கள் - இறைவன் உயிர்களுக்குச் செய்யும் அருட்குணங்கள். அடியார் குணங்கள் என்றலுமாம். பிணங்கி ... பிதற்றுவார் - அன்பு மீதூர்ந்த நிலையில் செயல்கள். "பாலருட னுன்மத்தர் பிசாசர்குண மருவி" (சித்தி. 8. 32). இவை பத்தர் குணம். "பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும், பத்தர் சொன்னவும் பன்னப்படுபவோ?". - (5) சங்கு - மங்கல முழக்குகளுள் ஒன்று. கல்ல வடம் - ஒருவகை வாச்சியம். கல்லலகு என்றும் வழங்கும். கலவ - கலாபம் - தோகையை - உடைய. கார் என்றெண்ணி - சங்கு - பறை - கல்லவடம் முதலியவற்றின் முழக்குக்கள் கூடுதலால் அது மேக ஓசைபோன்றிருத்தலின் மயில்கள் கார் என்று எண்ணின. "முழவதிர மழையென் றஞ்சி" (ஐயாறு. மேகரா - 1) என்றது பிள்ளையார் தேவாரம். களித்து வந்து - கார் காணக் களிப்பது மஞ்ஞை. அலமருதல் - துன்புறுதல். ஓசை கேட்டபோது எண்ணிய எண்ணம் வந்து பார்த்தபோது பிழைத்தமையின் அலமந்தன என்க. - (6) இப்பாட்டும் பத்தர்களது வசமிழந்த செயல்களைக் குறித்தது. - (7) (8) பத்தர் - பாவையர் (1) என்ற விடத்துரைத்தவை காண்க. திருவிழாவிற் பல பண்புடை மக்களும் ஆடவரும் ஆயிழையாரும் கூடிவழிபடுதல் கூறப்பட்டது. பொடிகள் - திருநீறு. கள் - பன்மை விகுதி சிறப்புக் குறித்தது. கற்பம் அநுகற்பம் முதலியன என்றலுமாம். - (9) தொழாதநாள் துன்பம் - ஏத்துநாள் இன்பம் - உடன் பாட்டிலும் எதிர்மறையினும் கூறியபடி. "பேசாத நாளெல்லாம் பிறவா நாளே." நும்பின் எம்மை நுழையப் பணியே - உமது சிவஞான நெறியைப் பின்பற்றி ஒழுகி உம்மை அடையப் பணிப்பீர் - (10) பௌவப் பாரூரானை என்க. சேவிக்கும் உலகராகிய பௌவம் என்றலுமாம். செம்மாப்பு - சிறப்பு. 1501. | அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா வணிசண்பை மைம்மலர் கண்டத் தண்டர் பிரானார் மகனாருங் "கொய்ம்மலர் வாவித் தென்றிரு வாரூர் கும்பிட்டே யும்முடன் வந்திங் குடனமர் வே"னென் றுரைசெய்தார். |
236 (இ-ள்.) அம்மொழி......கேளா - அந்த மொழிமாலைச் செந்தமிழ்ப் பதிகத்தைக் கேட்டு; அணிசண்பை ... மகனாரும் - அழகிய சீகாழியில் அவதரித்த திருநீல கண்டத்தையுடைய தேவதேவருடைய மகனாராகிய ஆளுடைய பிள்ளை யாரும்; கொய்ம்மலர் ... உரைசெய்தார் - "அரும்புகள் மலரும் வாவிகளையுடைய தென்திருவாரூருக்குச் சென்று கும்பிட்டு அதன்பின்பே மீண்டு வந்து உம்முடன் கூடி உடனாக அமர்வேன்" என்று சொன்னார். (வி-ரை.) மொழிமாலைச் செந்தமிழ் - முன்னரும் "மொழிமாலை" (1500) என்றது காண்க. இப்பதிக முழுதும் வினைச்சொற் பயனிலை பெறாது பெயர்ச் சொற்களாக அடுக்கிய வண்ணமாமக முடிந்திருக்கும் அழகு குறிக்க மொழிமாலை என்றும், இது தமிழ்க்கே உரிய சிறப்பாம் என்று குறிக்கச் செந்தமிழ் என்றும் கூறினார். முன்பாட்டில் "மைத்தழை கண்டர்" (1500) என்றதற்கேற்ப, ஈண்டும் மைம்மலர் கண்டத் தண்டர் பிரானார் என்றும், சிவபாதவிருதயரை "அவர்சார்வு கண்டருளித் திருத்தோணி யமர்ந்தார்" நினைவுவருவது போல (திருஞான - புரா - 879), ஈண்டும் அப்பரைக் கண்டும், ஆரூர்ச் செல்வம் கேட்டும், உடன் நேரிற்காண ஆர்வம் பெருகுதற்குக் காரணம், மகனாராதலின் என்பார் அண்டர் பிரானார் மகனாரும் என்றும் கூறினார். அண்டர் பிரானார் மகனார் - பாலுண்ட திறத்தால் மகன்மை முறைமை யுடையார் என்க. இச்சொல் வழக்குப்பற்றியும், பிறவாறு பற்றியும் ஆளுடையபிள்ளை |