விதந்தோதி யுள்ளார். மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தலபுராணம் பாடியுள்ளார். சுவாமி - காயாரோகணேசுவரர்; அம்மை - நீலாயதாட்சியம்மை; தியாகர் - சுந்தரவிடங்கர்; நடனம் - தரங்க நடனம்; (தியாகராசருக்கு முன் நம்பிகள் எழுந்தருளியுள்ளார்). தீர்த்தம் கோயிலுக்குத் தெற்கில், தேவதீர்த்தம்; மேற்கில் - புண்டரீக தீர்த்தம். மரம் - மா. பதிகம் 7. இது நாகபட்டினம் புகை வண்டி நிலயத்தினின்றும் வடமேற்கே? நாழிகையில் அடையத்தக்கது. 1557. | வீழி மிழலை தனைப்பணிந்து, வேத முதல்வர் தாமிருப்ப ஆழி வலமேந் தியவரியா லாகா சத்தி னின்றிழிந்த வாழி மலர்ந்த கோயிறனின் மன்னும் பொருளைப் போற்றிசைத்துத் தாழு நாளிற் பிறபதியும் பணியுங் காத றலைநிற்பார்; |
292 1558. | பூவிற்பொலியும்புனற்பொன்னிக் கரைபோய்ப் பணிவார்பொற்பமைந்த ஆவுக் கருளு மாவடுதண் டுறையார் பாத மணைந்திறைஞ்சி நாவுக் கரசர் ஞானபோ னகர்க்குச் செம்பொ னாயிரமும் பாவுக் களித்த திறம்போற்றிப், போந்து, பிறவும் பணிகின்றார்; |
1559. | செய்ய சடையார் பழையாறை யெய்த வதனிற் செல்பொழுதின் மைய லமணர் மறைத்தவட தளியின் மன்னுஞ் சிவனாரைக் கைகள் கூப்பித் தொழுதருளக், கண்ட வாற்றா லமணர்கடம் பொய்கொள் விமான மெனக், கேட்டுப், பொறாதவுள்ள மிகப்புழுங்கி, |
1560. | அந்த விமானந் தனக்கருகா வாங்கோ ரிடத்தின் பாங்கெய்திக் கந்த மலருங் கடிக்கொன்றை முடியார் செய்ய கழலுன்னி "மந்த வமணர் வஞ்சனையான் மறைத்த வஞ்ச மொழித்தருளிப் பந்தங் கொண்ட வமணர்திறம் பாற்று" மென்று பணிந்திருப்பார், |
1561. | "வண்ணங் கண்டு நானும்மை வணங்கி யன்றிப் போகே" னென் றெண்ண முடிக்கும் வாகீச ரிருந்தா ரமுது செய்யாதே; அண்ண லாரு மதுவுணர்ந்தங் கரசு தம்மைப் பணிவதற்குத் திண்ண மாக மன்னனுக்குக் கனவி லருளிச் செய்கின்றார். |
296 1562. | "அறிவி லமணர் நமைமறைப்ப விருந்தோ" மென்றங் கடையாளக் குறிக ளருளிச் செய்தருளி, "நம்மை யரசு கும்பிடுவான் நெறியி லமணர் தமையழித்து நீக்கிப் போக்"கென் றருள்புரியச் செறிவிலறிவுற் றெழுந்தவனுக்குஞ் செங்கை தலைமேற் வித்திறைஞ்சி |
1563. | கண்ட வியப்பு மந்திரிகட் கியம்பிக் கூடக் கடிதெய்தி, யண்டர் பெருமா னருள்செய்த வடையா ளத்தின் வழிகண்டு, குண்டர் செய்த வஞ்சனையைக் குறித்து வேந்தன் குலவுபெருந் தொண்டர் தம்மை யடிவணங்கித், தொக்க வமணர் தூரறுத்தான்; |
1564. | ஆனை யினத்திற் றுகைப்புண்ட வமணா யிரமு மாய்ந்ததற்பின் மேன்மை யரச னீசர்க்கு விமான மாக்கி விளக்கியபின் |
|