பிறவி உறும் நோய்கள். - (4) நிலத்தார்....நீதன் - ஒன்றும் பயனில்லாது பூமிப் பொறையாய்க் கழியும் நீசன். அலுத்தேன் - ஆதலின், அஞ்சல் என்னாய்! என்று கேட்பதற்குக் காரணங் காட்டியபடி.- (5) கழலே வாழ்த்தித் துறவாத துன்பம் துறந்தேன் - ஊழ்வினை வந்துற்றாலென்னே - "சலியாது முயன்ற தவப்பெருந்தொண்டர்" ஊழையும் புறங்காணவல்லர். "ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித், தாழா துஞற்று பவர்" (குறள்). - (6) நான் ஆர் உமக்கோர் வினைக் கேடனேன் - உமது அருளும் தொழிலும் பயனிலாது கழிவது என்மட்டில்.- (7) கடன் - பிழைபொறுத்தி என்று நான் வேண்டாமலே பொறுத்தல் உனது கடமை. ஏன்? எனில், பேரருள் உன்பாலாவது அன்றோ? என்க.- (8) அன்பு கலந்தார் மனம் கவரும் காதலான் - அன்பினால் உன்னிடம் மனங் கலந்தவர்களது உள்ளங் கொள்ளை கொள்ளும் காதலை ஈபவன். மலம் - ஆணவமும், மாயக்காயம் - மாயா மலமும், நாளு மலந்தேன் - கன்மமலமும் குறித்தன.- (9) ஒன்றுக் கல்லாதார் - ஒன்றுக்கும் பயனற்றவர். முற்றும்மை தொக்கது. திறத்து ஒழிந்தேன் - அவர் பக்கத்தனாகி வீணானேன்.- (10) துறந்தார் தம் தூநெறி - ஞானநெறி. துணை மாலை ஆட்ட - கிரியை நெறியில் அகத்திலும் புறத்திலும் மாலைசாத்திப் பூசிக்க. துணைமாலை - அகம்புற மிரண்டிலும் அலங்கரிக்கும் மாலை. துணை - இரண்டு. உயர்ந்த துணையாகிய என்றலுமாம். தூயேனல்லேன் - அகமும் புறமும் விதிப்படி தூய்மை செய்து பூசிக்கும் சிவாகம விதி குறித்தது. பிறவா நாள் "ஓவுநாள்" என்றபடி, இறந்தநாள் - ஒழிந்தநாள் - என்பது. கோயில் - பெரிய திருத்தாண்டகம் பார்க்க. அறிந்தேன் அஞ்சேலென்னாய் - அறிந்தமையால் வந்து அடைந்தேன்; அஞ்சல் என்று காப்பாய். நம்பிகளது இத்தலத் தேவாரங் காண்க. III திருச்சிற்றம்பலம் திருக்குறுந்தொகை | நிறைக்க வாலிய ளல்லளிந் நேரிழை; மறைக்க வாலிய ளல்லளிம் மாதராள்; பிறைக்க வாலப் பெரும்புன லாவடு, துறைக்க வாலியோ டாடிய சுண்ணமே. |
1 | பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத், தஞ்ச மென்றிலு மாந்திவளாரையும் அஞ்சு வாளல்ல ளாவடு தண்டுறை, மஞ்ச னோடிவ ளாடிய மையலே. |
7 | பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான், மிக்க வாளரக் கன்வலி வீட்டினான். அக்க ணிந்தவ னாவடு தண்டுறை, நக்க னென்னுமிந் நாணிலி காண்மினே. |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- நாயகனைக் கண்டு மையல்கொண்டு தன்வசமிழந்து பிதற்றும் மகளைக் கண்டு கூறும் தாய் கூற்றாகிய அகப்பொருள் துறையில் அமைந்தது இத்திருப் பதிகம். "பெயர்த்து மவனுக்கே பிச்சியானாள்........தன்னை மறந்தாள்" என்றபடி உள்ளநிலை. "கொழுந்திரள் வாயார் தாய்மொழியாக" என்ற (சேந்தனார் - திருவிடைக்கழி - 11) திருவிசைப்பா இக்கருத்தை விளக்கும். பசுத்துவம் கெடுதல் இத்தலத்தின் தத்துவம் என்பது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வாலியள் - வலியள். முதனீண்டது. பெரும்புனல் - காவிரித்துறைச் சிறப்பு.- (2) களவு - களவொழுக்கம்.- (3) ஓதி - பெயர் ஓதினவன். சோதியே சுடரே - இத்தொடருள்ள திருவாசகம் காண்க.- (4) கார் - கருமை நிறப்பண்பு. தார்க்கு - தார் பெறுதற்கு. தாழும் - விரும்பும். நிலை தாழ்தல் என்றதும் குறிப்பு.- (5) அருகு சென்றிலள்; ஆயினும், என்னும். (6) கழலும் கைவளை - காதலினால் உடல் இளைத்தற் குறிப்பு.- (7) ஆடிய மையலே - மையலின் தன்மைதான் என்னே!" ஆடிய சுண்ணமே" (1) என்றதுமிது.- (9) 6-வது |