பக்கம் எண் :


512திருத்தொண்டர் புராணம்

 

ஆ! ஆ! - இரக்கச்சொல் - (5) நைஞ்சு நைஞ்சு - மனம் மிக நைந்து. அடுக்கு மிகுதி குறித்தது. உருகி உள் குளிர்தலாவது சிவனை நினைந்து உண் மகிழ்தல். - (6) நடையை மெய்யென்று நாத்தீகம் பேசாதே - யாகாதி கன்மங்களே பலன் தரும்; இறைவன் வேண்டா என்று சயமுனி கூறும் கொள்கையுட் படாமல். - (7) ஒழுகு......முன்னம் - இறந்துபட்டு உடல் அழியா முன். ஒழுகு மாடம் - எங்கும் ஓட்டைகளையுடைய உடம்பு. அழுதல் - அன்பு மீக்கூர்தலின் மெய்ப்பாடு. - ( ) உருளும்போது - சாகும் காலம்; இருள் - பந்தபாசம். - (10) பாதம் வாங்கி - ஊன்றி யழுத்திய பாதத்தை எடுத்து.

II திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

எத்தாய ரெத்தந்தை யெச்சற் றத்தா
         ரெம்மாடு சும்மாடா மேவர் நல்லார்
செத்தால்வந் துதவுவா ரொருவ ரில்லை;
         சிறுவிறகாற் றீமூட்டிச் செல்லா நிற்பர்;
சித்தாய வேடத்தாய்! நீடு பொன்னித்
         திருவானைக் காவுடைய செல்வா! வென்ற
னத்தா!வுன் பொற்பாத மடையப் பெற்றா
         லல்ல கண்டங் கொண்டடியே னென்செய்கேனே.

1

ஊனாகி யுயிராகி யதனு ணின்ற
         வுணர்வாகிப் பிறவனைத்து நீயாய் நின்றாய்;
நானேது மறியாமே யென்னுள் வந்து
         நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்;
தேனாருங் கொன்றையனே! நின்றி யூராய்!
         தென்னானைக் காவிலுறை சிவனே! ஞானம்
ஆனா!யுன் பொற்பாத மடையப் பெற்றா
         லல்லகண்டங் கொண்டடியே னென்செய் கேனே.

2

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ...தாய் தந்தை முதலிய உயிர்ச்சார்புகளும், ஏனைப் பொருட் சார்புகளும் முடிவில் உதவி செய்யமாட்டா; திருவானைக்காவில் இறைவன் பாதம் அடையப்பெற்றால் துன்பங்கள் வரினும் என்ன செய்யவல்லன?

பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) எத்தாயர் - எத்தந்தை - எச்சுற்றத்தார் ஏவர் - நல்லார்?; எம்மாடு சும்மாடாம்? என்று இரு முடிபாக்கிக்கொள்க. மாடு - செல்வம். சு(ம்)மாடு - நல்ல செல்வம். அல்லகண்டம் - துன்பம். - (2) என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய் - இறைவன் உயிர்களுக்குக் காட்டு முபகாரம் செய்தல் குறிப்பு. நான் ஏதும் அறியாமே - உயிர்கள் அறியாதபடி மறைந்து நிற்றல். உள் வருதல் - உயிர்க்குயிரா நிற்றல். - (3) ஒன்றலாத் தவத்தார் - ஒன்றுக்கும் - ஒரு நன்மைக்கும்; அலா - அல்லாத - உதவாத - பற்றாத; தவத்தை மேற்கொண்ட அமணர். முற்றும்மை தொக்கது. துப்பாரும் குறையடி சில் - உணவுக் கவளம். நற்று - நன்று; (4) உன்பால் முனித்தவர்கள் - உன்னை முனிந்தவர்கள். வலித்தல் விகாரம். (9) எப்பொழுதும் நாவினில் சொல்லி; மனத்தால் உன்னி என்று விரித்துக்கொள்க.

III திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கே
தன்னானை யாப்பண்ணி யேறி னானைச் சார்தற் கரியானைத் தாதை தன்னை
யென்னானைக் கன்றினையென் னீசன் றன்னை யெறிநீர்த் திரையுகளுங் காவிரிசூழ்
தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச செழுநீர்த் தீரளைச்சென் றாடி னேனே.

1

திருச்சிற்றம்பலம்