V திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல், நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன், செம்பொ னேதிரு வீழி மிழலையுள், அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே. |
1 | ஞால மேவிசும் பேநலந் தீமையே, கால மேகருத் தேகருத் தாற்றொழும் சீல மேதிரு வீழி மிழலையுட், கோல மேயடி யேனைக் குறிக்கொளே. |
3 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- வீழிமிழலையுள் எழுந்தருளிய என்பொனே! அன்பனே! அண்ணலே! அத்தனே! குருவனே! கூத்தனே! ஆதியே! குழகனே! அருத்தனே! அடியேனைக் குறிக்கொண்டருளுக."குறிக்கொண்மினே" என்ற திரு விருத்தமும் இக்கருத்தது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பொன் என்றது சொற்பொருட்பின் வருநிலை. பொற்காசு படிவைத்து உலகங்காத்த சரிதக்குறிப்புப்பட நின்றது. - (2) களிகூரக் கண்ணினாற்கண்டு, களிகூர கையாற் றொழுது, களிகூர தியானித்தல் - எண்ணுதல் - வேண்டும் என்பதும். - (3) ஞாலமே விசும்பே - நிலம் முதல்வான் ஈறாக நின்ற ஐம்பெரும் பூதமுநீயே. "எண்ணகத் தில்லையல்லர்" (நேரிசை - 6). நலம் தீமையே - காலமே - நன்மையும் தீமையுமாய் அவ்வப்பயன் தந்து நிற்கும் கால தத்துவமுமாகி. "பந்தமும் வீடும் பரப்புகினறீர்" (திருவிருத் - 2) என்றவிடத்துரைத்தவை பார்க்க. "கோல மேயெனை யாட்கொண்ட கூத்தனே, ஞால மேவிசும் பேயிவை வந்துபோங், காலமே" (திருவா - சத - 43) - (4) முகிழும்முளை - முகிழ்த்தல் - முளைத்தல் என்ற பொருள் தந்துநின்றது. விதையினுள் முளை போன்றவர். உயிர்க்குயிராய்த் தோன்றுபவர். அத்தன் - அப்பன்; ஐயன். - (5) கருவன் - "கருவியினாலன்றியே கருவெலா மாயவன்" (தேவா) (6) பொழில் - உலகம். ஆத்தன் - உள்ளவா றுணர்ந்துரைப்போன். வடமொழியாளர் ஆப்தன் என்ப. தலை சேர்த்தன் தலையைப் பலிப் பாத்திரமாகக் கையில் சேர்த்தவன். - (8) பாலன் - மார்க்கண்டர். கழகின் மேல் வைத்த - படை செலுத்துமிடமாகக் குறித்த. அழகன் - வீழிமிழலையுள் மணக்கோலத்துடன் நின்ற பெருமான் என்பது குறிப்பு:- (10) அருத்தன் - பொருளானவன். குறிப்பு :- இப்பதிகம் இறைவரிடம் செய்துகொள்ளும் பிரார்த்தனையை அடியார்க்கு உபதேசித்தது IV திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் கந்தமா தனத்துளார் காளத் தியார் மயிலாடு துறையுளார்மாகா ளத்தார் வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த அயில்வாய சூலமுங் காபா லமும் மமருந் திருக்கரத்தா ரானே றேறி வெயிலாய சோதி விளங்கு நீற்றார் வீழி மிழலையே மேவி னாரே. |
1 | அஞ்சைக் களத்துள்ளா ரையாற் றுள்ளா ராரூரார் பேரு ரழுந்தூ ருள்ளார் தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார் சாந்தை யயளந்தித் தங்கி னார்தாம் |
|