இது திருச்சிராப்பள்ளிக் கோட்டை யென்ற இருப்புப்பாதை நிலையத்தினின்றும் கிழக்கே நாழியளவில் உள்ளது. திருக்கற்குடி திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| மண்ணதனி லைந்தைமா நீரி னான்கை வயங்கெரியின் மூன்றைமா ருதத்தி ரண்டை விண்ணதனி லொன்றை விரிக திரைத் தண்மதியைத் தாரகைக டம்மின் மிக்க வெண்ணதனி லெழுத்தை யேழிசை யைக்காம னெழிலழிய வெரியுமிழ்ந்த விமையா நெற்றிக் கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகைத்தைக் கண்ணாரக் கண்டே னானே. |
3 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- வானவர்க்கும் மூத்தவன்; மூவாமேனி முதல்வன்; செய்யான்; வெளியான்; கரியான்; மண்ணதனி லைந்து; மாநீரி னாக்கு; வயங்கு எரியின் மூன்று; மாருதத் திரண்டு; விண்ணதனி லொன்று; விரிகதிர்; தண்மதி; சங்கைதனைத் தவிர்தாண்ட தலைவன்; பரந்தான்; குவிந்தான்; இவ்வுலக மெல்லா முண்டான்; உமிழ்ந்தான்; திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மைசெய்த தலையான்; என்றிவை முதலிய தன்மைகளா லறியப்படுகின்ற விழுமியானைக் கற்பகத்தைக் கற்குடியில் கண்ணாரக் கண்டேனானே. பதிகப் பாட்டுக் குறிப்பு :- வானவர்க்கும் - மூத்தவன் என்க. அக்கரவம் - அக்கும் அரவமும். காத்தவன் - வாராது காத்தவன். (4-வது பாட்டும் பார்க்க). - (2) செய்யான் - வெளியான் - கரியான் - செம்மை - தமதுநிறம்; வெண்மை - அதன் மேற்பூசிய திருநீற்றின் நிறம்; கருமை - பாகமுடைய - அம்மை - திருமால் - இவர்களது நிறம். ஐயான் - அழகியான். ஐ - தெய்வம் என்றலுமாம். - (3) மண்ணதனில் ஐந்தை...ஒன்றை - "மின்னுருவை" (தாண் - புள்ளி - வேளூர் -5) பார்க்க. இறைவன் ஐம்பூத குணங்களில் விளங்கும் நிலையும், எட்டு மூர்த்தியாய் நிற்கும் நிலையும் போற்றப்பட்டன. - (4) சங்கை - மயக்கம். ஐயத்தால் நிகழும் கடை. "சங்கோத்தர விருத்தி". - மதி - மாசுணம் - பகைப் பொருள்கள். - (6) கண்ணவன் - காட்டு முபகாரம் செய்பவன். - (7) உண்டான் - உண்ணுதல் - ஊழியில் தன்னுள் ஒடுக்கும் செயல்; உமிழ்ந்தான் - உமிழ்தல் - அவற்றை மீளவும் தன்னிடத்தினின்றும் உளவாக்கும்செயல்; உபசாரம். "ஒடுங்கி மலத்துளதாம்" (சிவஞான போதம் - 1 - சூத்). - (9) மூவர் - திரிபுரங்களில் இருந்த அன்பர் மூவர். முப்புரமெரித்தபோது. இவர்கள் எரியாமல் உய்ந்தவர்கள். தலையான் - தலைமையுடையோன். "மூவ ருயிர்வாழ முப்புரமு நிறாக, ஏவர் பொருதா ரிமையோரில்" என்றபடி கண்ட இறைமை. கலை - மான்கன்று. - (10) பொழிலான் - பொழில் - உலகங்கள். "ஏழுடையான் பொழில்". தலவிசேடம் :- கற்குடி - காவிரிக்குத் தென்கரையில் 4-வது தலம். மலைக்கோயில். உய்யக் கொண்டான்மலை என வழங்குவர். ஈழத்தரசன் பூசித்துப் பேறுபெற்ற தலம். குடமுருட்டி யாற்றுக்கு மேற்கில் உள்ளது. (திருக்காட்டுப் பள்ளியில் பிரியும் குடமுருட்டி வேறு). சுவாமி - விழுமியாநாதர்; உச்சிநாதர்; கற்பகநாதர்; அம்மை - அஞ்சனாட்சி; அம்மை சந்நிதிகள் - 2. பதிகம் - 2.) இது திருச்சி சந்திப்பு நிலையத்தினின்று வடமேற்கில் 1 நாழிகையில் உள்ளது. திருச்சி கோட்டை நிலையத்தினின்று மேற்கே 3 நாழிகையாளவில் அடையலாம். (கற்சாலை வழி.) |