அந்நாட்கள் செல்லுமுன் கூறு. கடப்பதென்றால் - கூறு என்று பாடங்கொண்டு காலனைக் கடத்தல் வேண்டினால் கூறுக என்றுரைப்பாருமுண்டு. - (6) சே - இடபம். - (7) பாற்றுதல் - அழித்தல். - (8) உய்ந்து என்பது உஞ்சு - என வந்தது. - (9) தேசத் தொளி விளக்கு - உலகில் விளக்குகளுக் கெல்லாம் ஒளி தருபவன். நேசம் - அரனிடத்தும் அடியாரிடத்தும் அன்பு. - (10) போது போக்கி - காலத்தை வீணே கழித்து. அடி என்தலைமேல் வைத்தாய் - நாயனாருக்குத் திருநல்லூரில் இறைவர் திருவடி சூட்டிய சரிதத்தின் அகச்சான்று. குறிப்பு :- இப்பதிக முழுமையும் நாடோறும் அன்பர்கள் பாராயணஞ் செய்தல் நன்மை தரும். XVII திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| ஒருவனா யுலகேத்த நின்ற நாளோ வோருருவே மூவுருவ மான நாளோ கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ மருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந் திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. |
1 | பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளு நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான் வேடனாய் வில்லாங்கி யெய்த நாளோ விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணிதிகழு மம்பலத்தே மன்னிக் கூத்தை யாடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ வணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகப் குறிப்பு :- திருவாரூரில் இறைவர் வெளிப்பட எழுந்தருளிய காலத்தின் தொன்மையும், சிருட்டியின் அநாதி முறைமையும் குறித்தது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஒருவன் - சிவம். ஓருருவே மூவுருவமான - உருவத்திருமேனி கொண்ட முதல்வன் பிராகிருத புவனத்திலுள்ள அரனரியயன் வடிவங்கட்கு மூலமாகிய முத்தொழிற் றிருமேனி தாங்கியிருந்தலைக் குறித்தது. "மூவிலை யொருதாட் சூல மேந்துதல், மூவரும் யானென மொழிந்த வாறே" (ஒற்றி - ஒருபா - 6). ஆளுடைய பிள்ளையாரது நட்டபாடை - திருவிராகம் - திருச்சிவபுரம் 1, 2, 3 பாட்டுக்கள் பார்க்க. கருவன் - சங்காரமூர்த்தி. மருவன் - பொருந்துபவன். சிருட்டி செய்தலைக் குறித்தது. திரு - சிற்சத்தி. முன்னோ பின்னோ - திருவாரூரின் பழைமை குறித்து நின்றது. அநாதி என்றபடி. - (2) வானவரை வலியமுதம் ஊட்டி அந்நாள் நிலைபேறு பெறுவித்து என்றது கற்பாந்தத்தில் தேவர்களுக்கு மூவாப்பதந் தந்தது. கடல் நஞ்சுண்ட செய்தி ஒரு காலத்து நிகழ்ந்த செய்தி. அது பின்னர், அலைசாமே அலைகடனஞ் சுண்டநாளோ என்றதனால் உணர்த்தப்பட்டது. அலைசாமே - வருந்தாமல். - (3) மாடமொடுமாளிகைகள் மல்கு - "செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கி" (கோயில் - குறிஞ்சி - பிள்ளையார்.) மாடம் - இறைவனது பொன்னம்பல மேரு. மாளிகைகள் - ஏனைத் தில்லைவாழந்தணர்களின் இருக்கைகள். கூத்தை ஆடுவான் புகுவதற்கு - |