ஏனையோர் யாவரும் நன்மை தீமை கலந்து பங்கிடுவர்; எமது பெருமானாகிய இத்தெய்வம் தீமையாகிய நஞ்சுமுழுதும் தமக்கு வைத்தும், நல்லதாகிய அமிர்தம் முழுமையும் தேவர்க்கு வைத்தும், அந்த நஞ்சினை இவ்வாறு பங்கி உண்டது இதுபோல் வேறு ஒரு தெய்வமும் உண்டோ? ஆதலின் என்க. தங்கி - மனம் பொருந்தி. - (7) ஏணிபோலிழிந்தேறியும் - ஏங்கியும் - பிறர் ஏறவும் இறங்கவும் உதவுவதல்லது, ஏணி, தான் மேல் ஏறுதல் இல்லை; இருந்த பக்கத்தே இருப்பது. தோணி அவ்வாறன்றித் தன்னுட் சார்ந்தாரைச் சாரும் இடத்தில் ஏற்றுவது. ஏணிபோல் இழிந்தேறுதற்குரிய தோணி என்று தொடர்ந்துரைத்தலுமாம். பூணி - அன்புபூண்டு பற்றுவது. ஆணிபோல் ஆற்ற வலியை - வெவ்வேறா ஒத்த இரண்டு பொருள்களைப் பிணைத்து நிற்பது ஆணி. அதனினும் வலிய தாய் மடநெஞ்சும் ஒவ்வாத உயிரை உடலிற் பற்றுவைத்து விடாமற் செய்வது. "பேணியநற் பிறைதவழ்" என்பது (ஆவடுதுறை - தாண்ட) பார்க்க. - ஆணி - உரையாணி என்றலுமாம். - (8) பெற்றம் - எருது - விடை. என் - என்ற வினா மூன்றுது அவைகொண்டு நீ அஞ்சவேண்டா என்ற பொருள் தந்து நின்றன. நம்பிகளது திருக்கோத்திட்டைப் பதிகமும், திருவாசகமும், திருச்சாழலும் பார்க்க. சுற்றி - வலம்வந்து, பிரிவிலாச் சுற்றமாகக்கொண்டு என்றலுமாம். பற்றி - பெரும்பற்றாகக் கொண்டு கொண்டு - விடாதுபற்றி. "பற்றுக பற்றற்றான் பற்றினை" - "பெரும் பற்றப் புலியூர்" - (9) அல்லியான் - பிரமன். அல்லி - பூப்பொதுமை குறித்துப் பூவிற்சிறந்த தாமரை குறித்தது. நாகணைப் பள்ளியான் - விட்டுணு. அறியாத பரிசு எலாம் - பெருந் தேவர்களாலும் அறியமாட்டாத தேவதேவனாகிய இறைமைத் தன்மைகள். சொல்லி - துதித்து. புல்லி - இடைவிடாது பிடித்த. - (10) மிண்டர் - குண்டர் - அமணர். நாயனார் சரிதக் குறிப்பு. உண்டு - உள்ளதாகி. - (11) பாரிடம் சூழ்ந்த - என்க. பாரிடம் - பூதமாய நற்கணம். தாழ்ந்து உனது எளிமையை எண்ணி. "தாழ்வெனுந் தன்மையோடு" (சித்தி). IV திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| மூத்தவனா யுலகுக்கு முந்தி னானே முறைமையா லெல்லாம் படைக்கின் றானே யேத்தவனா யேழுலகு மாயி னானே யின்பனாய்த் துன்பங் களைகின் றானே காத்தவனா யெல்லரந்தான் காண்கின் றானே கடுவினையேன் றீவினையைக் கண்டு போகத் தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபய நானே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- மூத்தவனாய் உலகுக்கு முந்தினான் - முறைமையால் எல்லாம் படைக்கின்றனன் - சார்ந்தார்க்கு இன்னமுதானான் - உற்றாரென் றொரு வரையு மில்லான் - ஞானக்கூத்தன் - என்னிதயம் மேவினான் - பிறரொருவய ரறியா வண்ணம் பெம்மானென்றெப்போதும் பேசு நெஞ்சிற் செறித்தான் - அடியார்கள் வேண்டிற்றீயும் விண்ணவன் - விண்ணப்பங் கேட்டு நல்குஞ் செய்யவன் என்றிவை முதலிய அருட்செயல்களையுடைய திருச்சோற்றுத்துறையுளானே! திகழொளியே! சிவனே! நான் உனக்கு அபயம் - அடைக்கலமாயினேன்,. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மூத்தவனாய் - "முளைத்தானை எல்லாக்கு முன்னே தோன்றி" (தாண் - ஆலவாய்). முறைமை - வினைக்குத் தக்கபடி. துன்பங் களைதல் - பாசம் போக்குதல். கண்டுபோகத் தீர்த்தல் - அத்துவாக்களின் |