நூற்பதிப்புக்கழகத்தார் பதிப்பில் இப்பதிகத்துள் 10-வது பாட்டாக அமைத்துள்ளனர். எடுகள் எழுதியோர், இப்பதிகத்துள் 11 பாட்டுக்களும், "ஒதமால் கடல்" என்றதில் 9 பாட்டுக்களுமாக இருத்தல் கண்டு இதனுள் ஒரு பாட்டை எடுத்து அதிற்சேர்த்து நாயனாரது ஏனைப் பதிகங்கள்போல இரண்டையும் பப்பத்தாக நிரவிட்டனர்போலும்! தலவிசேடம் - பின்னர் 1555-வது பாட்டின் கீழ்க் காண்க. 1535. | அன்ப ரீட்டங் களிசிறப்ப வாண்ட வரசுஞ் சிவக்கன்றும் இன்ப வெள்ளத் திடைமூழ்கி யெழுந்துள் புகுந்து தம்பெருமான் முன்பு பணிந்து போற்றிசைத்துப் பரவி மொழிமா லைகள்பாடி யென்பு கரையவுள்ளுருகிய யிறைஞ்சி யரிதிற் புறத்தணைந்தார். |
270 (இ-ள்.) வெளிப்படை. அன்பர்களது கூட்டமானது பெருங்களிப்படைய, ஆளுடைய அரசுகளும் ஆளுடையபிள்ளையாரும், பேரின்பப் பெருக்கில் திளைத்து எழுந்து உள்ளேபுகுந்து தமது பெருமானுடைய திருமுன்பு பணிந்து போற்றித் துதித்துத் திருப்பதிகங்களையும் பாடி, எலும்பும் கரைய, மனமுருகிப் பணிந்து அங்குநின்றும் அரிதாக நீங்கிக் கோயிலின் புறத்தே அணைந்தார்கள். (வி-ரை.) ஈட்டம் - கூட்டம். ஈண்டுதல் - கூடுதல். அம் - தொழிற் பெயர்விகுதி. ஈண்டுதலால் உளதாவதுகூட்டம். களிசிறப்ப - சிறப்ப என்பது மிகுதியாய் உளதாகும் நிலை குறித்தது. சிவக்கன்று - ஆளுடைய பிள்ளையார். கன்று - இளமையும் மகவின் பொதுமையும் குறித்தது; உபசாரம். அரசும் சிவக்கன்றும் - என்று அரசுகளை முன் வைத்தோதினமைபற்றி "மொழிக்கு நாதர் ஞான முனிவருடன்" என்ற முன்பாட்டில் உரைக்கப்பட்டது காண்க. இன்ப வெள்ளம் - உருவகம்; பெருக்குக் குறித்தது. எழுந்து - முன்பாட்டிற் கூறிய "தொழுது விழ்ந்தார்" என்ற நிலையினின்றும் எழுந்து. வெள்ளத்தில் முழ்கி மேல் எழுந்து என்ற பொருளும் படநின்றது, தொழுது விழுந்த நிலையில் சிலநேரம் நீடித்திருந்தமையால் தொடர்ந்து கூறாது முன் பாட்டில் விழுந்தார் என வினைமுற்றாக முடித்துக் கூறி, இப்பாட்டில் மீளத் தொடங்கினார். முன்பு - திருமுன்பு; சந்நிதானத்தில். பணிந்து - அவ்விடத்திற் கேற்குமாறு மூன்றங்கங்களாற் பணிந்து எக்ன.க போற்றிசைத்துப் பரவி - போற்றுதல் - துதிகளைச் சொல்லுதல். பரவுதல் - பலவாறும் புகழ்தல். மொழிமாலைகள் - இரு பெருமக்களும் பாடியதனாற் பன்மையாற் கூறினார். இம்மாலைகள் இன்னவை என்று பிரித்து அறியக்கூடவில்லை. நாயனாரது தேவாரங்கள் இப்போது கிடைப்பனவற்றுள் "ஒதமால்கடல்" என்ற திருக்குறுந் தொகை அப்போது திருமுன்பு அருளப்பட்டிருத்தல் கூடுமெனக் கருத இடமிருத்தலின் இதன் கீழ்க் குறிக்கப்படுகின்றது. எழுதல் - பணிதல் - போற்றுதல் - பாடுதல் - என்பு கரைதல் - உள்ளுருகுதல் - இறைஞ்சுதல் - என்ற இவை எல்லாம் இரு பெருமக்களும் அப்போது செய்த வழிபாட்டின் அங்கங்கள். இறைவர் செய்த பேரருட்டிறம் நோக்கி இத்தனையும் செய்தனர் என விரித்துக் கூறினர். இறைவர் தமது திருவாக்கு இப்பெரியார்களது திருவாக்கே ஆகும் என்று உலகத்துக்குக் காட்டிய தன்மையினால் இதனை வியந்து ஆசிரியர் பின்னர் ஆளுடைய பிள்ளையார் புராண (592)த்தினுள் பாராட்டுதல் இங்குக் கருதத் தக்கது. |