பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்421

 

தம்பெருமான் - இறைவர், நாயன்மார்கள் இருவருக்கும் படிக்காசு வைத்துப் பின்னர் அருளும் சரித வரலாற்றுக் குறிப்பு.

உடன் என்பது ஒருங்கே என்பதன்று; இருவரும் என்ற எண்ணுப் பொருள் மட்டும் தந்து நின்றது. இந்நாயன்மார்களது யாத்திரையில் அரசுகள் முன்னர் ஒரு தலத்துக்குச் செல்வதும், பின்னர் அவரைப் பின்பற்றிச் சிவிகையில் பிள்ளையார் அத்தலத்துக்குச்சென்று சேர்வதும் வழக்கு. (திருஞான - புரா - 527 பார்க்க.)

திருவீழிமிழலையினைச் சேர்ந்தார்கள் - என்க. முன் அரசுகளும் பின்னர்ப் பிள்ளையாரும் சேர்ந்ததனால் முறை பிறழவைத்தார். மேல்வரும் பாட்டில் "வீழிமிழலை வந்தணையு மேவு நாவுக் கரசினையும்" என்று முன் வைத்த கருத்தும் இது.

249

திருவாக்கூர்த் தான்றோன்றி மாடம்

திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும் மூவுலகுந் தாமாகி நின்றார் போலுங்
கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும்
கொடித் தாமரைக்காடே நாடுந்தொண்டர் குற்றேவ றுமகிழ்ந்த குழகர் போலுங்
அடித்தா மரைமலர் மேல்வைத்தார் போலும் ஆக்கூரிற் றான்றோன்றி யப்ப னாரே.

1

ஓதிற் றொருநூலு மில்லை போலும் உணரப் படாதொன் றில்லை போலுங்
காதிற்குழையிலங்கப்பெய்தார்போலுங் கவலைப் பிறப்பிடும்பை காப்பார்போலும்
வேதத்தோடாறங்கஞ்சொன்னார்போலும் விடஞ்சூழ்ந்திருண்டமிடற்றார்போலும்
ஆதிக் களவாகி நினறார் போலும் ஆக்கூரிற் றான்றோன்றி யப்ப னாரே.

2

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஆக்கூரிற் தான்றோன்றி யப்பனாரே, முடித் தாமரையணிந்த மூர்த்தி; கடித்தாமரை யேய்ந்த கண்ணார்; கொடித்தாமரைக் காடே நாடுந் தொண்டர் குற்றேவல் தாமகிழ்ந்த குழகர்; தாம் ஓதிற் றொருநூலுமில்லை (ஆயினும்) - உணரப்படா தொன்றில்லை; ஆதிக் களவாகி நின்றார்; ஆதிரைநாளா வமர்ந்தார்; தீதூர நல்வினையாய் நின்றார்; எண்ணாயிரங் கோடி பேரார்; அடியார் புகலிடம தானார் என்றிவை முதலிய தன்மைகளாலறியப்படுவர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :-(1) முடித்தாமரை யணிந்த - முடிகளைத் தாமரை மலர்களாக அணிந்தவர். தலைமாலை சூடியவர். சிவன் ஒருவனே பிராமணன் என்பது வேதம். பிராமணர்களுக்கு அடையாளமாலை தாமரை. "தடங்கொண்டதோர் தாமரைப் பொன்முடி தன்மேல்" (பிள்ளையார் - திருவிடை). முடி - பல ஊழிகளில் இறந்த பிரம விட்டுணுக்களது தலைகள். மூவுலகுந் தாமாகி நின்றார் - விசுவ ரூபன். எல்லாமாய் நிற்பவர். கடித்தாமரை யேய்ந்த கண்ணார் - கண் ஏய்ந்த தாமரையினார் என்று பிரித்துக் கூட்டுக. தாமரை - திருவடித் தாமரை. கண் - சக்கரம் வேண்டித் திருமால் அருச்சித்த கண்; இவ்வாறன்றித் தாமரைபோன்ற கண்ணினராகிய அரியுருவாயிருந்து உலகங் காப்பவர் என்றலுமாம். "அரியாகிக் காப்பார்" (ஞானவுலா); "உலகுகணிலை பெறுவகை நினை வொடுமிகும் அலை கடனடுவறி துயிலமரரி யுருவியல்பரன்" (நட்டபாடை - சிவபுரம் - 2) என்பது பிள்ளையார் தேவாரம். கொடித்தாமரைக் காடே நாடுந் தொண்டர் - அடியிலிருந்து இடைவரையில் இரண்டாகவும், அதன்மேல் உச்சிவரை அவை பின்னிக் கொண்ட வகையில் ஒன்றாகவும், மின்னற் கொடிபோன்ற தத்துவமாகவும்,