பக்கம் எண் :


402திருத்தொண்டர் புராணம்

 

பதிகக் குறிப்பு :- இப்பதிகம் புகலூர்ப் புரிசடையாரே என்ற மகுடமுடையது. புகலூரில் எழுந்தருளியுள்ள புரிசடை யிறைவரே, செய்யர்; மெய்ந்நின்றவர்க்கு மெய்யர்; அல்லாதவர்க்கென்றும் பொய்யர்; மேக ஊர்தியர்; கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து, திருந்தா மனமுடையார் திறத்து என்றும் பொருந்தார்; புலனைந்தும் அறுத்தார்; பாகம் பொறுத்தார் என்பன முதலிய தன்மைகளா லறியப்படுபவர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) செய்யர் - வெண் நூலர்; மெய்யர் - பொய்யர் முரண் அணிச் சுவைபடக் கூறியது. மெய்ந்நின்றவர் - மெய்ந்நெறியில் ஒழுகுபவர். மெய்ந்நெறியாவது திருநீற்று நெறி. மெய்யினது நெறி. சன்மார்க்கம் என்ப. -(2) மேக நல் ஊர்தி - "பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த மேக நாயகனை" (திருவிசைப்பா). நாக வளை - பாம்புக் கங்கணம். நாக உடை - யானைத் தோல் உடை. நாகம் - யானை. போகர் - "போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரித லோரார்" (சித்தி - 1. 50) என்றபடி இறைவர் கொள்ளும் போக வடிவம். -(3) கருந்தாழ் குழலி - தல அம்மை பெயர். திருந்தா மனம் - சிவ நன்னெறியிற் செல்லாத மனம். பொருந்தார் - விளங்கார்; வெளிப்பட்டார். -(4) அக்கு - உருத்திராக்கம். எலும்பு என்றலுமாம். உக்கார் தலை பிடித்து - பல்லையுக்க படுதலையாகிய கபாலத்தை ஏந்தி. -(5) ஆர்த்தார் உயிர் - வினைக்கீடாக நாள் உலந்தவர்களது உயிர்களை. உடல் பேர்த்தார் - உடலினின்றும் உயிரைப் போக்கினார். பெண்ணில் நல்லாள் - உமையம்மை. "பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே" (தேவா). கூர்த்து ஆர் மருப்பு - கூர்மைகொண்டு பொருந்திய கொம்பு. பெண்ணி னல்லாள் உட்க உரி போர்த்தார் என்க. உட்குதல் - அஞ்சுதல். ஈர் உரி - உரித்த தோல். -(6) சுறவம் துதைந்த கொடி - மீனக் கொடி. மன்மதனுடைய கொடி. கணைவளங் காய்ந்த - கணையினது பலத்தை அழித்த. தூமன் (ஆகிக்) காய்ந்த என்க. தூமன் - அனல் விழித்துப் புகைப்பவனாகி. தூமம் - புகை. சேம நெறி - உயிர்களுக்குச் சேமந்தரும் சிவநெறி. சீரை - மரவுரி. பூமன் - அழகு பொருந்தும். -(7) வெய்யோன் - 12 சூரியர்களும் ஒருவர். கண் புதைத்தார் - "உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே, கண்ணைப் பறித்தவாறுந்தீபற" (திருவா). பதைத்தார் - பதைத்தாராகிய. அவியுண்ண விரைந்தாராகிய அங்கியும் வியாத்திரனும். -(8) கரிந்தார் தலையர் - இறந்தவருடைய தலைமாலை பூண்டவர். கரிந்தார் - மாண்ட பிரம விட்டுணுக்கள். மதில் மூன்றுந் தழல் உண்ணக் கணைகள் தெரிந்தார் என்க. கணைகள் - மூன்று தேவர்களைக் கூறாக் கொண்டமையின் பன்மையாற் கூறினார். விரிந்து ஆர் சடை என்க. புரிந்தார் - தங்கச் செய்தார். -(9) ஈண்டு ஆர் அழல் என்க. இருவரும் தடுமாற்ற நிலை அஞ்ச - தொழு - அழலின் நீண்டார் என்க. நீளுதல் - மேலும் கீழும் அறிய வாராது செல்லுதல். மாண்டார் எலும்பு பூண்டார் - எலும்பு மாலை அணிந்தார்; கங்களார். புலனைந்தும் அறுத்தாரா யிருந்தே ஆயிழை பாகம் பொறுத்தார் என்றது போக வடிவங் கொள்வது. உயிர்களுக்குப் போலத் புரிதற்பொருட்டன்றிப் பிறர் பேதலத் தான் அனுபவித்தற்கன்று என்றதாம். பொறுத்தார் - (தாங்கினார்) என்ற கருத்துமிது.

திருச்செங்காட்டங்குடி

திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
         பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
யிருந்தமணி விளக்கதனை நின்ற பூமே
         லெழுந்தருளி யிருந்தானை யெண்டோள் வீசி