பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்299

 

மூன்று பயனும் தருவது. - (4) மேலை வினைகள் - பழவினைகள்.- (7) நண்ணாவினை - இனிவரக்கடவ வினைகள் வாரா. ஆகாமியம் எறாது. நாசம் - முன் உள்ளவையும் ஒழியும்.- (8) வெந்த - உலகங்கள் தீந்ததனால் உளதாகிய.- (10) மக்கள் இனியர் என்று நினைக்கும் அனைத்தினும் இறைவர் இனியர்.

III திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

பறையி னோசையும் பாடலி னோசையு, மறையி னோசையும் வைகு மயலெலாம்
இறைவ னெங்கள் பிரானிடை மருதினி, லுரையு மீசனை யுள்குமென் னுள்ளமே.
துணையி லாமையிற் றூங்கிருட் பேய்களோ, டணைய லாவ தெமக்கரி தேயெனா,
வினையி லாவிடை மாமரு தில்லெழு, பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே.
மங்கைகாணக்கொடார்மணமாலையைக்; கங்கைக் காணக்கொடார் முடிக்கண்ணியை;
கங்கை மீரிடை மருதரிந் கங்கைக்கே, யெங்கு வாங்கிக் கொடுத்தா ரிதழியே.

6

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- இடைமருதில் ஈசனை என் உள்ளம் உள்கும். அவரைச் சொல்லவே வினைகள்போயசலும். அவரைக்கண்டு என் மகள் மையலாயினள் என்று கூறும் தாய் கூற்று.

பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) பறை - பாடலுக்கிசைய முழக்கப்படும் இயங்கள். - (2) மாயன் - மறைந்துள்ளவன். - (4) ஆகமம் - நீதி - (5) பயிலும் - பாடி உள்ளங் கலக்கும். - (6) 4, 5, 6 பாட்டுக்கள் தலைவியின் காதன்மிக்க நிலை கண்ட தாய் கூற்றாகிய அகப்பொருட்டுறையில் அமைந்தன. 6-வது பாட்டின் சுவை கண்டுகளிக்கத்தக்கது. இதழி - இங்கு அடையாள மாலையினையும், இதழிபோன்ற பொன்னிறமாகிய பசலைனையும் குறித்தது.

IV திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

சூலப் படையுடையார் தாமே போலுஞ் சுடர்த்திங்கட் கண்ணி யுடையார்போலும்
மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும் மந்திரமுந் தந்திரமு மானார் போலும்
வேலைக் கடனஞ்ச முண்டார் போலும் மேல்வினைக டீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக் கமழ்குழலாள் பாகர் போலு மிடைமருது மேவிய வீச னாரே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- இடைமருதூர் மேவிய ஈசனார் சூலப்படையுடைமை, திங்கட் கண்ணியுடைமை முதலிய தன்மையுடையார். அவர் அடியார்மேல் வினைகள் தீர்க்கும்
விகிர்தர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மாலை - விட்டுணுவை. "மந்திரமுந் தந்திரமு மருந்து மாகித் தீராநோய் தீர்த்ருளவல்லான்" (தாண் - புள்ளிருக்கவேளுர்). - (2) பத்து - மிகுதி குறித்தது. - (4) வியன் கொண்டல் மேற்செல் - "புயல் வணற் கருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த மேக நாயகனை (திருவிசைப்பா - சேந் - வீழி - 1). - (5) ஊகம் - குரங்கு. "வேயுயர் சாரற்கருவிர லூகம்விளையாடும்" (குறிஞ்சி - சிராப்பள்ளி - 7 - பிள்ளையார்). அண்ணா - நெருங்கமுடியாத இடம்; அணுகமுடியாத நெருப்புமலை யாதலின் திருவண்ணாமரையைக் குறிக்கும். - (6) ஐயிரண்டும் ஆறொன்றும் - 16 - கலைப் பிராசாத மந்திரம்; அறுமூன்று - 18 புராணங்கள்; நான்முன்று - 12 - மூலமந்திரத்தோடு சங்கிதா மந்திரங்களும் குறிக்கும். - (7) இப்பாட்டுப் பொருள் எளிதில் விளங்காதனவற்று ளொன்று. எரியாயு