| சிலம்பலம் பாவரு சேவடி யான்றிரு மூலட்டானம் புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. |
1 | குற்ற முடைய வமணர் திறமது கையன்றிட் டுற்ற கருமஞ்செய் துய்யப்போந் தேனுக்கு முண்டுகொலோ மற்பொலி தோளா னிராவணன் றன்வலி வாட்டுவித்த பொற்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. |
10 திருச்சிற்றம்பலம் பதிகக்குறிப்பு :- அமணரைச் சார்ந்து துரிசுபட்டேன்; அதனை ஒழித்து விட்டு உய்யும்படி திருவருள் பெற்றுப் போந்தேன். அவ்வமணர்களுங் காணத் திருவாரூர் திருமூலட்டான நாதருடைய தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் எனக்கும் உண்டாகுமோ? அப்பெரும் புண்ணியம் இச்சிறியேனும் பெறலாவ தொன்றோ? இப்பதிக முழுமையும் இக்கருத்தே பற்றியது காண்க. குறிப்பு :- ஆரூரிலும் அமணர்களிருந்தமை தண்டியடிகள், நமிநந்தியார் புராணங்களாலாறிக. பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) அலம்பா - அலம்புதல் செய்து, அலம்புதல் - ஆர்த்தல். புலம்பு - பற்றிநின்று அரற்றுதல். "புலம்பே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே" (குறுந் - அதிகை). நமக்கு உண்டுகொலோ? என்றது நாயனார் தம் முடன் வந்த தொண்டர்களையும் உலகரையும் உளப்படுததி உபதேசித்தது. -(2) அல் உண்ணா - இரவில் உண்ணாத. வல் அமணர் - கல்நெஞ்சுடையோர். சொல்திட மென்று - சொல்லிய பொய்யை மெய்யென்று நம்பி. துரிசு - கெடுதி. புற்று இடங்கொண்டான் - திருவாரூர்த் திருமூலட்டான நாதர்.புற்றே இடமாக வீற்றிருப்பவர். -(3) நின்று உண் - நின்ற நிலையில் உண்ணும். சென்றடையாத் திருவுடையான் - திரு அருட்டிரு - இறைவனது அருள் நிறைவு உயிர்க்குயிராய் எங்குமாகி நிறைந்திருத்தலால் அதனை அடைய நின்ற ஆன்மாக்கள் புடைபெயர்ச்சியின்றி யடைய வல்லார். இடம்விட்டுப் பெயர்ந்து அடையவேண்டாத நிறைவுடைய திருவை - அருளை - உடையவன் சிவபெருமான். அத்திருவாவது பேரானந்தமாகிய பெருஞ் செல்வம். அது யாங்கணும் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏகவுருவாய்க் கிடப்பதாம். ஆதலின் சென்றடைய வேண்டாதாயிற்று. "த்ருக்கரியாதமக மைச்வரியம்" - ஞானக்கிரிய ரூபமான ஐசுவரியம் - என்பது பராக்கியை என்னும் சிவாகமம். "சென்றடையாத திருவுடையானைச் சிராப்பளிளிக் குன்றுடையானை" (குறிஞ்சி). "நண்ணரிய சிவாநந்த ஞானவடிவு" என்புழிப்போலத் தவமில்லாதவராற் சென்றடையப்படாத என்றுரைப்பாருமுண்டு. -(4) மாசினை ஏறிய மேனியர் - குளிக்காததால் அழுக்கு மிகுந்த உடம்புடையவர்கள். "கழுவா வுடலம்" (11- திருமுறை - ஆளுடைய பிள் - அந்). வன்கண்ணர் - இரங்காமனத்தோர். நாயனார்பாற்செய்த தீயமிறைகள் அவரர்களது வன்கண்மையை விளக்கும். மொண்ணர் - கீழ்கள். ஈசன் - சிவன். ஏசறுவேன் - இடைவிடாது கவலைப்பட்டு எங்குவேன். பூசித்தலையுடைய பூசுரர் என்க. பூசனை - பூசித்தலையுடையவன். -(5) அருந்தும்பொழுது உரையாடா - உண்ணும்பொழுது பேச்சின்றி யிருத்தல் அமணர் வழக்கு. மூங்கைகள் போலுண்ணும். -(6) அரன் - பாசங்களை அரிப்பவன் - போக்குபவன். பொருந்தும் தவமுடை - முன்னைத் தவத்தால் முத்தி பெறத் தகுதியானர்களே திருவாரூரில் பிறந்து தொண்டு படுவார்கள். -(6) வெற்றரையே - உடைநீத்து. -(7) பண்ணிய சாத்திரப் பேய்கள் - இறைவனாற் செய்யப்படாது தாமாகப் படைத்துக்கொண்ட சாத்திரங்களைப் பேய்போற் பற்றிக்கொண்டுழல்வார். பறிதலை - தலைமயிரைப் பறித்தல் அமணர் வழக்கு. அருள் பெற்றேற் |