இரண்டுகரையும் - இடங்கள் - மேற்கு நோக்கி ஒரே முகமாகச் சென்றால் காவிரியின் கரையில் தெற்கும் வடக்குமாக எதிர் தோன்றும் தலங்களைக் கலந்து தரிசித்தனர். கலந்து (1454) என்றவிடத் துரைத்தவை பார்க்க. தமிழ் மாலைகளும் சாத்தி - திருப்பதிகங்கள் பாடித் துதித்து. எங்கும் நிறைந்த புகழாளர் - வாகீசர். அவரது புகழ் எங்கும் நிறைந்த தொன்றாதலின் அங்கங்கும் அடியார்கள் தெரிந்து எதிர்கொண்டமைக்குக் காரணமாயிற்று என்பார் இத்தன்மைபற்றிக் கூறினார். ஈறில் - குணத்தால் அளவு படாதவர். "அளவிலாத பெருமையர்.....அளவிலா அடியார்". 301 தலத் தேவாரக் குறிப்புகள் :- இங்கு "இரண்டு கரையும் பொருவிடையார் தங்குமிடங்கள்" என்றவற்றுட் கருதப்படும் தலங்கள் பல. அவற்றுட் பலவற்றுக்கு நாயனார் பதிகங்கள் கிடைத்தில. கிடைத்தவற்றுள்ளும் சில தலங்களின் தேவாரக் குறிப்புகள் மட்டும் இதன்கீழ்த் தரப்படுவன. ஏனையவை வந்துழிக் காண்க. திருவையாறு - திருப்பூந்துருத்தி என்ற தலங்களின் பதிகக் குறிப்புக்கள் பின்னர் நாயனாரது சரித நிகழ்ச்சியில் வரும் உரிய இடங்களிற் றரப்படுவன. திருவாலம்பொழில் திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக் கமலத்தோன் றலையரிந்த காபா லியை உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை யுணர்வெலா மானானை யோசை யாகி வருவானை வலஞ்சுழியெம் பெருமான் தன்னை மறைக்காடு மாவடுதண் டுறையு மேய திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 1 உருமூன்றா யுணர்வின்க னொன்றா னாணை யோங்கார மெய்ப்பொருளை யுடம்பி னுள்ளாற் கருவீன்ற வெங்களவை யறிவான் றன்னைக் காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக் கருளீன்ற வாரமுதை யமரர் கோனை யள்ளூறி யெம்பெருமா ளென்பார்க் கென்றுந் திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. |
3 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- கருவாகிக் கண்ணுதலாய் வருவான், உணர்வெலா மானான், ஓசையாகி வருவான், உருமூன்றா யுணர்வின்க ணொன்றானான், ஓங்கார மெய்ப் பொருள், உடம்பினுள்ளாற் கருவீன்ற வெங்களவை யறிவான். விரிந்தான், குவிந்தான், பிறப்போடிறப்பாகி நீன்றான். பொல்லாத என்னழுக்கிற் புகுவான் - என்றிவை முதலிய தன்மைகளா லறியப்படுகின்ற திருவாலம்பொழில் இறைவரை நெஞ்சே சிந்திப்பாயாக. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கருவாகி - உலகுக்குக் காரணமாய் நிற்கும் மாயையைத் தன் பரிக்கிரக சத்தியாக உடையவன். "கருவினா லன்றியே |