இட்டால் சிவபூசைக்குரிய பூமரங்களாய் முளைக்கும் என்பது வரலாறு. சுவாமி - செம்பொன்பள்ளியார்; தேவி - சுகந்தவனநாயகி; பதிகம் 3. இத்தலம் செம்பொனார் கோயில் என்ற புகைவண்டி நிலயத்தினின்று நாழிகை யளவில் அடையத்தக்கது. திருமயிலாடுதுறை திருச்சிற்றம்பலம் திருக்குறுந்தொகை | கொள்ளுங்காதன்மைபெய்து றுங்கோல்வளை, யுள்ள முள்கியுரைக்குந் திருப்பெயர், வள்ளன் மாமயி லாடு துறையுறை, வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே. |
1 | அண்டர் வாழ்வு மமர ரிருக்கையுங், கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம், வண்டு சேர்மயி லாடு துறையரன், தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே. |
3 | நிலைமைசொல்லுநெஞ்சேதவமென்செய்தாய், கலைகளாயவல்லான் கயிலாயநன் மலையன் மாமயி லாடு துறையனந், தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே. |
6 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- 1, 2 பாட்டுக்கள் மயிலாடுதுறையரன்பால் மகள் காதலின் விளைவுகண்டு வருந்தி அதற்குத் தீர்வு நினைந்த தாய்கூற்றாகிய அகப்பொருட்டுறையில் அமைந்தன. 4, 5, 7, 10, 11 பாட்டுக்கள் இறைவனைச் சார்வதன் பயன் குறித்தன. 8-வது பாட்டு அவனை உணர்ந்தார்க்குத்தவம் வேறு வேண்டுவதின்று என்ற கருத்துடையது. 6, 9 பாட்டுக்கள் அவனருளிற் றிளைத்தலும், 3-வது பாட்டுத் தொண்டர் கூட்டத்தின் பெருமையும் குறித்தன. பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) காதன்மை - சாதல்நோய். உரைக்கும் திருப்பெயர் - "மெள்ளவே யவன்பேர் விளம்பும்வாய்" (திருவிசைப்பா), - (2) கொன்றை கொடுக்கில் சித்தம் தேறும் - விற்பூட்டு பொருள்கோள். வளை சிக்கெனும் - காதலால் உடல் இளைக்கவும் வளைகழலவும் இருந்த தன்மை நீங்கி உடல் பூரிக்க, வளை கழலா. பச்சை - பசலை.- (3) துதைதல் - நெருங்குதல். அடியார் கூட்டம் பெறின் தேவ உலகப் பெரிய இன்பமும் பொருளன்று. சூடித்துதையில் - கருத்து ஒன்றிலோம் - ஒன்று - முற்றும்மை தொக்கது.- (4) அருளில்.....அறுக்கலாம். அஞ்சு இறப்பு - அஞ்சத்தக்கதாகிய இறப்பு.- (5) இருக்கில் - குறைவு இலேம் - குறைவு - ஒரு குறைவும், "ஒன்றினாற் குடையுடையோ மல்லோ மன்றே" (திருத்தாண்டகம்). மானுடக் கொடு வாழ்க்கை - கொடுமை - மீள மீளப் பிறவிக் காரணமாகிய வினை தேடுதல். நீள் - அழிவில்லாத - நித்தமாகிய.- (6) தங்கவே என் தவம் செய்தாய் - என்க. தவம் செய்தவரே இறைவனை வணங்கவும் நினைக்கவும் பெறுவர். "என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே...வழிபடும தனாலே" (பிள்ளையார் - தேவாரம்.) தலையின் மேலும் மனத்துளும் - "சிந்தையினுஞ் சென்னியினு மலர்வித்து" (புரா.). "சிந்தையி னுள்ளுமென் சென்னியினும் சேர வந்தவர்" (உந்தி). மேல் - உள் - உள்ளும் புறம்பும்.- (7) புவி வாழ்க்கை - "கொடுமானிட வாழ்க்கை" பிறவி. உண்டோ - ஓகாரம் எதிர்மறை.- (8) கோல் - யோகதண்டு. கூர்ச்சம் - புல் - தருப்பையாலமைந்தது. தோல் - மான்றோல். இவை விரதியர் கோலம். என் பயன்? - சிவனை உட்கொள்ளாத தவமும் விரதமும் பயனில. நூல் - பூணூல் எனவும், அறிவுநூல்கள் எனவும் உரைக்க நின்றது. உணர்ந்தோர் - ஞானத்தால் உணர்ந்தோர்.- (9) பகீரதி - சங்கை. அணங்கோர்பால் கொண்ட கோலம் - மாதிருக்கும்பாதியனாகியகோலம்.- |