(7) உரையார் பொருளுக்கு உலப்பிலான் - "சொல்லும் பொருளுமிறந்தசுடர்" (திருவா). "உரையின் வரையும் பொருளி னளவு, மிருவகைப்பட்ட எல்லையும் கடந்து" (11 - திருமுறை - கோயினான்). எவ்வுயிரும் ஆனான் - எவ்வுயிர்க்குள்ளும் நிறைவானான். புரை - இலகு. கனம் - வலிது. புரையாயினும் ஆழ்ந்து, கனமாயினும் ஆழாது உள்ளது இறைவனது வரம்பிலாற்றலுடைமை குறித்தது. எதிர் நிரனிறையாய்க் கொண்டு புரையாய் ஆழாது - கனமாய் ஆழ்ந்து எனக்கூட்டி "எப்பொருட்கு மியல்பானான்" என்றுரைத்தலுமாம். புதியன் - பழையன் - பின் முன் - (2) என்ற கருத்து. முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளே - பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" திருவாசகம்). -(8) அறிவோம் என்பார்க் கெல்லாம் அறியலாகா - நாம் காண்போம் என்று எழும் உயிர்ப்போதத்துக் கெட்டாதவன். "உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்". -(9) கையெலாம் ... நின்றுண்ணும் - சமணர் வழக்கு. புள்ளுவர் - கள்வர். நினையாவாறே - என்றது சமணத்திற்புக்குப் போதுபோக்கிய காலக்குறிப்பு. - (10) இகழாது நின்றானை இகழுமா றெங்ஙனே - என்க. இகழாது நிற்றல் - பாசத்துட்பட்ட உயிர்களுள் நின்று நன்மை தீமைகளுள் கலந்தும் தோயாது நிற்றல். நகழ - வருந்த - துன்பப்பட. திருப்புன்கூர் :- தலவிசேடம் - முன் 261-ன் கீழ் உரைக்கப்பட்டது. நீடூர் :- தலவிசேடம் - முன் உரைக்கப்பட்டது. "செல்வநீடூர் திருநீடூர்" (முனையடுவார் - புரா - 1) என்று ஆசிரியர் பெயர்விளக்கம் செய்கின்றார். நிறமாமொளியானை "நீடூரானை" (1), "நீக்காத பேரொளிசேர் நீடூரானை" (5) "ஒளிதிகழுமேனியானை" (6) என்ற பதிகக் குறிப்புக்களின்படி சுவாமி ஒளிவீசும் சிவந்த திருமேனியுடன் விளங்குகின்றார். இந்திரன் முதலியோர் பூசித்துப் பேறுப்பெற்ற தலம். மகிழவனம் எனப்படும். சுவாமி - அருட்சோமநாதர். அம்மை - அதிகாந்தியம்மை - வேதநாயகி. தீர்த்தங்கள் - இந்திர தீர்த்தம் - முதலிய ஒன்பது. மரம் - மகிழ். இத்தலம் நீடுர் என்னும் புகைவண்டி நிலயத்தினின்றும் வடக்கே மட்சாலைவழி அரைநாழிகை யளவில் அடையத்தக்கது.திருக்குறுக்கைவீரட்டம் I திருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| நீற்றினை நிறையப் பூசி நித்தலு நியமஞ் செய்து ஆற்றுநீர் பூரித் தாட்டு மந்தண னாரைக் கொல்வான் சாற்றுநா ளற்ற தென்று தருமரா சற்காய் வந்த கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கைவீ ரட்டனாரே. 2 சிலந்தியு மானைக் காவிற் றிருநிழற் பந்தர் செய்து உலந்தவ ணிறந்த போதே கோச்செங்க ணானு மாகக் கலந்தநீர்க் காவி ரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே. 4 கல்லினா லெறிந்து கஞ்சி தாமுணுஞ் சாக்கியனார் நெல்லினாற் சோறு ணாமே நீள்விசும் பாள வைத்தார் எல்லியாங் கெரிகை யேந்தி யெழிறிகழ் நட்ட மாடிக் கொல்லியாம் பண்ணு கந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே. |
6 திருச்சிற்றம்பலம் |