தாய்தந்தையரை விட்டுப், பின், உலகப் பற்றுக்களையும் விட்டுத், தன் தன்னிலையையும் மறந்து, தன் பேர் கெட்டு, அவனது அன்பின் நிறைவொன்றிலேயே ஈடுபட்டு அடங்கிக் கிடக்கின்றாள் என்பது உயிர்கள் படிப்படியாய் இறைவரை அடைந்து சிவானந்தத்திற் றிளைத்து நிலைக்கும தன்மையை அறிவிக்கின்றது. கண்ணப்பநாயனார் சரிதத்தில், காளத்திநாதர் பெயரைக் குடுமித்தேவர் என்றும், அவர் இருப்பது அந்த மலை என்றும, அவர் காட்சி நல்ல காட்சி என்றும் நாணன் சொல்லக் கேட்டுத் திண்ணனார், சென்று கண்டு தமது முன்னைய நிலை எல்லாம்விட்டு அவரை அடைந்து கண்ணப்பனாராகிய அவர் தாளிற் றலைப்பட்ட வரலாற்றை இங்கு வைத்துக் கண்டுகொள்க. தன்னை மறத்தல் - நிட்டை கூடியவர்களின் நிலை. நாமங் கெடுதல் - சீவன் என்பது சிவன் என்றாதல். கெடுதல் - முதல் குறைதல். "ஓர்மாத்திரை யளவென் பேரிற் குறுகினேன் பின்" (குமர குருபரர்). பிச்சி - பித்தி - பித்துடையவன். இப்பாட்டால் நாமம் மாத்திரம் கேட்டல் என்ற உத்தேசமும், அதன்மேல் விளையும் வண்ணங்கேட்டல் என்ற இலக்கணமும், அதன்மேல் விளையும், ஆரூர்கேட்டல் என்ற பரிட்சையும், அதன்மேல் விளையும் பித்தியாதல் என்ற தெளிதலும் என்ற நான்கு பகுதியும் உபதேசிக்கப்பட்டதென்ப. "நங்கை முதற்கண் தலைவனை உத்தேச முறைபற்றி உணர்ந்தனள்; அதனால் அவனுக்கு உளதாய இலக்கணம் இவை என இடைவாய் உணர்ந்தாள்; அதனானே அதனைப் பரிட்சித்துணர்ந்தளன்; அதனாமோயையோடு காரணக்கடவுள் வசப்படா தொழிந்தனள்; அதனானே சீவத்துவம் நீங்கிச் சிவத்வமுடையளாயினள்; அதனானே, இனி, அத்தலைவன்றாளைத் தலைப்படுதல் ஒருதலை என்பதாம்" என்றும், "இதனால் தல் கேட்டல் முதலியவற்றி னியல்பும், அவற்றினிகழும் அனுபவமாதுச் சிவானுபவம் சுவானுபதிகமாமாறு அடங்கி நிற்கு முறையும், பாச வீடு, சிவப்பேறு என்பவற்றின் இயல்பும் கூறியவாறு" என்றும் வருவன ஸ்ரீ செப்பறைச் சுவாமிகள் எழுதிய உரைக் குறிப்புக்கள். - (8) கூடுமே...ஏவல் - சிறுமையுடைய அடியேன் செய்யும் குற்றேவலும் சேருமோ? குறையுண்டே - உண்டோ?, ஏகாரம் வினா. - (9) ஒற்றித்து - பற்றித்தேடி. - (10) சேற்றூர் - இராப்பட்டீச்சரம் - மணற்கால் - சாத்தங்குடி - வைப்புத்தலங்கள். பழையாறு - அமர்நீதி நாயனாரது தலம். நல்லூர் - திருநல்லூர். "நல்லூரே நன்றாக நட்டமிட்டு" என்றது நாயனாருக்குத் திருவடி தீக்கை செய்த குறிப்புத்தர நின்றது. தலையாலங்காடு - பாடல் பெற்ற தலம். இங்குக் கூறியவை திருவாரூருக்கு அணிமையில் உள்ளன. புக்கார் - பொழுதும் வரும்வழியும் குறித்தபடி. - (11) கருத்துத்தி - கருமையுடைய படம். கருமை இங்குக் கரியவிடத்தை யுணர்த்திற்று. ஆகுபெயர். திருத்துருத்தி - திருப்பூந்துருத்தி. இங்குக் கூறியன சத்தத்தானத் தலங்கள். அரிப்பெருத்த - அரி - சிங்கம். அரியினும் பெருத்த. பெருத்தலாவது வீரம் முதலியவற்றால் மிகுதல். அடரா - அடர்க்க - அடைவோரது வினைகளைப் போக்க. பிறவினை. XII திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| பாதித்தன் றிருவுருவிற் பெண்கொண் டானைப் பண்டொருகாற் றசமுகனை யழுவித் தானை வாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை வன்கருப்புச் சிலைக்காம னுடலட் டானைச் |
|