திருவுலகு அவர்களறிதற்கரிது எனப்பட்டது. திருவுலகு என்றது அதன் தன்மையும் பெருமையும் குறித்தது. அண்டரும் எனச் சிறப்பும்மை தொக்கது. முதலாம் அவை ஏந்தி - திருப்பணி செய்தற்குரிய உழவாரம் முதலிய ஏனைப் பொருள்கள். எதிர்கொள்ளச் சென்ற தொண்டர்கள் சரியை முதலிய பல நெறியினும் நிற்பவர்களாதலின் அவ்வவரும் திருவேடப் பொலிவுடன் தாந்தாம் செய்யும் திருத்தொண்டின்சாதனங்களை ஏந்திச் செல்லுதலும் தகுதி. இண்டை...அன்பர் - திருநாவுக்கரசர். தாம் எதிர்கொள்ளச் சென்ற சொல்லுக்கரசராகிய - அந்த - அன்பர் என்று கூட்டுவிரித்துக் கூட்டிக்கொள்க. குலவும் வேட்கை - என்பதும் பாடம். 320 1586. | எதிர்கொண்டிறைஞ்சுஞ் சீரடியார் தம்மை யிறைஞ்சி யெழுந்தருளி, மதில்கொண் டணிந்த காஞ்சிநகர் மறுகுட் போந்து வானநதி, குதிகொண் டிழிந்த சடைக்கம்பர் செம்பொற் கோயில் குறுகினார், அதிர்கொண் டலைநேர் மணிமிடற்றாராண்ட திருநாவுக்கரசர், |
321 1587. | திருவா யிலினைப் பணிந்தெழுந்து செல்வத் திருமுன் றிலையணைந்து கருவார் கச்சி யேகம்பர் கனக மணிமா ளிகைசூழ்ந்து வருவார் செம்பொன் மலைவல்லி தழுவக் குழைந்த மணிமேனிப் பெருவாழ் வினைமுன் கண்டிறைஞ்சிப் பேரா வன்பு பெருகினார்; |
1588. | வார்ந்து சொரியுங் கண்ணருவி மயிர்க்கா றோரும் வரும்புளகம் ஆர்ந்த மேனிப் புறம்பலைப்ப, வன்பு கரைந்தென் புள்ளலைப்பச், சேர்ந்த நயனம் பயன்பெற்றுத் திளைப்பத், திருவே கம்பர்தமை நேர்ந்த மனத்தி லுறவைத்து நீடும் பதிகம் பாடுவார், |
323 வேறு 1589. | "கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானை" யென்றெடுத்துப் பரவாய சொன்மாலைத் திருப்பதிகம் பாடியபின் விரவார்தம் புரமெரித்த விடையவனார் வெள்ளையெயிற் றரவாரம் புனைந்தவர்தந் திருமுன்றிற் புறத்தணைந்தார், |
324 குறிப்பு :- திருநாவுக்கரசர் என்ற எழுவாயைப் பாட்டி னிறுதியில் வைத்தது மன்றி, மேல்வரும் பாட்டுக்களின் வினைகளும் அந்த எழுவாயினையே தழுவி முடிக்க வைத்தமை பற்றி இந்நான்கு திருப்பாட்டுக்களும் ஒரு முடிபாகக் கொள்ளப்பட்டன. 1586. (இ-ள்.) அதிர்....திருநாவுக்கரசர் - அதிரும் மேகம்போன்ற மணிகண்டராகிய பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட திருநாவுக்கரசர்; எதிர்கொண்டிறைஞ்சும்....எழுந்தருளி - தம்மை எதிர்கொண்டு வணங்கிய சிறப்புடைய அடியார்களைத் தாமும் வணங்கி மேலே எழுந்தருளி; மதில்....போந்து - மதில் சூழ்ந்த அழகிய காஞ்சிமா நகரத்தின் திருவீதியினுள் போந்து; வானநதி....குறுகினார் - ஆகாய கங்கை குதித்து வழியும் சடையினையுடை திருவேகம்பருடைய செம்பொற் கோயிலை வந்தடைந்தனராகி; |