பக்கம் எண் :


530திருத்தொண்டர் புராணம்

 

II திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

ஒதிமா மலர்க டூவி யுமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே.

1

உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்
பெருவினைப் பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
வருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடிலேனே.

3

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- உமையவள் பங்கா! அமரர்கோவே! கொன்றைக் கடவுளே!, உலகுக் கெல்லாம் பெருவினைப் பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான்! வாமதேவா! கால காலா!, எட்டுத்திசை யொளி யுருவமானாய்!, அணி அண்ணா மலையுளானே! உன் பாதத் திறமல்லால் வேறு பற்றும், நினைவும், திறமும் இல்லேன்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- நின்னை யல்லால் ஓதி மாமலர்கள் தூவி நினையுமா நினைவிலேன் - என்று கூட்டுக. ஓதி - என்பது வாயினாலும், மலர்கள் தூவி - என்பது உடலாலும். நினைவு - மனத்தாலும் செய்யும் பணிகள். முக்கரணங்களாலும் உன் பணியே செய்வேன். அமரர்கோ - மாலயற் கரிதாய் நீண்ட தலசரிதக் குறிப்பு. "அமரர்கோவே" - (2); "அண்டர்கோவே" - (3); "அமரர் ஏத்தும்" (5, 10) "மாலு நான்முகனுங் கூடிக் காண்கிலர் வகையுள் நின்றாய்" (9); என்றவையும் காண்க. நினையுமா - நினையும் ஆறு. ஆறு - கடை குறைந்து ஆ என நின்றது. நினைவிலேனே - வேறு நினைவில்லேன். மேல் (4) - (5) பாட்டுக்கள் பார்க்க. அணி அண்ணா மலையுளாய் - தொழும்பர்க்கு அணியையாயும், தொண்டு செய்யாத தேவர் முதலிய ஏனையோர்க்கு அண்ணாதாராயும் உள்ள மலையே. "அண்ணாமலை மேல அணிமலையை" (1578) என்று ஆசிரியர் இதனை விளக்கினர். இவ்வாறன்றி இப்பதிகத்தை இத்திருமலையில் மேற்கில் உள்ள " அணி அண்ணாமலையார்" என்ற தலத்துக் குரியதாகக் கொள்வாருமுண்டு. - (2) கொன்றைக் கடவுள் - கொன்றையைச் சிறப்படையாளமாகவுடைய கடவுள். சொல்லுமா சொல்லிலேனே - சொல்லுமாறு சொல் இல்லேன். - (3) உருவமும்...நின்ற - இறைவர் உலகெலாமாகி நின்ற நிலை. நின்ற - நின்ற திருத்தாண்டகமும், திருவுருத்திரமும் காண்க. "உலகெலா மாகி வேறாய் உடனுமாய்" (சித்தியார் - 2.1) என்ற ஞானசாத்திரம் இக்கருத்தை விளக்குதல் காண்க. உருவமும்...ஒதிய உலகு - உருவப் பொருள்களாகிய சடமாகவும், உருவமில்லாத உயிராகவும் பாகுபடுத்திச் சொல்லப்பட்டுச் சடசித்துக்களின் சமூகமாகிய உலகம். வினைப் பிறப்பு - வினைக்கீடாகிய பிறப்பு. இறைவர், பிறப்பு வீடாய் நிற்றலாவது வினைக்கேற்ற படி உயிர்களுக்குப் பிறவியும் வீடும் தந்து உடனே நிற்பவர். "பந்தமும் வீடும் பரப்புகின்றீர்" (விருத்தம் - வீழி); "பந்தம் வீடு தரும் பரமன்" (300) என்றதும், உரையும் பார்க்க. மாடு - செல்வம். - (5) வாமதேவா - இறைவரது ஐம்முகங்களுள் வடக்கு நோக்கியிருக்கும் திருமுகம் பற்றி விளித்த அரிய சில இடங்களுள் ஒன்று. "வாமதேவன் வளநகர்." (கால பாரா குறுந் - 6). - (6) அரிகுலம் - சிங்கம் முதலியன, "அட்ட மாளித் திரள் வந் தணையு மண்ணா மலையாரே" (பிள் - தக்கேசி - 10). - (7). இரவியும்...ஒளி உருவமானாய் - இறைவனது அட்ட மூர்த்தம். இங்கு அழற்றூணாய் நின்ற தன்மை நோக்கி