அற்றைநான்போல் - "தலையாயார், எண்ணரும் பெண்ணைபோன் றிட்ட ஞான் றிட்டதே, தொன்மை யுடையார் தொடர்பு" என்ற நாலடியாரின் கருத்தும் காண்க. வளர்ந்து ஓங்க - பின் இருமுறையும் இப்பெரு மக்கள் கூடிய சரித நிகழ்ச்சிக் குறிப்பு. திருப்புகலூரிற் கூடித் திருவீழிமிழலை திருமறைக்காடு சென்று காணும் நிகழ்ச்சிகள் வரை உள்ள இரண்டாவது கூடடத்தில் இக்கேண்மை வளர்வது; பின்னர்த் திருப்பூந்துருத்தி நிகழ்ச்சியில் இது ஓங்குவது என்ற குறிப்புப்பட வளர்ந்து - ஓங்கி என்றார். நாடுங்காதல் வளர்ந்தோங்க" (திருநா - புரா - 282), "இன்புற்றுத் துதிசெய்தங் குடனிருந்தார்" (மேற்படி 398) என்பன காண்க. உடன் என்பது வேறெச்சமயக் கொள்கைக்கு மில்லாது சைவ சித்தாந்தத்தின் சிறப்பினைக் காட்டும் சொல். ஒன்றுமாகாது வேறு மாகாது இரண்டு பொருள்கள் ஒன்றுகூடிய கலப்பு. "அவையே தானேயாய்" என்ற சிவஞானபோதச் சூத்திரத்தின் கீழ் உரைத்தவை பார்க்க. "... எட்டுத்திசை தானாய், வேறாய் உடனானானிடம் வீழிம்மிழலையே" என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரம் காண்க. "காகத்திரு கண்ணியிற் கொன்றே மணிகலந் தாங்கிருவ, ராகத்துளோருயிர் கண்டனம்" (திருக்கோவை - 71) என்ற கருத்து இங்குக் கருதத் தக்கது. 187 திருக்கழுமலம் I திருச்சிற்றம்பலம் திருவிருத்தம் | பார்கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம் நாலைந்து புள்ளின மேந்தின வென்பர் நளிர்மதியங் கால்கொண்ட வண்கைச் சடைவிரித் தாடுங் கழுமலவர்க் காளன்றி மற்றுமுன் டோவந்த ணாழி யகவிடமே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- இப்பதிகம் திருத்தோணியப்பர் திருமுன்பு நின்று பாடியருளப்பட்டது. 5-வது பாட்டில் இத்தோணிபுரம் என்றது காண்க. இக்கருத்துப் பற்றியே ஆசிரியர் 1452-ல் "தோணிமீது பேணிவீற் றிருந்தருளும் பிரான் முன் னின்று" என்றருளினர். "பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்று" என்று தொடங்கியதும், "முந்நீரின் மிதந்துடன் மொய்த்தமரர், சுற்றிக் கிடந்து" (7) என்றதும் கருதுக. ஊழியில் உலக மெல்லாம் நீரினுள் அழுந்திய காலத்தும் ஆழாது மிதந்த தோணிபுரேசருக்கே இவ்வுலகம் ஆளாவதன்றி வேறு கதியில்லை. இத்தலத்தைஅடைவார் வினைகள் நீங்கும. கழுமலநாதன் கழல்கள் நாடொறும் நம்மை ஆள்வன. இதனைத் தேவர்கள் சுற்றிக்கிடந்து தொழுகின்றனர். பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) பார்கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று ஊழியில் உலகத்தை மூடும் பெருவெள்ளம். நாலைஞ்சுபுள்ளினம் ஏந்தின என்பர் - ஊழிப்பெருவெள்ளத்தில் இறைவன் இறைவியாரோடு சுத்தமாயையின் விருத்தியாகிய பிரணவம் - என்னும் தோணியில் வீற்றிருத்தலினால் இத்தலம் அழியா திருப்பதென்றும், அத்திருத்தோணியைச் சுற்றிக்கொண்டு பறவைகளின் உருக்கொண்டு தேவர்கள் அதனைத் தாங்குபவர்களாய் இருப்பர் என்றும் தலவரலாறு கேட்கப்படும். "முந்நீரின் மிதந்துடன் மொய்த்தமரர், சுற்றிக்கிடந்து தொழப்படுகின்றது ... சடை முடியார்க் கிடமாய கழுமலமே" (7) என்றது காண்க. இத்தலத்தில் தோணியப்பர் எழுந்தருளி யிருக்கும் பெருமாளிகை ஒரு தோணிவடிவாயமைந்து அதைச் சுற்றிலும் பறவைகள் தாங்கியிருக்கும் தன்மையாகிய அமைப்புக்களும் இன்றும் காண வுள்ளன. நாலைஞ்சு இருபது என்ற எண் குறிப்ப |