பக்கம் எண் :


350திருத்தொண்டர் புராணம்

 

கிழக்கில் நன்னிலம் போகும் சாலை வழியில், நாலூர் மயானத்திலிருந்து கிழக்கில் 10 நாழிகையளவில் உள்ளதுபோலும்.

1482.

பெருவாச மலர்ச்சோலைப் பெருவேளூர் பணிந்தேத்தி,
முருகாரு மலர்க்கொன்றை முதல்வனார் பதிபிறவுந்
திருவாரும் விளமருடன் சென்றிறைஞ்சி, வாகீசர்
மருவாரூ ரெரித்தவர் தந் திருவாரூர் வந்தடைந்தார்.

217

(இ-ள்.) வெளிப்படை. மிகுந்த மணமுடைய சோலைகள் சூழ்ந்த திருப்பெரு வேளூரை வணங்கித் துதித்து, மணம் நிறைந்த கொன்றைமலர்களச் சூடிய முதல்வனாரது பிற பதிகளையும் திருவிளமறையும் போய்ப் பணிந்து, திரு நாவுக்கரசர், பகைவர்களது ஊர்களாகிய முப்புரங்களை எரித்தவராகிய சிவபொ னமர்ந்துறையும் திருவாரூரில் வந்து அடைந்தார்.

217

(வி-ரை.) பெருவேளூர் பணிந்து ஏத்தி - திருப்பெருவேளூரையும் அத்தலத்தில் நீங்காது விளங்க வீற்றிருக்கும் சவிபெருமானையும் பணிந்து எத்தியும். "பெருவேளூர் பிரியாரே" என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரம் காண்க. "பெருவேளூர் வேணினான்" என்பது நாயனார் தேவாரம்.

பதிபிறவும் விளமருடன் சென்றிறைஞ்சி - பெருவேளூரினின்றும் போந்து, பிற பதிகளை வணங்கிக்கொண்டு, பின்னர்த் திருவிளமரை அடைந்தனர் என்பது.

பிறபதிகள் - இடையில் உள்ள திருக்கரவீரம் முதலியன.

திருவாரும் விளமர் - திருவிளமர். திரு - சைவத்திரு. மருவார் - பகைவர். இங்குத் திரிபுராதியரைக் குறித்தது.

தலவிசேடம் :- விளமர். நாயனாரருளிய பதிகம் கிடைத்திலது. தலக் குறிப்புப் பின்னர் வந்துழிக் காண்க.

217

1483.

ஆண்டவர செழுந்தருள வாரூரி லன்பர்கடாம்
நீண்டசடை முடியார்பா னிறைந்தவருள் பெற்றுடையார்
காண்டகுமா ளிகைமாடங் கவின்சிறந்தோங் கிடவெங்குஞ்
சேண்டிகழ்வீ திகள்பொலியத் திருமலிமங் கலஞ்செய்தார்.

218

(இ-ள்.) வெளிப்படை. திருநாவுக்கரசர் எழுந்தருள, அதனை அறிந்த திருவாருரிலுள்ள அடியவர்கள் நீண்ட சடை முடியினையுடை சிவபெருமானது நிறைந்த திருவருளைப் பெற்றுடையார்களாதலின், காண்டற்கினிய மாளிகைகளையும் மாடங்களையும் முன்னையிலும் அழகு சிறந்து விளங்கும்படியும், அதனால் எவ்விடத்திலும் சேணிற்றிகழும் வீதிகள் பொலியும்படியும், திருவுடைய மங்கல அணிகளைச் செய்தனர்.

218

(வி-ரை.) ஆரூரில்.....பெற்றுடையார் - திருவாரூரில் அடியவர்கள் இறைவனுடைய நிறைந்த திருவருளைப் பெற்றவர்கள் என்பது திருவாரூர்ப் பிறந்தவர்கள்; அங்குப் பிறந்த அத்தன்மையாலே முத்திபெறும் தகுதிபெற்றவர்கள் என்ற கருத்தாம். நிறைந்த அருள் - முழு அருள்; அது முத்திபெறுதற் கேதுவானது. "திருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன்", "தண்டியடிகள் திருவாரூர்ப் பிறக்கும் பெருமைத் தவமுடையார்" முதலிய திருவாக்குக்கள் காண்க.

காண் தகு மாளிகை கவின்சிறந்த ஒங்கிட - முன்னமே அவை காட்சிக் கினியனவாய் விளங்குவன; அடியார்கள் மங்கலஞ் செய்து அணி செய்தலின் அவற்றின் வனப்பு மேலும் சிறந்து விளங்கிற்று என்பதாம். மாளிகைகளின் கவின் பற்றித்