அடியில் வைத்த இராவணன். திரண்ட கல் போன்ற தோள்வைத்தவன் என்றலுமாம். அங்குலி - விரல். அடித் தாமரை என்னை ஆண்டனவே; அவற்றைப் போற்றிப் புகை காட்டிச் சிறுகாலை சங்கொலிப் பித்திடுமின் என்று கூட்டி உரைக்க. திருவாரூர் அரனெறி திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| எத்தீ புகினு மெமக்கொரு தீதிலை, தெத்தே யெனமுரன் றெம்மு ளுழிதர்வர் முத்தீ யனையதோர் மூவிலை வேல்பிடித், தத்தீ நிறத்தா ரரனெறி யாரே. |
1 | விரமும் பூண்பர் விசயனொ டாயதொர், தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர் பாரமும் பூண்பர் பைங்கண் மிளிரர, வாரமும் பூண்ப ரரனெறி யாரே. |
2 | பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை, மாலையுங் கண்ணியு மாவன சேவடி காலைய மாலையங் கைதொழு வார்மன மாலய மாரூ ரரனெறி யார்க்கே. |
8 | முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பின், பொடிவண்ணந் தம்புக மூர்தியின் வண்ணம் படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ் செஞ்ஞாயி றடிவண்ண மாரூ ரரனெறி யார்க்கே. |
9 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- ஆரூர் அரனெறியார் எம்முள் உழிதர்வர்; எத்தீ புகினு மெமக்கொருதீதிலை; அவர் அன்பு பட்டவர் பாரமும் பூண்பர்; அவரை நாடவல்லார் வினைவீட வல்லார்; தொழுவார் மனமே யாலயமாக அவர் வீற்றிருப்பர்; அவர் திருவடி செஞ்ஞாயிற்றின் வண்ணம்; அவர் அருள் மன்னர். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) தீ - தீமை; உழிதர்வர் ஆகலின் தீதிலை என்க. எத்திசை - என்பதும் பாடம். உழிதருதல் - எவ்வாற்றானும் நீங்காது இருத்தல். - (2) அன்பு பட்டவர் பாரம் - அன்பர்க்கு வரும் இன்பத் துன்பங்கள். - (3) துஞ்சாத கண்ணார் - கண் இமைத்தலில்லாத தேவர்கள். "புத்தமிர்த போகம் புசித்து விழியிமையாத பொன்னாட்டும்" (தாயுமானார்). - (5) துற்றவர் - ஊனுண்டவர். கோவணம் தற்றவர் - கோவணம்உடுத்தவர். ஒளி - சிவஞானவொளி. - (7) வீட - வீட்ட. - (9) முடி - சடை. பொடி - திருநீறு. ஊர்தி - விடை. - (11) பொருள் மன்னன் - குபேரன். புட்பகம் - குபேரனது தேர். மருள்மன்னன் - இராவணன். திக்குவிசயஞ்செய்து குபேரனது புட்பகத் தேரை இராவணன் பறித்துக் கொண்டனன் என்பது வரலாறு. திருவாரூர்த் திருமூலட்டானமும் அரனெறியும் திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| பொருங்கைமத கரியுரிவைப் போர்வை யானைப் பூவணமும் வலுஞ்சுழியும் பொருந்தி னானைக் கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக் காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை யிருங்கனக மதிலாரூர் முலட் டானத் தெழுதருளி யிருந்தானை யிமையோ ரேத்தும் அருந்தவனை யரனெறியி லப்பன் றன்னை யடைந்தடியே னருவினைநோ யறுத்த வாறே. 1 |
|