பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்379

 

நாயே னயர்த்தவாறே" என்ற இதனையும் ஒப்பு நோக்குக. இத்திருப்பதிகம் முன்னர் அருளிச்செய்துது போலும்.

திருமூலட்டானம்

XV திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்கா
         ணேழ்கடலு மேழுலகு மாயி னான்காண்
வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண்
         வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட
அம்பொன்றான் மூவெயிலு மெரிசெய் தான்கா
         ணனலாடி யானஞ்சு மாடி னான்காண்
செம்பொன்செய் மணிமாடத் திருவாரூரிற்
         றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.

1

பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்
         பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண்
மறப்படுமென் சிந்தைமரு ணிக்கி னான்காண்
         வானவரு மறியாத நெறிதந் தான்காண்
நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல
         நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்குந் திருவாரூரிற்
         திருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.

5

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- திருவாரூர்த் திருமூலட்டானத்து எம் செல்வம் தானே எமது பந்தவல்வினைநோய் தீர்த்திட்டான் - ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான் - என்றும் பிறப்போ டிறப்பில்லாதான் - என் சிந்தைமருள் நீக்கினான் - மாலுக்குச் சக்கரம் அருள் செய்தான் - நன்றருளித் தீதகற்றும் நம்பிரான் - வெள்ளேறு நின்றுலவு கொடியினான் - வஞ்சகர்பா லணுகாத மைந்தன் என்றித் திறங்களா லறியப்படுபவன்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பந்தவல்வினைநோய் - பந்தம் செய்யும் வலிய வினையாகிய நோய். - (2) அக்கு - எலும்பு - வடம். - (3) முகிலனைய கண்டம் - உருவுவமம். பயனுவமமுமாம். - (4) கற்பகம் - வேண்டுவார் வேண்டுவதே ஈயும் தன்மை குறிப்பு. - (5) பிறப்போ டிறப்பென்று மில்லாதான் - பிறப்பிறப்பாதியிர்க்குணமில்லாதவன் (சுலோக பஞ்). மறப்படும் - மறத்தினிற்படும். மறவியிற்பட்ட - மறந்த - அயர்த்த - என்றலுமாம். மருள் நீக்கினான் - நாயனார் சரித அகச்சான்று. வானவரும் அறியாத நெறி - முத்திநெறி. வாராவுலக நெறி. நாளும் வானோர் சிறப்போடு பூசிக்கும் - தேவருலகத்தினின்றும் இங்குப் போந்தமை கருதிகத் தியாகேசப் பெருமானைத் தேவர்கள் இங்குவந்து பூசித்து விழாவும் கொண்டாடும் குறிப்பு. சிறப்பு - விழா. பூசை - நித்தியம். - (6) தருணேந்து சேகரன் - இளைய பிறையைச் சூடியவன். தருணம் - இளமை. இந்து - மதி. தருண இந்து - தருணேந்து என்றாயது வடமொழி முடிபு. - (7) தீதகற்றி நன்றருளும் என மாற்றி உரைத்துக் கொள்க. - (8) பொன் நலத்த - பொன்னிறம் வாய்ந்த. - (9) ஒளி வளர - ஒளி பொருந்த. உலகுக்கு ஒளி தருபவன். புண்டரிகக்கண்ணான் - செந்தாமரைக் கண்ணன். திருமால். பூவின்மேலைப் புத்தேள் - பிரமன். புராணன் - பழமை யுடையோன். குறிப்பு :- இத்திருப்பதிகமும், "ஆர்த் திருமூலட்டான