பக்கம் எண் :


502திருத்தொண்டர் புராணம்

 

இடங்கள் பிற - மேல்வரும் பாட்டில் கூறும் தலங்கள் முதலாயினவை.

அணைவார் - புக்கு இறைஞ்சி - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. அணைவார் - அணைவாராகி; முற்றெச்சம்.

300

திருப்பழையாறை வடதளி

திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருண்,
ணிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமோ?
அலையி னார்பொழி லாறை வடதளி,
நிலையி னானடி யேநினைந் தூய்ம்மினே.

1

மூக்கி னான்முரன் றோதியக் குண்டிகை, தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக்
காக்கி னானணி யாறை வடதளி, நோக்கி னார்க்கில்லை யாலரு நோய்களே.

2

நீதி யைக்கெட நின்றம ணேயுணுஞ், சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன்,
ஆதி யைப்பழை யாறை வடதளிச், சோதி யைத்தொழு வார்துயர் தீருமே.

6

வாயி ருந்தமி ழேபடித் தாளுறா, வாயி ரஞ்சம ணும்மழி வாக்கினான்,
பாயி ரும்புன லாறை வடதளி, மேய வன்னென வல்வினை வீடுமே.

9

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- மெய்ம்மையுள் நில்லாத பொய்யராகிய அமணர் தமது நிலையினால் மறைத்தாலும் மறைக்க முடியுமா? ஆறை வடதளி இறைவர் அரசனுக்குத் தந்த தமது ஆணையினால் சமணர் குலம் தூரறுத்தார்; அவரைத் தொழ அரு நோய்களும் இல்லையாம்; தீவினை தீரும்; அவரைத்தொழுது எனது கைகள் உய்ந்தன.

குறிப்பு :- இப்பதிக முழுமையும் நாயனாரது சரிதப்பகுதிக்குப் பெருத்த அகச்சான்றுகளுடன் விளங்குகின்றது. சமணர்களது பழிப்பாகிய பல கொள்கைகளும், அவைகளை அழித்துத் தூரறுக்க நேர்ந்ததற்கும் தாம் சமணை நீத்ததற்கு முரிய உள்ளுறைகளும் பிறவும் நாயனார் இதனுட் சுவைபடப் பேசியருளினார். இச்சரிதப் பகுதியுள் நாயனாரது திருமணத்தெழுந்த பல வேறு வகையான எண்ணங்களும் இதனுள் விளங்குகின்றன. சரித ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன் படுவது இத்திருப்பதிகம்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) தலை எலாம் பறிக்கும் - தலையின் மயிரைப் பறித்தல் சமணர் இழிவழக்குக்களுள் ஒன்று. உள்நிலை - தங்கள் பொய்ம்மைநிலை. "இத்தகைய செயற்கிவரைத் தடிதல் செய்யா திதுபொறுக்கிற் றங்கணிலை யேற்பர்" (திருஞான - புரா - 907). ஒண்ணுமே - ஏகாரவினா எதிர்மறை குறித்தது. - (2) முக்கினால் முான்று ஒதி அக்குண்டிகை தூக்கினார் குலம் - முக்கினால் முான்று ஒதுதல் - சமணர்களது மந்திரங்கள் மெல்லெழுத்துக்கள் மிகுந்து மூக்கின்வழி முரலுதல் போல ஒதத்தக்கன. "ஞமண ஞாஞண ஞாண ஞோணமென் றோதி யாரையு நாணிலா, வமணர்" (நம்பிகள் - கொல்லி - நமக் - 9). குண்டிகை தூக்கல் - நீர்க் குண்டிகைகள் மூன்றை ஒரு சிறு உறியிற் றூக்கித் திரிதல் அமண குருமார் வழக்கு. தூரறுத்தே - "தொக்க அமணர் தூரறுத்தான்" (1563). தனக்கு ஆக்கினான் - அமணர் மறைத்துத் தன்னகன்று எனக் காட்டிய விமானத்தைத் தன்னதாகக் காட்டியவன். - (3) கூறையில் மிண்டர் - உடையின்றித் திரிவதும் அமண குருமார்களது இழிவழக்குக்களுள் ஒன்று. தூரந்த - ஒழித்த; அரசனைக் கொண்டு போக்கிய. (4) முடையர் - உடல் கழுவாமை, பல் விளக்காமை முதலியவற்றால் முடைநாற்ற முடையவர். தலைமுண்டித்தல் - மயிர்பறித்துத் தலை மழுங்கலாக நிற்றல். கடிந்தார் - அழித்தார். - (5) ஒள்...கள்ளர் - பெண்கள் முன்பு உடை