பக்கம் எண் :


446திருத்தொண்டர் புராணம்

 

ஆதிரைநாள் ஆதரித்த அம்மான், குழைவார் சிந்தை புக்கிருந்து போகாத புனிதன், சிவனாகியும் பவனாகியும் நின்ற தவன், கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான், அரக்கர் கோமானது பாடல் கேட்டுப் பரிந்து அவனுக்கு இராவணனென்றீந்த நாம தத்துவன் என்பன முதலிய தன்மைகளா லறியப்படுபவர். அவர் எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை யிடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப் பொய்த்தவத்தார் அறியாத நெறிநின்றார்; எண்டளவில் என்னெஞ்சத்துள்ளே நின்ற எம்மான்; அவரைச் சாராதே சாலநாள் போக்கினேனே! என்றிரங்கியது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) முண்டத்தில் முளைத்தெழுந்த தீயானாள் - நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளியில் உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் சோதியுருவினன். தீயாகிய நெற்றிக் கண்ணையுடையவன் என்றலும், சிவபூசையில் வகுத்த முண்ட பங்கி என்றலும் ஆம். முவுருவம் - அயன் அரி அரன். ஒருருவம் - அவற்றைக் கடந்த சிவனாகிய முதலுருவம். 4-வது பாட்டுப் பார்க்க. - (2) கொக்கு - கொக்கிறகு. -(4) சிவன் - பவன் - இறைவனது சிறந்த சிவாதி எட்டு. பவாதி எட்டு என்னும் நாமாட்டகங்களில் முதற்கணுள்ள திருநாமங்கள். "சிவனெனு நாமம்" என்ற தேவாரமும் பார்க்க. (5) பரிதிநியமம் - தலம் - (8) நடுதறி - கன்றாப்பூர் இறைவர் பெயர். காறை - வைப்புத் தலம். - (9) கண்டளவிற்களிகூர்தல் - அன்பு மிகுதிப்பாட்டினா லாவது. "புளிக் கண்டவர்க்குப் புனலூறுமாபோல்" (திருமந்திரம்). - (10) இராவணனென்று ஈந்த நாம தத்துவன் - கயிலைக்கீழ்ப் பலநாள் அழுது கிடந்தமையால் இராவணனுக்கு அப்பெயர்ப் போந்தது. (இராவணன் - அழுபவன்). குறிப்பு :- 3-வது 4-வது திருப்பாட்டுக்களில் நாயனாரது சரித அகச்சான்றுகள் காண்க.

தலவிசேடம் :- திருத்தலையாலங்காடு : காவிரிக்குத் தென்கரை 93-வது தலம். தாருகாவன முனிவர் ஏவி விடுத்த முயலகன்மீது சிவபெருமான் நடனம் செய்த தலமென்பது வரலாறு. சுவாமி பெயர் அதுகாரணமாய்ப் போந்த தென்ப. கபிலர் பூசித்தது. சுவாமி - ஆடவல்லநாதர்; அம்மை - திருமடந்தை; பதிகம் 1.

திருப்பெருவேளூரினின்றும் மேற்கில் மட்சாலைவழி இரண்டு நாழிகையளவில் இதனை அடையலாம்.

திருப்பெருவேளுர்

திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

மறையணி நாவி னானை மறப்பிலார் மனத்தி னானைக்
கறையணி கண்டன் றன்னைக் கனலெரி யாடினானைப்
பிறையணி சடையினானைப் பெருவேளூர் பேணி னானை
நறையணி மலர்க டூவி நாடொறும் வணங்கு வேனே.

1

குறவிதோள் மணந்த செல்வக் குமரவே டாதை யென்றும்
நறவிள நறுமென் கூந்த னங்கையோர் பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப் பெருவேளூர் பேணி னானை
யுறவினால் வல்ல னாகி யுணருமா றுணர்த்து வேனே.

2

விரிவிலா வறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்தே
யெரிவினாற் சொன்னா ரேனு மெம்பிராற் கேற்ற தாகும்;
பரிவினாற் பெரியோ ரேத்தும் பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி யுய்யும் வகையது நினைக்கின் றேனே.

9

திருச்சிற்றம்பலம்