பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்475

 

எடுத்தனர். "மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை.....பாண்டிமாதேவி" என்ற பிள்ளையார் தேவாரம் இங்கு நினைவு கூர்தற்பாலது.

பாண்டிமா தேவியார் முன் குலச்சிறையார் - மாதேவி - பட்டத்தரசி. முன் - திருமுன்பு பணிசெய்யும் என்ற பொருள்தந்து நின்றது. மாதேவியாராலும் குலச்சிறையாராலும் என்க. எண்ணும்மைகளும் மூன்றனுருபுகளும் தொக்கன. "அமைச்சனாரு மங்கையர்க்கரசியாரும் (திருஞான - புரா - 606), "பரிசனமாக் கடம்மை...மாமறைக்காட்டில் விட்டார்." (மேற்படி - 607), "கொற்றவன் றேவி யாரும் குலச்சிறை யாருமேவ" (மேற்படி - 610) என்பவை காண்க.

போதவிட்டார் சிலர் - போதவிட்டாராகிய சிலர். போதவிட்டார் - செயப் பாட்டு வினை செய்வினையாகவந்த இறந்தகால வினைப்பெயர். விடப்பட்டார் என்க.

சிலர் - அறிவுடைமக்கள். தூது செல்லும் புலவாணர். புகலிவேந்தரைச் சிலர் காணவந்தார் என்க. சிலர் - "பரிசன மாக்கள்" (திருஞான - புரா - 607), "போந்த வறிவுடை மாந்தர்" (மேற்படி - 608). என்பவை காண்க. "நூலாருணூல்வல்ல னாகுதல்", "அறிவுரு வாராய்ந்த கல்வியும் மூன்றன், செறிவு" (குறள் - தூது) என்று தூதினிலக்கணம் வகுத்தவாறு அமைந்த திட்பமுடையோர் என்க. இவர்களது தம்மை, சொல், செயல்களைப்பற்றி ஆளுடைய பிள்ளையாரது புராணத்துட் காண்க. நாயனார் சரிதத்தினுள் பேச வேண்டிய அளவே ஈண்டுக் கூறினர் என்பது கண்டுகொள்க.

காணவந்தார் என்பதனை வந்தார்காண என்று செய்யுளாகலின் முறை பிறழ வைத்தார். வந்தவர்களின் அன்பின் தீவிரம் குறித்ததென்றுரைக்கினுமமையும்.

புகலி வேந்தர் தமைக்காண - இருபெருமக்களும் உடன் எழுந்தருளி யிருப்பினும், அம்மையாரும் மந்திரியாரும் ஏவி விடுத்தவாறே புகலி வேந்தரைக் காணவந்தனர் என்க.

வளவன் - தேவியாம் - என்பனவும் பாடங்கள்.

284

1550.

வந்து சிவனார் திருமறைக்கா டெய்தி, மன்னு வேணுபுரி
யந்த ணாளர் தமக்கறிவித், தவர்பா லெய்தி யடிவணங்கச்,
சிந்தை மகிழ்ந்து தீதின்மை வினவத், "தீங்கு முளவாமோ
விந்த வுலக முயவந்தீ ரிருதா ணினைவார்க்"கென வுரைப்பார்;

285

1551.

"சைவ நெறிவை திகநிற்கச் சழக்கு நெறியைத் தவமென்னும்
 பொய்வல்லமணர் செயறன்னைப் பொறுக்க கில்லோ" மெனக், கேட்டே
 யவ்வன் றொழிலோர் செயன்மாற்றி யாதி சைவ நெறிவிளங்கத்
 தெய்வ நீறு நினைந்தெழுந்தார் சீர்கொள் சண்பைத் திருமறையோர்;

286

1552.

 ஆய பொழுது திருநாவுக் கரசு, புகலி யாண்டகைக்குக்
"காய மாசு பெருக்கியுழல் கலதி யமணர் கடுவினைசெய்
 மாயை சால மிகவல்லார்; அவர்மற் றென்னை முன்செய்த
 தீய தொழிலும் பல; கெட்டேன்; செல்ல விசையேன்யார்"னென்றார்;

287

1553.

என்று கூற "வெல்லையிலா நீறு போற்று மிருவரையுஞ்
சென்று காணுங் கருத்துடையேன்; னங்குத் தீங்கு புரியமணர்
நின்ற நிலைமை யழிவித்துச் சைவ நெறிபா ரித்தன்றி
யொன்றுஞ் செய்யே. னாணையும" தென்றா ருடைய பிள்ளையார்;

288