பக்கம் எண் :


320திருத்தொண்டர் புராணம்

 

சிவன் குருவா யெழுந்தருள, அக்குருவருளால் ஞானம் உணரப்படுமென்பது சாத்திரம். ஞானம் - சிவஞானம். சன்மார்க்கத்தினாற் பெறப்படும் பயன். "தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்த" என்ற சிவஞான போதம் எட்டாஞ் சூத்திரத்துக்குக் கருத்துரை கூறுமிடத்து ஆசிரியர் மெய்கண்டதேவர், "ஞானத்தினை உணரு முறைமையினை உணர்த்துதல் நுதலிற்று" என்று வகுத்தமை காண்க.

ஞானத்திருமறையோர் - என்றதனால் மறையாகிய பொதுநூல் வல்ல அவர், சிறப்பாகிய ஆகமத்தினும் வல்லராய், அதனாலறியப்படும் ஞானமாகிய நான்காம் படியினையும் அடைந்த பெரியவர் என்றவாறு.

தண்டலை - தோட்டம். வண்கதலி - வளப்பம் எல்லாக் கதலிக்கும் பொது விலக்கணமாயினும் இங்கு இக்கதலிக்குப் பின்வரும் அருள் நிகழ்ச்சிக்குக் காராணமாகிய சிறப்பியல்பாயிற்று என்பது குறிப்பு.

வண்மை - "மெல்லிய வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்" என்றபடி தானிறந்தும் பயன்றதலும், தன் உடல் அங்கம் முழுதும் பயன்படுதலும் வாழையின் பொதுவியல்பாம். இங்கு இக்கதலிக்குச் சிறப்பாயுரிய வண்மையாவது குருவருள் பெறத் துணையாய் நிற்பது. "நிகழ்ந்த அக் கதலி" (அப்பூதி - புரா - 39) என்பது காண்க. கதலி - வாழையின் வகையுள் ஒன்று - சிறந்தது என்றலுமாம்.

குரு - பெரியதாதிய. நாளக்குருத்து - தண்டு முற்றும் வெளிப்போந்து விரிந்த பெருங்குருத்து. குருத்து - இலைமுற்றாத பருவங்குறித்தது.

தனிவிட்டார் - தனி - இங்கு - விரைவாக என்ற பொருளில் வந்தது. "விரைந்து விட்டார்" (அப்பூதி - புரா - 23)). தனியாக வேறு எவரும் துணையின்று என்றுரைத்தலுமாம்.

அழைத் தந்தத் - என்பதும் பாடம்.

204

1470.

ஆங்கவனும் விரைந்தெய்தி யம்மருங்கு தாழாதே
பூங்கதலிக் குருத்தரியப் புகுமளவி லொருநாகந்
தீங்கிழைக்க வதுபேணான், றிருவமுது செய்தருள
வோங்குகத லிக்குருத்துக் கொண்டொல்லை வந்தணைந்தான்.

205

(இ-ள்.) வெளிப்படை. அவனும் ஆங்கு விரைவாகச் சேர்ந்து, அச்செயலில் காலந் தாழ்க்காமல் அழகிய வாழைக்குருத்தை அரியப் புகும்போது, ஒரு பாம்பு தீண்ட, அதனைப் பொருட்படுத்தாது, அரசுகள் திருவமுது செய்தருளுதற்காகப் பெரிய வாழைக்குருத்தை அரிந்துகொண்டு விரைவில் வந்து அணைந்தனன்.

205

(வி-ரை.) விரைந்து - எய்தி - தாழாதே - என்பன அந்த மகனுக்கு அத்திருப் பணியில் இருந்த ஊக்கங் குறித்தன. அது பேணான் - ஒல்லைவந்தடைந்தான் என்பன அந்த ஊக்கத்தோடு அன்பின் பணிவிடையில் அவன் வைத்த உறைப் பினையும் உணர்த்தின.

அவனும் ஆங்கு விரைந்து எய்தி என்க. ஆங்கு - தோட்டத்தின்கண். ஆம் மருங்கு - தோட்டத்தில் செய்யும் செயலில் என்றபடி.

தீங்கிழைத்தல் - தீண்டுதலால் பற்கள் உள்ளே பொருந்தி நஞ்சுகுத்துத் தீமை செய்தல். தீங்கு - உயிர் போக்கக் காரணமாதற்கு மங்கல வழக்கு.

பேணான் - பொருட்படுத்தானாகி.

ஒல்லை வருதல் - விடத்தின் தீமை தலைக்கேறி வீழாமுன் வாழைக்குருத்தைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற ஆவலால் விரைந்து வத்தனன். இப்பாட்டின் பொருளையும் சரித நிகழ்ச்சியையும் பின்னர் அப்பூதியார் புராணம் 24, 25, 26 என்ற மூன்று பாட்டுக்களால் விரித்துரைப்பது காண்க.

205