பக்கம் எண் :


360திருத்தொண்டர் புராணம்

 

லொட்டேன். 7-வது பாட்டின் கருத்தை மேலும் வலியுறுத்தியது. வளைந்து கொள்ளுதல் - தப்பவிடாமல் நாற்பும் சுற்றிக் கொள்ளுதல். இருந்தேன் - வளைத்து கொண்டதுமன்றிக் காவலுமிருந்தேன். வலிசெய்து - வலிந்து - வம்மை செய்து. "மறையவன் வலிசெய்யாமல்" (203). அளை சேற்றினுள் நண்டுவளை. புகுதந்த - புகுந்த. அலவன் - நண்டு. திளைக்கும் - மகிழும். -(10) இரணியன் ஆகம் கீண்டவன் - விட்டுணு. தழல் - நெருப்புத்தூண் என்ற பொருளில் வந்தது. பல்லாண்டிசை கூறுபத்தர்கள் பாடுவார் - பணிவார் என்று கூட்டுக. "ஏத்தொலி யெங்கும் குழாம் பெருகி, விழவொலி விண்ணளவுஞ் சென்று விம்மிமிகு திருவாரூரில், மழவிடையார்க்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப் பிறந்த, பழவடியாரொடுங் கூடியெம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே" - என் சித்தத்துள் புக்கு என்க. "சிற்றம்பலத் தாடி பாதமென் னெஞ்சு ளிருக்க - நாரண னான்முகன் - காணவல்லரோ?" (கோயில் - குறுந்); "திரு மாலொடு நான்முகனுந் தேடித் தேடொணாத் தேவனை யென்னுள்ளே, ‘தேடிக் கண்டு கொண்டேன்" (அங்கமாலை). பத்தர்களது சித்தத்துள் தேடி என்றுரைத்தலுமாம்.

வேறு

1489.

 செய்யமா மணியொளிசூழ் திருமுன்றின் முன்றேவா சிரியன் சார்ந்து
"கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலு மாரூ ரரைக்
 கையினாற்றொழாதொழிந்துகனியிருக்கக்காய்கவர்ந்தகள்வனே" னென்
 றெய்தரிய கையறவாற் றிருப்பதிக மருள்செய்தங் கிருந்தா ரன்றே.

(இ-ள்.) செய்ய...சார்ந்து - செம்மணிகளின் பேரொளி சூழும் திருமுற்றத்தில் முன்பு உள்ள தேவாசிரிய மண்டபத்தைச் சார்ந்து; வாகீசர், கொய் உலாம் மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை - அரும்புகள்மிக்க பூச்சோலைகளில் குயில் கூவவும் மயில்கள் அசையவும் உள்ள திருவாரூரில் எழுந்தருளியுள்ள பெருமானை; கையினால்...என்று - கைகள் கூப்பித் தொழாதொழிந்ததனால் நான் கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வன் போன்ன்றேன் என்ற கருத்தினால்; எய்தரிய...இருந்தார் - அடைதற்கரிய மிகுந்த துன்ப நிலையினால் திருப்பதிகத்தைக் கட்டளையிட்டு அங்கு எழுந்தருளி யிருந்தனர். அன்று - ஏ - அசை.

(வி-ரை.) மணியின் செய்ய ஒளி என்று கூட்டுக. செய்யமணி - செம்மணி - இரத்தினம். இவைகள் அங்குத் திருமுன்றிலில் விளைந்து அங்குச் செல்லும் அடியார்களால் விரும்பப்படாமற் கிடப்பனவும், தேவாரியனின் அடியார்களின் அருணோக்கம் பெறக் காத்திருக்கும் மால் முதலிய வானவர்களின் அணிகளினின்றும் விழந்தனவுமாகிய மணிகள். "மாவா ழகத்து மான்முதல் வானவர், ஒவா தெங்கு நிறைந் துறைந் துள்ளது" (137) என்பதும். பிறவும் காண்க.

கொய்யுலாம்...கள்வனேன் - இது அத்திருப்பதிகத்தின் முதலும் கடையுமாகிய இரண்டடிகளை அவ்வாறே எடுத்துத் தலைப்பெய்து கொண்டு பதிகக் கருத்தினை எடுத்துக் காட்டியவாறு. இவ்வாறு பதிகத்தின் இரண்டடிகளை இருந்த வாறே எடுத்துத் தலைப்பெய்து காட்டிய இடம் இது ஒன்றேயாகும்.

கொய் - மலரரும்புகள். கொய்யப்படும் அரும்புகளைக் கொய் என்றார். உலாம் - நிறைந்த.

குயில் கூவ மயில் ஆலும் - குயில்கள் இனிமையாய்க் கூவ அதற்குத் தக்கவாறு மயில்கள் ஆடி அசைய. ஆலுதல் - அசைந்தாடுதல்.