பக்கம் எண் :


436திருத்தொண்டர் புராணம்

 

அந்நாளில் - நலஞ்சிறப்ப - சாத்தி - நினைவுற்றார் - என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.

261

1527.(வி-ரை.) தவறு - வறுமை - பஞ்சம் - வற்கடம். பருவத்துப் பெய்யாது மழை தவறுதலினால் உளதாகும் நிலையைத் தவறு என்றார்; ஆகுபெயர்.

கலி வான் - முழக்கமுடைய மழை. வான் - மழை. வானத்திற் சஞ்சரிக்கும் மேகத்தை வான் என்றது ஆகுபெயர்.

புனல் கலந்து - நீர் கலத்தலால். காரணப் பொருளில் வந்தவினையெச்சம். கலந்து - குளிர் தூங்கி - உணவு பெருகி என்க.

நலம் - பசிப்பிணியின்றி யின்பமுறுதல்.

குளிர் தூங்கி - தூங்கி - என்பது நிறைந்து என்ற பொருளில் வந்தது.

மூல அன்பர் - நலஞ்சிறத்தலுக்குத் துணைக்காரணர்களான அன்பர்கள். அன்பினை எடுத்துக்காட்டுதற்கு விளைத்தலுக்கு - மூலமாகியவர் என்றலுமாம்.

மொழிமாலைகளும் பலசாத்தி - காலம் தவறு தீர்ந்து, மழை பெய்து, அதனால் உணவுப் பொருள்கள் விளைந்து, உலகம் நலமடையும்வரை, இத்தலத்துத்தங்கி அண்ணல் அளித்த படிக்காசினால் அடியார் பசி தீர்த்துவந்தனாராதலின், குறைந்தது ஓராண்டாளவு இங்குத் தங்கியிருத்தல் கூடுமென்பது கருதப்படும். அந்நெடுநாள்களில் இவ்விரு பெருமக்களும் நாளும் காலங்களில் இறைவரைச் சென்றுவழிப்படும்போ தெல்லாம் தேவாரங்களை அருளியிருப்பார்; ஆதலின் எண்ணில்லாத பதிகங்கள் இங்கு அவர்கள் அருளினார். என்பார் மொழி மாலைகளும் பலசாத்தி என்றார். அத்தகைய பலவற்றுள் ஆளுடையபிள்ளையார் அருளிய பதிகங்கள் பதினைந்தும், நாயனாரருளியவை எட்டும் தான் இப்போது கிடைத்துள்ளன! பிள்ளையாரது பதிகங்கள் அவர்தம் புராணத்துட் குறிக்கப்படும். மாலைகள் - பல - இரண்டு பன்மைச் சொற்கள் இருவரைக் குறித்தன.

பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார் - தலயாத்திரையின் பெருமையினையும் பயனையும் உலகுக் கறிவுறுத்தற்கும், திருவருட் குறிப்பின்வழி மேற் சரிதவிளைவுகள் நிகழ்வதற்கும் காரணமாக இவ்வாறு நினைந்தனர்.

களி தூங்கி - என்பதும் பாடம்.

262

மொழி மாலைகளும் பல சாத்தி:-

ll திருவீழிமிழலை

திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர்
சீதத்திற் பொலிந்த திங்கட் கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்
கீதத்திற் பொலிந்த வோசைக் கேள்வியர் வேள்வி யாளர்
வேதத்தின் பொருளர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

1

எண்ணகத் தில்லை யல்ல ருளரல்ல ரிமவான் பெற்ற
பெண்ணகத் தரையர் காற்றிற் பெருவலி யிருவ ராகி
மண்ணகத் தைவர் நீரி னால்வர்தீ யதனின் மூவர்
விண்ணகத் தொருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரோ

2

நீற்றினை நிறையப் பூசி நித்தலா யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் ணிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பார் வீழி மிழலையுள் விகிர்த னாரே

8

திருச்சிற்றம்பலம்