செய்து விளங்கும் நாட்களில்; வேட்களத்து....பாடி - திருவேட்களத்தில் எழுந்தருளிய இடபத்தை உயர்த்திய கொடியினையுடைய சிவபெருமானைத் திருமுன்பு சென்று வணங்கிப் பாடி; காவியங்கண்டர்....தன்னில் - நீலமலர் போலும் நிறமுடைய அழகிய கண்டமுடைய பெருமான் நிலைபெற்று எழுந்தருளிய திருக்கழிப் பாலையில்; சென்று நாவினுக்கரசர் மண்ணோர் வாழ நண்ணினார் - போய்த் திருநாவுக்கரசு நாயனார் மண்ணுலகத்தவர் வாழும் பொருட்டு நண்ணினார். 172 இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1435. (வி-ரை.) மணியின் நீடிய சோதி - என்க. இயற்கை யொளியாதலின் நீடிய என்றார். திருமுன்றில் - அம்பலவரது கோயில் திருமுற்றங்கள். மணிகள் - திருமுற்றத்தில் கிடக்கின்றவை. மாயாகாரியங்களாகிய பொன் மணி முதலியவற்றில் விருப்பமில்லாத பெரியோர்களே அம்பலவர் திருமுற்றத்தில் அணைவார்களாதலின் அவை அங்குக் கேட்பாரற்றுக் கிடப்பன; வணங்கவரும் தேவர்களின் முடிகள் மோதுதலினாற் சிந்திய மணிகளும் அங்குக் கிடப்பன என்பது முன்னர்க் (1428) கண்டோம். பின்னர்த் திருப்புகலூரில் திருமுற்றத்தில் திருவருளால் வந் |