திருவாரூர் பேரளம் கிளை புகைவண்டிப் பாதையில் பூந்தோட்டம் என்னும் நிலயத்தினின்றும் கிழக்கில் மட்சாலைவழி ஒன்றரை நாழிகையளவில் அம்பர் மாகாளத்தையும, அங்குநின்றும் கிழக்கில் ஒரு நாழிகையளவில் அம்பரையும் அடையலாம். 1512. | செங்குமுத மலர்வாவித திருக்கடவூ ரணைந்தருளிப் பொங்கியவெங் கூற்றாடர்த்த பொன்னடிக டொழுதேத்திக் குங்குலியக் கலயனார் திருமடத்திற் குறைவறுப்ப அங்கவர்பாற் சிவனடியா ருடனமுது செய்தார்கள். |
247 (இ-ள்.) வெளிப்படை. செங்குமுத மலர்கள் பூக்கும் வாவிகளையுடைய திருக்கடவூரினை அணைந்தருளி, சினம் மிக்கு வந்த கூற்றுவனை உதைத்தருளிய பொன்னடிகளைத் தொழுது ஏத்திக், குங்குலியக்கலய நாயனாரது திருமடத்தில் எழுந்தருள, அவர் அடியார்க்கு வேண்டுவனவற்றை எல்லாம் செய்து கொடுக்க, அத்திருமடத்தில் அவருடனிருந்து, கூடிய சிவனடியார்களுடன் அமுது செய்தருளினார்கள். (பிள்ளையாரும் அரசுகளும்) (வி-ரை.) செங்குமுதம் - செவ்வாம்பல். கூற்றடர்த்த பொன்னடிகள் - தல சரிதச் சிறப்புக் குறித்தது. கூற்றடத்தாரது பொன்னடிகள் என்னாது அடர்த்த அடிகள் என்றது அடர்த்த செயலினைச் செய்த திருவடிச் சிறப்புக் குறித்தது. "கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே, உருட்டிய சேவடியான்" முதலிய தேவாரங்கள் காண்க. செய்தவனது செயல் அதனைச் செய்தற்குக் கருவியான அங்கத்தின்மேல் ஏற்றப்பட்டது. குங்குலியக் கலயநாயனார்...அமுது செய்தார்கள் - அவரது புராணம் (862, 863) பார்க்க. குறைவறுப்ப - வேண்டுவனவாகிய உணவு, உடை, உறையுள் முதலியவற்றை யெல்லாஞ் செய்துகொடுக்க. திருமடத்தில் குங்குலியக் கலயனார் குறைவறுப்ப என்க. குறைவு அறுத்தல் - ஒன்றாலும் குறைவு இல்லாமற் செய்தல். "திருத்தொண்ட ரானார்க் கெல்லாங், கோதில்புகழ்ப் பாண்டிமா தேவி யார்மெய்க் குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல" (திருஞான - புரா - 889), "இருவருக்கும், பைம்பொன்மணி மாளிகையிற் குறைவறுத்தார் பஞ்சவனார்" (கழறிற் - புரா - 95) முதலியவை பார்க்க. இதற்கு வேண்டுகோளைப் பூர்த்திசெய்ய என்றுரைத்தனர் முன் உரையாசிரியர்கள். அது பொருந்தாமை யறிக. அங்கு - அத்திருமடத்தில். அத்திருமடம் அவரது திருமனை. அது திருக்கடவூர்க் கோயிலுக்குக் கீழ்பால் இப்போதுள்ள திருவீதிக்கு வட கீழ்ப்பாகத்தில் இருந்த தென்பது கேள்வி. அந்த இடத்தைக் கண்டு பாதுகாவல் செய்து போற்றுவது சைவ மக்கள் கடமையும் பணியுமாகும். அவ்வாறே திருப்புகலூரில் முருகனார் திருமடத்தையும் கண்டு போற்றுதலும் கடமையாகும். 247 திருக்கடவூர் - வீரட்டம் திருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| பொள்ளத்த காய மாயப் பொருளினைப் போக மாதர் வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம் உள்ளத்த திரியொன் றேற்றி யுணருமா றுணர வல்லார் கள்ளத்தைக் கழிப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே. |
1 | மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்துநீர் மைய லெய்தில் விண்ணிடைத் தரும ராசன் விரும்பினால் விலக்கு வாரார்; மண்ணிடைச் சுவைகள் பாடி யாடிடும் பத்தர்க் கென்றுங் கண்ணிடை மணியர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே. |
2 |