(9) வீடு அரங்காக நிறுப்பான் - முத்தி யுலகத்தை அடியார் தங்குமிடமாக நிலை பெறச் செய்பவன். வேதி தொடர விசும்பினை ஓடு அரங்காக வைத்தான் - தமது அருட்கூத்தை யியற்றுதற்குச் சத்தியையிடமாகக் ொண்டவன். விசும்பு - ஈண்டுச் சத்தியை உணர்த்தி நின்றது. காரிகையார்கள் - நினைக்குமுயிர்கள். உருவகம். ஓடு அரங்கத்திடை - "என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் போந்து புக்கு" என்ற கருத்து. - (10) பை - நச்சுப்படம் என்றலுமாம். சுடர் விடுதல் - அரவின் மணியாலா கயஞ்சு வது. கை அஞ்சு நான்கு உடையான் - இருபது கைகளையுடைய இராவணன். நைான்குடையானைக் கால்விரலால் அடர்த்தான் என்றது இறைவனது அளவிலாற்றலினை இலேசுபடக்காட்டும் அணிநயம். புகழ்புரிதல் - புகழ்களை இடைவிடாது சொல்லுதல். "இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார்" (குறள்). ஐயஞ்சு - 25; ஆன்ம தத்துவங்களும் அவற்றின் காரணமான பிரகிருதி மாயையும். புருடனைச் சேர்த்தலுமாம். பலவும் - திருவாரூரின் மற்றும் பல பதிகங்களின் குறிப்புக்கள் ஈண்டுத் தரப்படுகின்றன. IV திருச்சிற்றம்பலம் | பண் - சீகாமரம் |
| சூலப் படையானைச் சூழாக வீழருவிக் கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப் பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே. |
1 | வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனைத் துஞ்சிரு ளாட லுசந்தானைத் தன்றெண்டர் நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித் தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே. |
8 | மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலாற் றுஞ்சாப்போர் வாளரக்கன் றோணெரியக் கண்குருதிச் செஞ்சாந் தணிவித்துத் தன்மார்ப்ற் பால்வெண்ணீற் றஞ்சாந் தணிந்தானை நான்கண்ட தாரூரே. |
11 திருச்சிற்றம்பலம் பதகக் குறிப்பு :- சூலப்படையான் - அக்கணிந்த அம்மான் - சேயவுலகமுஞ் செல்சார்வுமானான் - ஆழித்தேர்வித்தகன் - வஞ்சனையார் ஆர்பாடுஞ் சாராத மைந்தன் - பெருங்கடனஞ் சாரமுதாவுண்டான் - ஆடுந்தீக் கூத்தன் - என்பன முதலான தன்மைகளால் அறியப்படும் இறைவனை நான் கண்ட இடம் ஆரூரேயாம். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சூழாக வீழ் அருவி - கங்கையின் நீர் வீழ்ச்சி. தோட்குன்று - உருவகம். ஆலம் - கல்லாலமரம். - (2) பொலிவுடைத்தாய் - அக்கு அணிந்த - என்று கூட்டுக. உடைத்தாய் - உடையதாகுமபடி. அக்கு - உருத்திராக்கம். என்புமாலையுமாம். தாழ்வடம். கொடி எடுத்த கோவணம் - கொடிபோல்தண்டில் தூக்கி எடுத்த கோவணம். பிட்சாடணரது திருக்கோலம். அமர்நீதியார் புராணத்துள் எடுத்துவந்த பிரமசரியக்கோலம் காண்க. - (3) சேய - செம்மையாகிய. செல் சார்வு - சென்று சாரும் பொருள். "சார்புணர்ந்து" (குறள்). மாயப் போர் வல்லான் - மாயையை வென்றவன். ஆயம் - கூட்டம். - (4) ஏறு - ஏற்றம் - மா - ஏறி - இடப ஏற்றினை உயர்ந்த ஊர்தியாக மேல்கொண்டு ஏறி. ஆறு ஏற்ற - |