பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்373

 

ஐந்துவேலிப் பரப்புடையனவாகிய திருவாரூர். - (8) பிணங்குடைச் சடை - பிணங்கியது போலப் பின்னிய சடை. ஓதி - ஓதியை உடையவன். ஓதி - கூந்தல். - (9) நகலிடம் பிறர்கட்காக - பிறர் கண்டு நகைக்க; நான்மறையோர்கள் ... இருவர் - மறையவர் தங்களுக்கு இவர் புகலிடமாவார் என்று அடையினும், தாம் அவ்வாறு புகல்தரும் ஆற்றலிலராகிய இருவர் - பிரம விட்டுணுக்கள். பிறர் நகலிடமாதல் - தாமே வேறு புகலிடம் தேடும்இவ்விருவரைத் தஞ்சமென்று அடைகின்றார்களே என்று நகுதல். இகல் இடமாக - இகல் - பூசல் - புரியும் இடத்தில். - (10) ஆயிரம் - சொற்பொருட் பின்வருநிலை. ஆயிரம் - அனேகம் என்னும் பொருளில் வந்தது. மட்டித்து - அசைத்து.

XI திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

உயிரா வணமிருந் துற்று நோக்கி யுள்ளக் கிழியி னுருவெ ழுதி
யுயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தா லுணரப் படுவாரோ டொட்டி வாழ்தி
பயிரா வண்மேறா தானே றேறி யமரர்நா டாளாதே யாரூ ராண்ட
வயிரா வணமேயென் னம்மா னேநின் னருட்கண்ணா னோக்காதா ரல்லா தாரே.

1

முன்ன மவனுடைய நாமங்கேட்டாள்! மூர்த்தியவனிருக்கும் வண்ணங்கேட்டாள்;
பின்னை யவனுடைய வாரூர் கேட்டாள்; பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்;
அன்னையையு மத்தனையு மன்றே நீத்தாள்; அகன்றா ளகலிடத்தா ராசா ரத்தைத்
தன்னை மறந்தாடன் னாமங் கெட்டாள்; தலைப்பட்டா னங்கை தலைவன் றாளே.

7

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- திருவாரூரர் சிவயோக வழியால் தம்மை உணர்ந்துள் எவர்களோடு இரண்டற ஒட்டி வாழ்பவர்; அவரது அருட் கண்ணால் நோக்கப் படாதவர்கள் அல்லாதவர்களே. அவர் எல்லாத் தேவர்களும் வந்து பூசை செய்ய இங்கு எழுந்தருளி யிருக்கின்றார்; ஆதலின் அடியேன் செய்யும் குற்றேவல் கூடுமோ? அவர் பலதலங்களிலும் விளங்கித் திருவாரூரிற் புகுந்து நிலை பெற்றுள்ளார். ஆரூர்ப் பெருமானுடைய பெயரையும் பின் அவரது வண்ணத்தினையும் பின் அவரிருக்கும் ஊரையும் கேட்டு அவருக்கே அடிமையாகி உலகத்தைவிட்டுத் தன்னையும் மறந்து அவர் தாளின் கீழ்த் தலைப்படுத்ல் பக்குவப்பட்ட ஆன்மாக்களின் தன்மை. குறிப்பு :- இப்பதிகம் முழுதும் சிறந்த பல ஆழ்ந்த கருத்துக்களையுடையது.

பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) உயிராவணம் இருந்து - இடைகலை பிங்கலை என்ற இரண்டு வழியிலும் சென்றுவரும் மூச்சைத் தடுத்து உயிராதபடியிருந்து. உயிர்த்தல் - மூச்சு விடுதல் : உற்றுநோக்கி - தியானத்தினால் மனத்தை ஒரு குறியில் ஊன்றி; உள்ளக்கிழியில் உரு எழுதி - உள்ளத்தில் உருவம் பதியும்படி தீட்டி. "உருவணத் தவமாமே" (தேவா.) உயீர் ஆவணம் செய்திட்டு - ஆன்ம சமர்ப்பணம் செய்து; ஆவணம் செய்தல் - அடிமைச் சீட்டு எழுதி ஒப்புவித்தல்; உணரப்படுவார் - இவ்வாறு உணரப்பெறுகின்ற சிவயோகியர். ஒட்டி வாழ்தி - பண்டைப் பரிசாகிய பிரிவறியா நிலை வெளிப்பட விளங்குவாய் என்பதாம். ஒட்டுதல் - இரண்டறக் கூடுதல். "ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்" (சீகாமரம் - மயிலை - 1); வாழ்தி - வாழ்வாய்; அயிராவணம் - இரண்டாயிரம் கொம்புகளையுடைய யானை. ஆன் ஏறு - இடபம்; அயிராவணம் ஏறாது ஆன் ஏறு ஏறி என்றது யானையாகிய ஊர்தியை விரும்பாது என்றபடி. "கடகரியும் பரிமாவும் தேருமுகந் தேறாதே, யிடபமுகந் தேறியவாறு" (திருவா. சாழல் ) அமரர் நாடு ஆளாதே - ஆரூர் ஆண்ட - தேவலோக இருக்கையை விரும்பாது இந்நிலவுலகப் பதியாகிய திருவாரூர் ஆட்சியை விரும்பி எழுந்தருளிய. "அயிராவணமே - அயிர் -