| விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய் மீயாச்சூர் பிரியாத விமலன் கண்டாய் கொண்லஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய் கோடிகா வமர்ந்துறையுங் குழகன் றானே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக்குறிப்பு :- கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே, கண்தலஞ்சேர் நெற்றி இளங்காளை முதலாகிய பண்புகளுடையவன்; பிறவியறுக்கும் மருந்து; பரலோக நெறிகாட்டும் பரமன்; கொண்டாடும் அடியவர்தம் மனத்தான்; நினைப்பார்தம் வினைப்பார மிழிப்பான்; அவன் என் நெஞ்சத்துள் நீங்காத வெம்மான். - இத்திருப்பதிகத்துள் ஒரு பாட்டுச் சிதலரித் தொழிந்தது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- நெற்றித்தலம் சேர் கண் என்க. இளங்காளை - இளைமை - புதுமைக்குப் புதுமையாயிருத்தல். காளை - வீரங் குறித்து நின்றது. மண்தலம் சேர் மயக்கு - மண்ணில் வந்து பிறத்தற்குக் காரணமாகிய ஆணவ மறைப்பு. கொண்டலம்சேர் கண்டம் - கொண்டல் - மேகம். இங்கு அதன் பண்பாகிய கருமையும் உபகாரமும் குறித்தது. அமர்ந்து - விரும்பி.- (2) பண்பாடு பழவினைநோய் - மூலமாகிய மும்மலம். செண்டாடுதல் - மிக இலகுவில் அழித்தல்.- (4) புற்றாடு - அரவுக்கு இயற்கை யடைமொழி. பொய்யிலி - பூந்துருத்தியின் சுவாமி பெயர். அற்றார்கட்கு அற்றான் - வேறொன்றும் பற்று வையாது அறுத்துத் தன்னை அடைந்தார்க்கு அற்ற அத்தன்மையினுள் வெளிப்பட்டு அருள்பவன், "அற்றவர்க் கற்ற சிவன்" (ஆளுடைய பிள்ளையார் - ஆலவாய்.) கூத்தன் - குற்றாலத்தின் சுவாமி பெயர். கூத்தர் குற்றாலம் என்ற வழக்கம் காண்க. இது வேறு; குறும்பலா வேறு. "குற்றாலத்துறை கூத்தனல்லால்" (திருஅங்கமாலை), "குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தாவுன் குரைகழற்கே" (திருவாசகம் - திருப்புலம்பல்.) கூத்தன் குற்றாலம், கூத்தப்பெருமானது ஐம்பெருமன்றங்களுள் சித்திரசபை என வழங்கப்படும்.- (5) காப்பு - காவல் புரியும் தலம். "காப்புக்களே" காப்புத் திருத்தாண்டகம் என்றது காண்க. இழிப்பான் - இறக்குபவன். பாரமில்லாமற் செய்பவன்.- (6) கண்ணப்ப - கண்ணப்ப நாயனாரையும் உடன் துதித்தமை காண்க. விண் - சிவனுலகம். விண்ணப்பு - சிவத்தன்மை. "கானலைக்கும்மவன் கண்ணிடந் தப்பநீள், வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்" (தென்குடித்திட்டை - 7 - ஆளுடைய பிள்ளையார்). படிமலிந்த - உலகில் பலகாலும் வரும்.- (7) உழை - மான். ஒற்றி - நிறைந்துறையும் இடம். கழை - மூங்கில். என்......எம்மான் - என் நெஞ்சினுள் உறைந்து எமக்கெல்லாம் தலைவனாந் தன்மையுடையான். குடமாடி - திருக்குடமூக்கு. தலவிசேடம் :- கோடிகா - மூன்று கோடி (திரிகோடி) இருடியர் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. சுவாமி - கோடிகாவீசுவரர். அம்மையார் - வடிவம்மை. தீர்த்தம் - சிருங்க தீர்த்தம். பதிகம் 4. காவிரிக்கு வடகரையில் 37-வது தலம். இதற்கு எதிர்க்கரையில் 1 நாழிகையளவில் காவிரியைக் கடந்தால் உள்ளது தென்கரையில் 35-வது தலமாகிய திருவாவடுதுறை. திருக்கஞ்சனூரினின்றும் மட்சாலை வழி கிழக்கே 2 நாழிகையளவில் கோடிகாவை அடையலாம். 1456. | "ஆவடுதண் டுறையாரை யடைந்துயந் தே"னென் றளவிறிருந் தாண்டகமுன் னருளிச் செய்து மேவுதிருக் குறுந்தொகைநே ரிசையுஞ் சந்த விருத்தங்க ளானவையும் வேறு வேறு |
|