பக்கம் எண் :


474திருத்தொண்டர் புராணம்

 

(வி-ரை.) அரசும் பிள்ளையாருடனே - வைப்புமுறைபற்றி 1534, 1535-ல் உரைத்தவை பார்க்க. திருமறைக்காட்டினின்றும் பிள்ளையாரைப் பிரிந்து நாயனார் போந்தனராதலின் அவ்வாறு போந்த அரசுகளும் என்பது குறிப்பு. முன்பாட்டில் உடனுறைந்தார் என்ற அதனையே தொடர்ந்து இனிதமர்ந்து என்றும், நாடுங்காதல் வளர்ந்தோங்க என்று முன்கூறிய அதனையே தொடர்ந்து பூண்ட காதல் பொங்கி எழ என்றும் கூறிய திறம் காண்க. முன்பாட்டிற் கூறியது கருத்தும் சாதனமும் ஆம். இங்குக் கூறியவை அவை முற்றிய நிலை. ஆதலின் கூறியது கூறலன்மை யுணர்க.

வாய்மூர் அடிகள் - திருவாய்மூர் இறைவர் பெயர். "வாய்மூ ரடிகளை நான் கண்டவாறே" (தாண்) என்ற நாயனார் திருவாக்கும், "வாய்மூ ரடிகள் வருவாரே" (தேவா) என்ற திருவாக்கும் கருதுக.

மூண்ட - மூளுதல் - உள்ளிருந்து பொங்கி மேற்கிளம்புதல்.

மொழி மாலை - நாயனார் இத்தலத்தே ஆளுடைய பிள்ளையாருடன் எழுந்தருளியிருந்த காலத்து இருவர் பாடியவைகளும் கிடைத்தில!

மீண்டு வந்து - திருமறைக் காட்டினின்று இரவு துயிலும்போது எழுந்து சென்றாராதலின் அந்நிகழ்ச்சி முற்றிய பின், மீண்டு வந்தனர் என்க.

283

1549.

ஆதி முதல்வர் தமைப்பணிந்தங் கான பணிசெய் தமருநாட்
சீத மதிவெண் குடைவளவர் மகளார் தென்னன் தேவியார்
கோதில் குணத்துப் பாண்டிமா தேவி யார்முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர்வந்தார் புகலி வேந்தர் தமைக்காண.

284

(இ-ள்.) ஆதி......அமருநாள் - ஆதிமுதல்வராகிய திருமறைக்காட்டிறை வரைப் பணிந்து இயன்ற திருப்பணிகளைச் செய்துகொண்டு, அங்கு நாயனார் அமர்ந்திருக்கும் நாளில்; சீதமதி...போதவிட்டார் சிலர் - குளிர்த்த சந்திரன் மேலே கவிந்தது போன்ற வெண்கொற்றக் குடையினையுடைய சோழர்க்கு மகனாரும், பாண்டிய மன்னருக்குத் தேவியாரும் ஆகிய குற்றமற்ற குணத்திற் சிறந்த பாண்டிமா தேவியாராலும், அவர் திருமுன்பு பணிசெய்யும் குலச்சிறையாராலும் செல்லவிடுத்தவர்களாகிய சிலர்; புகலி வேந்தர்தமைக் காண வந்தார் - சீகாழித்தலைவராகிய ஆளுடைய பிள்ளையாரைக் காணும்பொருட்டு வந்தார்கள்.

(வி-ரை.) ஆதிமுதல்வர் - புண்ணியம் நண்ணலாலே தத்தம் எல்லையளவும் முதல்வராதலுக்கு அதிகார சக்தி பெற்றவர்க்கெல்லாம் மூலமுதல்வராகிய முழு முதல்வர். "முழுமுதலே யைம்புலனுக்கு மூவர்க்கும் " என்பது திருவாசகம். ஆனபணி - நியதியாய்த் தாம் மனம் வாக்கு காயம் மூன்றானும் செய்யும் பணிகள்.

செய்து - திருநாவுக்கரசர் செய்து என்று எழுவாய் வருவிக்க.

சீதமதி வெண் குடை வளவர் - உலகத்தைப் பயம்நீக்கிக் குளிர்விக்கும் ஆணையாகிய வெண்குடையினையுடைய சோழர் . அரசரது நீதிதவறாத, அளியுடைய ஆணையே, குடை என்று உபசரிக்கப்படும். வளவர் - (பிற நாட்டை எதிர்பார்க்க வேண்டாத) நாட்டு வளத்தை உடையவர்.

வளவர்மகளார் - தென்னன் தேவியார் - கோதில் குணத்துப் பாண்டிமா தேவியார் - பிறந்த இடம், புகுந்த இடம் - தம் தன்மை என்ற மூன்றன் பெருமையும் புலப்படக் கூறினார். இப்புராணத்தினுள் சரிதம்பற்றி மங்கையர்க்கரசி யம்மையாரைக் கூறநேர்ந்த முதலிடம் இதுவாதலின் இவ்வாறு விதந்து