பக்கம் எண் :


518திருத்தொண்டர் புராணம்

 

திருப்பராய்த்துறை

திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

கரப்பர் கால மடைந்தவர் தம்வினை, சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரக்கு நீர்வரு காவிரித் தென்கரைத், திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.

1

தொண்டு பாடியுந் தூமலர் தூவியும், இண்டை கட்டி யிணையடி யேத்தியும்,
பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக், கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத் திருப்பராய்த் துறைச் செல்வனார். அன்பரா யிருப்பாரை அறிவர்; அவரை அடியேன் சென்று கண்டுகொண்டு உய்ந்து போவன்; அவரைத் தொழுதெழுந் துய்ம்மின்; அவரை அடையில் வினைபோயறும்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) காலமடைந்தவர் - காலத்தில் வந்தடைந்தவர்கள். "காலமுண்டாகவே காதல் செய்துய்ம்மின்" (திருவா). வினை - கரப்பர்; சுருக்குமாறு வல்லார் - என்க. பரப்பு நீர்வரு - இங்குக் காவிரி மிக அகலமாகப் பரவிச்செல்வது குறிப்பு. "அகன்ற காவேரி" என வழங்குவர்; "பரக்கு நீர்ப் பொன்னி" (11) என்பதுமிது. செல்வர் - சுவாமி பெயர் - 2, 3, 4, 6, 9பாட்டுக்களிலும் இப்பெயர் போற்றப்பட்டது காண்க. "செல்வர் பராய்த்துறை" (பிள்ளையார் - தேவா). "நலங்கொள் செல்வத் திருப்பராய்த்துறை " (1567) என்று ஆசிரியர் காட்டிய குறிப்புமிது. தென்கரை - காவிரிக்குத் தென்கரையிலும் வடகரையிலுமாகத் தலங்களை வரிசைப் படுத்திப் பகுக்கும் வழக்குக் குறிப்பு. பராய்த்துறை - பராய்மரம் தலமரமாதலின் இப்பெய ரெய்திய தென்பர். "வன்பராய்முரு டொக்குமென் சிந்தை" (திருவா). - (2) தென் - காவிரிக்குத் தென்கரை. இயற்கை யடைமொழி. அழகுடைய என்றலுமாம். - (3) பட்ட நெற்றியர் பான்மதிக் கீற்றினர் - பட்டங் கட்டிய நெற்றிய போலப் பிறையை வைத்தவர்; இட்டமா யிருப்பார் - அன்பு பூண்டொழுகுபவர். - (4) "அன்பரா யிருப்பார்" - (9) "விருப்பரா யிருப்பார்" என்றவையு மிக்கருத்து. அறிவரே - அறிவர். அருளுவர் என்ற பொருளில் வந்தது. - (5) தாதொடுபோது - புதுமலர். வாதை - பாசத்தால் வரும் நலிவு. - (7) மார்பின்நூல் பொருப்பு அராவி இழிபுனல் போன்றது - மார்பில் பூணுநூல் வந்து மேல் கீழாகத் தங்கிய தோற்றம் மலையில் வளைந்து தவழும் அருவி நீர் போன்றது. - (8) எக்கர் - திடல். இடுமணல் - வெள்ளத்தால் சேர்த்திடப்பட்ட மணல். - (9) மருப்பு அராய் - கொம்பை அராவி. - (10) பண்ரங்கம் - இறைவன் கூத்து. "பண்டரங்க வேடத்தான்" (தேவா.) கலித்தொகைக் கடவுள் வாழ்த்து, நச்சினார்க்கினியர் உரை பார்க்க.

தலவிசேடம் :- திருப் பராய்த்துறை - காவிரிக்குத் தென்கரையில் 3-வது தலம். இந்திரன், ஏழு இருடிகள், குபேரன் பூசித்த தலம். அகன்ற காவேரித்துறை என்பது பதிகத்துப் போற்றப்பட்டது. சுவாமி - பாய்த்துறை நாதர், செல்வர்; அம்மையார் - பொன்மயிலம்மையார்; தீர்த்தம் - அகன்ற காவிரித்துறை; மரம் - பராய்; பதிகம் 2.

எலமனூர் என்ற புகைவண்டி நிலயத்தினின்றும் வடமேற்கே கற்சாலைவழி ஒரு நாழிகை யளவில் இதனை அடையலாம். இதன் அணிமையில் இப்போது திருப்பராய்த்துறை வண்டி நிற்மிகுடம் (Train Halt) ஒன்று புதியதாய். அமைத்துள்ளார்கள். (திருப்பளாத்துறை என்று வழங்குவது பிழை.)