செய்தல் இறைவனை யின்றியமையாத தாதலின், சோதியா யிருளாகி என்றார். "சோதியு மாயிரு ளாயினார்க்கு" (திருவா.) குறிப்பு : - இப்பதிகத்தில் ஆறு பாட்டுக்களே கிடைத்துள்ளன! XIII திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| நிற்றினையு நெற்றிமே லிட்டார் போலு நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலுங் காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங் கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலுங் கூற்றினையும் குரைகழலா லுதைத்தார் போலுங் கொல்புலித்தோ லாடைக் குழகர் போலும் ஆற்றினையஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும் துணியாரூர்த் திருமூலட் டான னாரே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- அணியாரூர்த் திருமூலட்டானனாரே, நீற்றினையு நெற்றிமேலிட்டார்; பிணியுடைய அடியாரைப் பிணிதீர்ப்பர்; பேசுவார்க் கெல்லாம் பெரியார்; ஞானப்பெருங் கடற்கோர் நாதர்; நாட்டகத்தே நடைபலவும் நவின்றார்; சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார்; செல்கதிதான்கண்ட சிவனார்; அடியாரடிமையுகப்பார்; ஊழி பல கண்டிருந்தார்; கொன்றாகிக் கொன்ற தொன் றுண்டார்; உருகாதார் உள்ளத்து நில்லார்; உகப்பார்தம்மனத்தென்றும் நீங்கார்; பிறப்பிடும்பை சாக்காடொன்றில்லார்; அருகாக வந்தென்னை யஞ்சே லென்பார்; திசைய னைத்துமாய் அனைத்து மானார்; ஆயிரம் பேரார்; இவை முதலிய பல தன்மைகளாலறியப்படுபவர். பதிகப் பாட்டுக் குறிப்பு :- காற்றினையும் - எல்லைப்பொருள்பட ஐந்தனுருபாய் வந்தது; உருபு மயக்கம். நடந்தார் - நடத்துவித்தார் எனப் பிறவினையாக்கி உரைத்தலுமாம். கண்ணின்மேற் கண் ஒன்று - நெற்றிக்கண்; மேல் நோக்கியது. - (3) பிணியுடைய் அடியாரைத் தீர்ப்பர் - நாயனாரது சரிதக் குறிப்பு. - (4) ஓடு - அயன் கபாலம். ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தது - சிவமாயிருந்து பின் சத்தி முதலிய வடிவமாய் விரிதல். நடை பலவும் நவின்றார் - உயிர்கள் பக்குவ பேதத்துக் கேற்றபடி அறிந்து ஒழுகும்படி பல சமய நெறிகளையும் அருளினர். "ஆறு சமயத் தவரவரைத் தேற்றுந் தகையன" (தேவா) ஞானப்பெருங் கடற்கோர் நாதர் - அவ்வாறு பல நெறியும் கற்பித்தாரேனும் எல்லையற்ற ஞானங்களுக்கெல்லாம் முதல்வர். காமரங்கள் - பண்களின் பொதுமை குறித்தது. ஆட்டு - திருமஞ்சனம். - (5) கானம் - அழகு - மணம். ஆனத்து முன் எழுந்தாய் - ஆ என்னும் பசுக்களைக் குறிக்கும் எழுத்துக்கு முன் எழுத்தாகிய அகர வுயிர்போல. "அகர வுயிர்போ லறிவாகி யெங்கு, நிகரிலிறை நிற்கு நிறைந்து" ஆனத்து - ஆவின் எழுத்துக்கு ஆகுபெயர்; நான்கனுருபு தொக்கது. நின்றார் - தங்கி - பதிந்து - கிடந்தார். "நின்ற திருத்தாண்டகம்." - (6) சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் - சொல்லும் அதனால் குறிக்கப்படம பொருளும் என்னும் இருவகைப் பிரபஞ்சம். "உரையின் வரையும் பொருளி னளவும், இருவகைப் பட்ட எல்லை" (கோயினான் - மாலை). நாமனையும் - நாவிற் பொருந்த நவிலப்படும். "உண்ணின்ற நாவிற் குரையாடியாம்" தேவா. - (7) செல்கதி தான் கண்ட சிவனார் - உயிர்கள் செல்லும் கதிகளை வைத்தவர். உயிர்கள் காணும் பொருட்டுத் தான் கண்டவர் என்றலுமாம். - (8) இந்திரம் - இந்திரலோகம். அந்தரத்த பொடி - திருநீறு. தூத்தூய - தூயவற்றுக் கெல்லாம் தூய்மையுடைய. - |