பக்கம் எண் :


380திருத்தொண்டர் புராணம்

 

னாரே" என்றதும், ஆரூர்ப் போற்றித் திருத்தாண்டகப் பதிகமும் திருமூலட்டான நாதரைப் பற்றியன.

XVI திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

இடர்கெடுமா றெண்ணுதியே னெஞ்சே நிவா
         வீண்டொளிசேர்கங்கைச் சடையா யென்றுஞ்
சுடரொளியா யுள்விளங்கு சோதீ யென்றுந்
         தூநீறு சேர்ந்திலங்கு தோளா யென்றுந்
கடல்விடம துண்டிருண்ட கண்டாவென்றுங்
         கலைமான் மறியேந்து கையா வென்றும்
அடல்விடையா யாரமுதே யாதீ யென்று
         மாரூரா வென்றென்றே யலறா நில்லே.

1

நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவா
         நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்
         பூமாலைபுனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
         சங்கரா சயபோற்றி! போற்றி! யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் மாதி யென்றும்
         ஆரூரா வென்றென்றே யலறா நில்லே.

3

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- தமது நெஞ்சினை முன்னிலைப்படுத்தி நன்னெறியை உபதேசிப்பது போலக் கூறி; உலகரை நல்வழிப் படுத்தியது. நெஞ்சே! உனது துன்பங்கள் நீக்குதலை எண்ணுவாயாகில் நித்தலும எமது பெருமானுடைய கோயில்புக்குச் சரியை நெறியில் மாற்றை எண்ணுவாயாகில் நித்தலும் எமது பெருமானுடைய கோயில்புக்குச் சரியை நெறியில் நின்று போற்றி ஆரூரா என்றென்றே கதறு!; ஆரூரானை ஏத்துதலே புண்ணியமும் நன்னெறியுமாவது. பாவங்களைப் பாற்றிப், பரகதிக்குச் செல்லும் பரிசினை வேண்டினால் "உற்றவரும் உறுதுணையும் நீயே; உன்னையல்லா லொருதெய்வ முள்கேன்; ஆரூர" என்றே போற்று; "ஆரூர் எம் ஐயா! கற்பகமே!" என்றென்றே கதறா நிற்பதுவே உஞ்சுபோக வழியாவது. ஆரூரானை ஏத்தினால் பாசத்தைப் பற்றறுக்கலாகும் : அவனை நாடோறும் நவின்றேத்துவாயாக!

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) இடர் - பிறவித்துன்பம்; இம்மையில் வருவன. மேல்வரும் பாட்டில் தீவினைகள் என்றது அவற்றுக்குக் காரணமான முன்னை வினைகளை. - (2) புரந்தரன் - இந்திரன். தோள் துணிந்தது - தக்கன் வேள்வியிற் செய்தது. "இந்திரனைத் தோணெரித்து" (திருவாசகம்). - (3) இத்திருப்பாட்டுச் சிவநெறி நான்கனுள் முதலாவதாகிய சரியையினை நன்கு விளக்குவது. "ஆமாறுன் றிருவடிக்கே" என்ற (சதகம் - 14) திருவாசகமும் காண்க. இதுவே தாசமார்க்கம் - அடிமைநெறி - எனவும்படும். "தாசமார்க்கம் சாற்றில்" (8 - 19) என்ற சிவஞான சித்தியாரும் பார்க்க. இப்பாட்டினை ஒதிப் பயின்று இதன்படி ஒழுகிவரின் யாவரும் சிவாநந்தப் பெரும் பேறுபெறுதல் திண்ணம். - (4) புண்ணியம் - நன்னெறியால் வருவது. நுந்தாத - கெடுதலில்லாத. தூண்ட வேண்டாத என்றலுமாம். "நுந்தாத வொண்சுடரே" (நம்பிகள்). - (5) இழைத்த நாள் - ஒருவனுக்கு அமைக்கப்பட்ட ஆயுள். கடப்பதன்று - ஆயுள் எல்லையினை யாராலும் கடக்கமுடியாது. ஆதலின்